TA/Prabhupada 0099 - கிருஷ்ணரால் எவ்வாறு அங்கீகரிக்கப்படுவது



Lecture on BG 13.4 -- Bombay, September 27, 1973

பல்வேறு குணங்கள் கொண்ட மனிதர்களை நாம் பார்க்கிறோம். அவர்கள் அனைவரும் ஒரே இடத்திலேயே இருக்கலாம், பம்பாயில் ஆகட்டும், அது எந்த நகரமாகவும் இருக்கட்டும், அதுபோலவே, எல்லா உயிர் வாழிகளும், ஒரே தரம் வாய்ந்தவர்கள் அல்ல. அவற்றில் சிலர் பௌதிக நர்குணத்தின் தொடர்பில் இருக்கிறார்கள், அவற்றில் சிலர் பௌதிக தீவிரகுணத்தின் தொடர்பில் இருப்பார்கள், இன்னும் சிலர் அறியாமையில் இருப்பார்கள். அறியாமையில் இருப்பவர்கள் நீரில் விழுந்தது போன்றவர்கள். நீரில் விழுந்த நெருப்பு முழுமையாக அணைந்துவிடும். மேலும் வைக்கோலில் ஒரு தீப்பொறி விழுந்தால், காய்ந்த புல்லை சாதகமாக்கிக் கொண்டு, நெருப்பு பற்றி எரியும். அது மறுபடியும் நெருப்பாக மாறிவிடும். அதுபோலவே நற்குணத்தில் இருப்பவர்களால் கிருஷ்ண உணர்வை சுலபமாக விழிப்பூட்ட முடியும். ஏனென்றால் பகவத்-கீதையில் கூறப்பட்டிருக்கிறது, யேஷாம் த்வ அந்த-கதம் பாபம். மக்கள் ஏன் இந்த கோயிலுக்கு வருவதில்லை? ஏனென்றால், அவர்களில் சிலர் ஆழ்ந்த அறியாமையில் இருப்பதால் தான். அதுதான் பிரச்சனை. ந மாம் துஷ்க்ருதினோ மூட: ப்ரபத்யந்தே நராதம: (பகவத் கீதை 7.15). அவர்களால் வர இயலாது. வெறும் பாவச் செயல்களில் ஈடுபட்டிருப்பவர்களால், இந்த கிருஷ்ண உணர்வின் மதிப்பை உணர முடியாது. அது சாத்தியமல்ல. ஆனால் இது அனைவருக்கும் வழங்கப்படும் ஒரு வாய்ப்பு. நாம் நல்லபடியாக பணிவுடன் கேட்கிறோம், "தயவு செய்து இங்கு வாருங்கள். தயவு செய்து..." இது கிருஷ்ணரின் சார்பில் நம்முடைய வேலை. கிருஷ்ணர் எப்படி நேரில் வந்து பகவத்-கீதையை போதித்து அனைவரையும் கேட்டுக் கொள்கிறாரோ அப்படி, ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் எகம் சரணம் வ்ரஜ (பகவத்-கீதை 18.66), அதுதான் நம் வேலை. ஆக கிருஷ்ணர் இதை மிகவும் பாராட்டுவார், "ஓ இவர்கள் என் சார்பில் செயல்புரிகிறார்களே. நான் அங்கு செல்ல வேண்டியதில்லை. அவர்கள் என் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்." நாம் எந்த பொறுப்பை ஏற்றிருக்கின்றோம் ? நாம் வெறும் மக்களிடம், "தயவுசெய்து கிருஷ்ணரிடம் சரணடையுங்கள்," என்று கேட்டுக் கொள்கிறோம். எனவேதான் நாம் அவருக்கு பிரியமானவர்கள் ஆகின்றோம். கிருஷ்ணர் கூறுகிறார், ந ச தஸ்மான் மனுஷ்யேஷூ கஷ்சின் மே ப்ரிய-க்ருத்தம: (பகவத் கீதை 18.69). கிருஷ்ணரால் எவ்வாறு அங்கீகரிக்கப்படுவது என்பது தான் நம் வேலை. ஒருவன் கிருஷ்ண உண்ர்வுடையவனாக மாறுகிறானா இல்லையா என்பதை பற்றி நாம் கவலைப் படவேண்டியதில்லை. நம் பொறுப்பு, பணிவுடன் விண்ணப்பிப்பது தான், "ஐயா, தயவுசெய்து எங்கள் மையத்திற்கு வாருங்கள், கிருஷ்ணரின் விக்கிரகத்தை பாருங்கள், நமஸ்காரம் செய்யுங்கள், பிரசாதம் எடுத்துக் கொள்ளுங்கள், பிறகு வீட்டிற்குச் சென்று வாருங்கள்." ஆனால் மக்கள் மறுக்கிறார்கள். ஏன்? இந்த பொறுப்பை பாவச் செயல்கள் நிறைந்த ஒருவரால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகையினால் கிருஷ்ணர் கூறுகிறார், யேஷாம் த்வ அந்த-கதம் பாபாம். தன்னுடைய பாவச் செயல்கள் முற்றிலும் நிறுத்திய ஒருவன். யேஷாம் த்வ அந்த-கதம் பாபாம் ஜனானாம் புண்ய-கர்மணாம். யாரால் பாவச் செயல்களிலிருந்து விடுபட முடியும்? எப்பொழுதும் தர்மத்தை கடைப்பிடிக்கும் ஒருவனால் முடியும். நீங்கள் எப்பொழுதும் தர்ம காரியங்களில் ஈடுபட்டிருந்தால், பாவச் செயல்களை புரியும் வாய்ப்பு எப்படி இருக்கும்? ஆக மிகச்சிறந்த தர்மம் என்பது ஹரே கிருஷ்ண மஹா மந்திர ஜெபம் ஆகும். நீங்கள் எப்பொழுதும், ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண, கிருஷ்ண என்று ஈடுபட்டிருந்தால், அதாவது உங்கள் மனம் எப்பொழுதும் கிருஷ்ண உணர்வில் ஈடுபட்டிருந்தால், பிறகு வேறு எந்த விஷயமும் உங்கள் மனதில் இடம் பெற முடியாது. இதுதான் கிருஷ்ண உணர்வின் செயல்முறை. நாம் கிருஷ்ணரை மறந்தவுடனேயே, மாயா அங்கு தோன்றுவாள், உடனே கவர்ந்து சிக்கவைப்பாள்.