TA/Prabhupada 0096 - நாம் பாகவத என்னும் மனிதரிடமிருந்து கற்க வேண்டும்



Lecture on BG 13.4 -- Miami, February 27, 1975

நாம் யோசிப்பது எப்படியென்றால், "அமெரிக்கர், இந்தியர், இந்து, முஸ்லீம்." இவை அனைத்தும் நம் உள்ளத்தில் இருக்கும் அசுத்தம். நீங்கள் உங்கள் மனதை தூய்மைப்படுத்துங்கள். ஹ்ருதி அந்த:-ஸ்த: அபத்ராணி. இந்த அசுத்தங்கள் என் உள்ளத்தில் இருக்கின்றன, ஆக நாம் நம் உள்ளத்தை தூய்மைப்படுத்தினால், நாம் இத்தகைய பௌதிக அடையாளங்களிலிருந்து விடுபடுகிறோம். நஷ்ட-ப்ராயேஷூ அபத்ரேஷூ நித்யம் பாகவத சேவயா (ஸ்ரீமத் பாகவதம் 1.2.8). நஷ்ட-ப்ராயேஷூ. நாம் ஒழுங்குமுறையாக ஸ்ரீமத் பாகவதம் அல்லது பகவத்-கீதையை கேட்டு வந்தால், இந்த அசுத்தங்கள், தூய்மைப்படுத்தப்படும். நித்யம் பாகவத... மேலும் பாகவத என்றால் பாகவத எனும் புத்தகம் மற்றும் பாகவத எனும் நபர். பாகவத என்ற அந்த நபர், ஆன்மீக குரு ஆவார். அல்லது எந்த ஒரு சிறந்த பக்தராகவும் இருக்கலாம். அவர் தான் பாகவதர், மஹா-பாகவதர். ஆக பாகவத-சேவயா என்றால் பகவத்-கீதையையும் பாகவதத்தையும் படிப்பது மட்டுமல்ல, ஆனால் நாம் பாகவத என்னும் நபரிடமிருந்து கற்கவும் வேண்டும். அதுதான் தேவை. சைதன்ய மஹாபிரபு அறிவுறுத்துகிறார், பாகவத பரா கியா பாகவத-ஸ்தானெ: அதாவது, "நீங்கள் பாகவதத்தை கற்க வேண்டுமென்றால், மெய்ஞானத்தை உணர்ந்த பாகவத என்னும் அந்த நபரிடம் செல்லுங்கள்." இதையே தொழிலாக செய்பவரிடம் அல்ல. அது உங்களுக்கு உதவாது. தொழில்முறையாக உபந்நியாசம் செய்பவர் என்றால் - நான் கோயிலுக்குச் சென்று வருகிறேன், சர்ச்சுக்கு சென்று வருகிறேன், பிறகு மீண்டும் வாழ்க்கையின் அதே நரக வேதனைக்கு திரும்புகிறேன். அப்படி கிடையாது. மெய்ஞானத்தை உணர்ந்த, பாகவத என்னும் அந்த நபருடன் வெறும் தொடர்பு கொள்ளுங்கள் பிறகு அதே புத்தகத்தை, அதே அறிவை அவரிடமிருந்து கேட்டறியுங்கள். கிருஷ்ணரின் பிரதிநிதி. கிருஷ்ணர் கூறியது போல், தத் ஸமாஸேன மே ஷ்ருணு. மே ஷ்ருணு: "என்னிடமிருந்தோ அல்லது என் பிரதிநிதியிடமிருந்தொ கேட்டறிவாயாக. அப்போழுதே நீ நற்பயன் பெறுவாய்." ஆக இந்த மையங்கள் திறக்கப்பட்டதன் நோக்கம், துன்பங்களால் தவிக்கும் மக்களுக்கு ஒரு வாய்ப்பளிப்பது தான். அவர்கள் இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல, பல ஜென்மங்களாக தவிக்கிறார்கள். ஏய் ரூபே ப்ரம்மாண்ட ப்ரமிதே கோன பாக்யவான் ஜீவ குரு-க்ருஷ்ண-க்ருபாய பாய பக்தி-லதா-பீஜ (சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை 19.151) ஆக இது நம் கடமை, நாம் இந்த கடமையை கிருஷ்ணர் சார்பில் ஏற்றுக்கொண்டுள்ளோம். கிருஷ்ணர் நேரிலேயே கற்பிக்க வருகிறார். அவருடைய ஸ்ரீமத் பாகவதத்தை நம்மிடம் எப்படி ஒப்படைத்தாரோ அப்படித்தான். பிறகு அவருடைய பக்தர்களிடம், பொதுமக்களுக்கு அதை விளக்கும் பொறுப்பை ஒப்படைக்கிறார். நாங்கள் அதைச் செய்யத்தான் முயல்கின்றோம். நாங்கள் எந்த கருத்தையும் மாற்றி வழங்கவும் இல்லை அல்லது சொந்த கருத்துகள் எதுவும் உருவாக்கவும் இல்லை. ஒப்படைக்கப்பட்ட சொத்து ஏற்கனவே இருக்கிறது. நாங்கள் வெறும் ஒரு தூதனைப் போல் அதை விநியோகிக்கின்றோம். அவ்வளவு தான். நமக்கு அதில் சிரமமே கிடையாது. நாம் வெறும் பகவத் கீதையை, கிருஷ்ணரின் அறிவுரைகளை, உள்ளபடி வழங்கினாலே போதும், நம் கடமை முடிந்தது. நாம் கருத்துக்கள் எதையும் புதிதாக உருவாக்க தேவையில்லை, மேலும் எதையும் உருவாக்கும் அதிகாரமும் நமக்கு கிடையாது. வெளியே அப்படி பல நபர்கள் இருக்கிறார்கள். அவர்கள் புதுமையான கருத்துக்களை உருவாக்குவார்கள், புதுமாதிரியான தத்துவம் பேசுகிறார்கள். அனைத்தும் அர்த்தமற்ற சொற்கள். அது பயன் அளிக்காது. உண்மையான அறிவை பெற்றுக் கொள்ளுங்கள்.