TA/Prabhupada 0094 - நம்முடைய வேலை கிருஷ்ணரின் வார்த்தைகளை மீண்டும் மீண்டும் ஒப்புவித்தலாகும்



Lecture on BG 1.20 -- London, July 17, 1973

பாவங்கள் நிறைந்த வாழ்க்கையில் கடவுளைப் பற்றி விசாரிக்கவோ, அவரை புரிந்துகொள்ளவோ முடியாது. நாம் பலமுறை இந்த சுலோகத்தை கூறியிருக்கிறோம், யேஷாம் த்வ அந்த-கதாம் பாபம் ஜனானாம் புண்ய-கர்மணாம் தே த்வந்த்வ-மோஹ-நிர்முக்தா பஜந்தே மாம் த்ருட-வ்ரதா: (பகவத் கீதை 7.28). அதாவது பாவிகளால் புரிந்துகொள்ள முடியாது. அவர்களுக்கு புரிந்ததெல்லாம் இவ்வளவு தான், "கிருஷ்ணர் பகவான்; ஆக நானும் பகவான். அவர் ஒரு சாதாரண மனிதர், ஓரளவுக்கு சக்திவாய்ந்தவர், வரலாற்றில் ஒரு புகழ்பெற்றவர். ஆக இறுதியில் அவர் ஒரு மனிதர் தான். நானும் மனிதன் தான். அப்படியென்றால் நான் ஏன் கடவுள் கிடையாது?" இதுதான் அபக்தர்கள் மற்றும் பாவிகளின் இறுதி முடிவு. ஆக, யாராவது தன்னை பகவான் என்று பிரகடனம் செய்தால், உடனேயே, அவர் ஒரு மகாபாவி என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் அவனுடைய அந்தரங்க வாழ்க்கையை ஆராய்ந்தால், அவன் ஒண்ணாநம்பர் மகாபாவி என்பதை நீங்கள் தெரிந்துக் கொள்ளலாம். இது தான் சோதனை. இல்லாவிட்டால் ஒருவரும் நான் தான் கடவுள் என்று கூறமாட்டார். இது பொய் வேடம், ஏமாற்றுவேலை. ஒருவரும் அப்படி செய்யமாட்டார். நல்ல உள்ளம் கொண்ட எந்த மனிதனும் அப்படி கூறமாட்டான். அவனுக்குத் தெரியும். "நான் யார்? நான் ஒரு சாதாரண மனிதன். நான் எப்படி அந்த இறைவனுடைய இடத்தை ஏற்க்க முடியும்?" மேலும் அவர்கள் அயோக்கியர்கள் மத்தியில் புகழ்பெற்றவர்கள் ஆகிவிடுகிறார்கள். ஸ்ரீமத் பாகவதத்தில் கூறியிருப்பது போல், ஸ்வ-வித்-வராஹோஷ்ட்ர-கரைஹி (ஸ்ரீமத் பாகவதம் 2.3.19). அந்த வரி என்ன? உஷ்ட்ர-கரைஹி ஸம்ஸ்துத: புருஷ: பஷுஹு. இந்த உலகில் நாம் பார்க்கிறோம், பல புகழ்பெற்ற நபர்கள் இருக்கிறார்கள், மேலோட்டத்தில் மட்டுமே பெரிய மனிதர்கள், மற்றும் பொது மக்களும் அவர்களை நிறைய பாராட்டுவார்கள். எனவே பாகவதம் கூறுவது என்னவென்றால், பக்தனாக இல்லாதவன் யாராக இருந்தாலும் சரி, ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜெபிக்காதவன், அவன் அயோக்கியர்களின் கணிப்பில் மிகவும் சிறந்தவனாக இருக்கலாம், ஆனால் அவன் ஒரு மிருகத்தை தவிர வேறொன்றுமில்லை. மிருகம். ஆக, ஸ்வ-வித்-வராஹ-உஷ்ட்ர-கரைஹி. "இவ்வளவு பெரிய நபரை நீங்கள் எப்படி மிருகம் என்று அழைக்கலாம்." என ஒருவர் கூறலாம். எங்களுடைய வேலை நன்றியை எதிர்பார்க்க முடியாத வேலை. பக்தனாக இல்லாத எவனும், ஒரு அயோக்கியன் என்பது தான் நம் கருத்து. பொதுவாக அது தான் நம் கருத்து. அது மிகவும் கடுமையான வார்த்தை, ஆனால் நாம் அதை பயன்படுத்த வேண்டியிருக்கிறது. ஒருவன் கிருஷ்ணருடைய பக்தன் அல்ல என்பதை அறிந்தாலே போதும், அவன் ஒரு அயோக்கியன். அதை எப்படி சொல்வது? அவன் நமக்கு எதிரி கிடையாது, ஆனால் சொல்லித்தான் ஆகவேண்டும், ஏனென்றால் கிருஷ்ணர் அப்படி சொல்லியிருக்கிறார். நாம் உண்மையிலேயே கிருஷ்ண உணர்வுடையவராக இருந்தால், கிருஷ்ணருடைய சொற்களை அப்படியே ஒப்பிப்பது தான் நம்முடைய கடமை. அவ்வளவுதான். கிருஷ்ணருடைய பிரதிநிதிக்கும் பிரதிநிதியாக இல்லாதவனுக்கும் என்ன வித்தியாசம்? கிருஷ்ணரின் பிரதிநிதியானவன் கிருஷ்ணர் சொன்னதை எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே சொல்லுவான். அவ்வளவுதான். அவன் ஒரு பிரதிநிதி என்ற தகுதியை பெறுகிறான். அதற்கு அவ்வளவு தகுதி எதுவும் தேவையில்லை. நீங்கள் வெறும் உறுதியான நம்பிக்கையுடன் அப்படியே ஒப்பித்தால் போதும். கிருஷ்ணர் கூறியது போல், ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ (பகவத் கீதை 18.66). ஆக, "நான் கிருஷ்ணரிடம் சரணடைந்தால் என் கடமையை நான் வெற்றிகரமாக நிறைவேற்றினேன்," என்ற உண்மையை யாரொருவன் ஏற்றுக் கொண்டிருக்கிறானோ, அவன் தான் கிருஷ்ணருக்கு பிரதிநிதி. அவ்வளவுதான். நீங்கள் அதிகம் படித்தவராகவோ ஒரு அறிஞராகவோ இருக்க தேவையில்லை. நீங்கள் வெறும் கிருஷ்ணர் கூறியதை ஏற்றுக் கொண்டால்... எப்படி என்றால், அர்ஜுனர் கூறுகிறார், ஸர்வம் ஏதம் ருதம் மன்யே யத் வதஸி கேஷவ: (பகவத் கீதை 10.14). "என் அன்புக்குரிய கிருஷ்ணா, கேஷவா, தாங்கள் கூறியதை நான் அப்படியே, மாற்றமின்றி ஏற்றுக்கொள்கின்றேன்." அதுதான் பக்தன். எனவேதான் அர்ஜுனர் பக்தோ (அ)'ஸி என அழைக்கப்படுகிறார். இதுதான் ஒரு பக்தனின் கடமை. நான் ஏன் கிருஷ்ணரை என்னைப் போல், ஒரு சாதாரண மனிதனாக எண்ண வேண்டும்? இதுதான் பக்தனுக்கும், பக்தனாக இல்லாதவனுக்கும் இடையில் உள்ள வித்தியாசம். ஒரு பக்தனுக்கு தெரியும், "நான் வெறும் கிருஷ்ணருக்கு சொந்தமான ஒரு சிறு பொறி. கிருஷ்ணர் ஒரு தனி நபர். நானும் ஒரு தனி நபர். ஆனால் அவருடைய சக்தியையும் என்னுடைய சக்தியையும் ஓப்ப்பிட்டுப் பார்க்கும் போது, நான் மிகவும் அற்பமானவன்." கிருஷ்ணரை இப்படி புரிந்துகொள்ளலாம். இதில் கஷ்டமே இல்லை. ஒருவன் வெறும் உறுதியாக இருந்தால் போதும், படுபாவியாக இருக்கக்கூடாது. ஆனால் ஒரு பாவியால் அவரை புரிந்துகொள்ள முடியாது. பாவியானவன் சொல்வான், "ஓ, கிருஷ்ணரும் ஒரு மனிதர் தான். நானும் மனிதன் தான். நான் ஏன் கடவுளாக இருக்கக்கூடாது? அவர் சும்மா அப்படியே கடவுளா? இல்லை, நானும் தான். நான் கடவுள். நீயும் கடவுள், நீயும் கடவுள், அனைவரும் கடவுள்." விவேகானந்தர் அப்படித்தான் கூறினார், "நீங்கள் ஏன் இறைவனை தேடிக் கொண்டிருக்கிறீர்கள்? பல கடவுள்கள் தெருவில் திரிகிறார்களே உங்களுக்கு தெரியவில்லையா?" புரிகிறதா. இதுதான் அவருடைய மெய்ஞ்ஞானம். அவர் கடவுளை உணர்ந்தது அவ்வளவு தான். அது மட்டுமில்லாமல் அவருக்கு பெரிய மனிதர் என்ற புகழ் வேறு: "ஓ, அவர் அனைவரையும் கடவுளாக பார்க்கிறார்." இந்த முட்டாள்தனம், இந்த அயோக்கியத்தனம், உலகம் முழுவதும் நடந்துக் கொண்டிருக்கிறது. கடவுள் என்றால் என்ன, அவருடைய சக்தி என்ன, கடவுள் என்பதன் பொருள் என்ன, என்பதை ஒருவரும் அறிவதில்லை. அவர்கள் ஏதோ ஒரு அயோக்கியனை கடவுளாக ஏற்றுக் கொள்கிறார்கள். இப்போதெல்லாம் அதுதான் நடந்துக் கொண்டிருக்கிறது. இன்னொரு அயோக்கியனும் வந்திருக்கிறான். அவனும் தன்னைத் தானே கடவுளாக பிரகடனம் செய்கிறான். ஆக இதற்கு மதிப்பே இல்லாமல் போய்விட்டது. ஆனால், "நான் கடவுள் என பிரகடனம் செய்கிறேனே; எனக்கு அப்படி என்ன தெய்வசக்தி இருக்கிறது?" என்பதை யோசித்து பார்க்க அவர்களுக்கு புத்தியே இல்லை. ஆக இதுதான் அந்த மர்மம். இதுதான் அந்த மர்மம். ஒரு பக்தன் ஆகாமல், கடவுளை எப்படி புரிந்துகொள்வது என்ற இரகசியத்தை அறிவது சாத்தியமே இல்லை. மேலும் கிருஷ்ணர், பகவத்-கீதையில், ஒருவன் எவ்வாறு அவரை அறியலாம் என்பதை கூறியிருக்கிறார். பக்த்யா மாம் அபிஜானாதி யாவான் யஷ் சாஸ்மி தத்வத: (பகவத் கீதை 18.55). வெறும், பக்தியால் மட்டுமே தான். அவர் கூறியிருந்திருக்கலாம், "உயர்ந்த அறிவினால்" அல்லது "யோக முறைகளால்" அல்லது "ஒரு பெரிய கர்மி, உழைப்பாளி ஆகி ஒருவர் என்னை புரிந்துக் கொள்ளலாம்." இல்லை, ஆனால் அவர் அப்படி சொல்லவில்லை, ஒருபோதும் சொல்லவில்லை. ஆக இந்த கர்மீகள், ஞானிகள், யோகிகள், அவர்கள் அனைவரும் அயோக்கியர்கள். அவர்களால் கிருஷ்ணரை புரிந்துகொள்ள முடியாது. அனைவரும் அயோக்கியர்கள். கர்மீகள் மூன்றாம்-மட்ட அயோக்கியர்கள், ஞானிகள் இரண்டாம்-மட்ட அயோக்கியர்கள், மேலும் யோகிகள் முதல்-மட்ட அயோக்கியர்கள். அவ்வளவுதான்.