TA/Prabhupada 0120 - கற்பனைக் கெட்டாத மனித அறிவுக்கு எட்டாத தெய்வசக்தி



Morning Walk At Cheviot Hills Golf Course -- May 17, 1973, Los Angeles

பிரபுபாதர்: நீ மொழிபெயர்த்துவிட்டாயா இல்லையா?

ஸ்வரூப தாமோதர: கற்பனைக்கெட்டாத?

பிரபுபாதர்: ஆம். கற்பனைக்கெட்டாத அல்லது மனித அறிவுக்கு எட்டாத.

ஸ்வரூப தாமோதர: மனித அறிவுக்கு எட்டாத தெய்வசக்தி.

பிரபுபாதர்: ஆம்.

ஸ்வரூப தாமோதர: ஸ்ரீலா பிரபுபாதர் விளக்கியதை நான் சும்மா சேகரித்துக் கொண்டிருக்கிறேன், வேறுபட்ட அஸிந்தய-ஸக்திஸ் நாம் பார்வையுற்றது.

பிரபுபாதர்: இங்கே அஸிந்தய-ஸக்தி வேலை செய்கிறது, இந்த மூடு பனி. இதை வெளியேற்ற உங்களுக்கு அதிகாரம் இல்லை. உங்கள் சக்திக்கு அப்பாற்பட்டது. நீங்கள் சில ஏமாற்று வார்த்தைகளால் அதை விளக்கலாம்....

வழிப்போக்கர்: காலை வணக்கம்

பிரபுபாதர்: காலை வணக்கம். ... அதாவது "இதுபோன்ற இராசாயனம், அணுமூலக்கூறு, இதுபோன்று இது, அது," அங்கே பல பொருள்கள் உள்ளன. ஆனால் (சிரித்துக் கொண்டு) உங்களுக்கு அதை வெளியேற்றும் அதிகாரம் இல்லை.

ஸ்வரூப தாமோதர: ஆம். மூடுபனி எவ்வாறு உருவானது என்று அவர்கள் ஒரு விளக்கவுரை வைத்திருக்கிறார்கள். அவர்கள் அதை கூறுகிறார்கள்..,

பிரபுபாதர்: அதை நீங்கள் செய்யலாம். அதாவது என்னாலும் செய்ய முடியும். அது ஒன்றும் பெரிய வரவு அல்ல. அதாவது அது எவ்வாறு வடிவம் எடுத்தது என்று தெரிந்தால், பிறகு அதை எதிரிடையாகச் செய்யுங்கள்.

ஸ்வரூப தாமோதர: அது எவ்வாறு வடிவம் எடுத்தது என்று எங்களுக்குத் தெரியும். அது எவ்வாறு வடிவம் எடுத்தது என்று எங்களுக்குத் தெரியும்.

பிரபுபாதர்: ஆம். அப்படியானால் உங்களுக்குத் தெரியும், பிறகு நீங்கள் எதிரிடையாகச் செய்து கண்டுபிடியுங்கள். எவ்வாறு என்றால் முன்பு, யுத்தக்களத்தில் ப்ரமாஸ்தர என்னும் அணு வீசப்பட்டது. மறு புறத்தில்.... ப்ரமாஸ்தர என்றால் மிகையான வெப்பமானது. ஆகையால் அவை ஏதோ ஒன்றை ஏற்படுத்தியது, அவை நீராக உருமாறியது. ஏனென்றால் வெப்பத்திற்கு பிறகு, அங்கே தண்ணீர் இருக்க வேண்டும். ஆகையால் எங்கே அந்த விஞ்ஞானம்?

ஸ்வரூப தாமோதர: அது பாலைப் போன்றது. பால் வெண்மையாக தெரிகிறது, ஆனால் அது வெறும் தண்ணீர்தான். அதை அவர்கள் கூறுவது, புரதப் பொருளின் தொங்குகின்ற கூழான பொருள், இவை தண்ணீரில் உறைபாலேடு போன்றது. ஆகையால் அதேபோல், இந்த மூடுபனி காற்றில் இருக்கும் தண்ணீரில் தொங்குகின்ற கூழான பொருள்.

பிரபுபாதர்: ஆம். அப்படியானால் நீங்கள் கொஞ்சம் நெருப்பை உருவாக்கிவிட்டீர்கள். அது உடனடியாக துரத்திவிடப்படும். தண்ணீர் நெருப்பால் விரட்டப்படும். ஆகையால் நீங்கள் உருவாக்குங்கள். அது உங்களால் முடியாது. நீங்கள் சும்மா ஒரு வெடிகுண்டு மட்டும் விடுங்கள். அங்கு கொஞ்சம் வெப்பம் ஏற்படும். மேலும் மூடுபனி அனைத்தும் போய்விடும். அதை செய்யுங்கள்.

கரந்தர: அது கோள்கிரகத்தை வெடிக்க வைத்துவிடும். (சிரிப்பொலி) அது கோள்கிரகத்தை வெடிக்க வைத்துவிடும்.

பிரபுபாதர்: ஹரே கிருஷ்ணா. தண்ணீரை நெருப்பாலும் காற்றாலும் எதிரிடையாகச் செய்யலாம். எல்லோருக்கும் இது தெரியும். ஆகையால் நீங்கள் அதைச் செய்யுங்கள், நிறுத்திவைத்தல். ஆகையால் இது உங்களுக்கு, மனித அறிவுக்கு எட்டாத சக்தி. நீங்கள் அனைத்து அர்த்தமற்ற சொற்களும் பேசலாம், ஆனால் அதற்கு எதிராக செயல்பட முடியாது. ஆகையினால் அது மனித அறிவுக்கு எட்டாதது. அதேபோல், அங்கே பல பொருள்கள் உள்ளன. அதுதான் அஸிந்தய-ஸக்தி. உங்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. இயற்கையின் வழியாக, உடனடியாக சூரியன் உதயமாகிறது - மூடுபனி இருக்காது. அனைத்தும் முடிவடைந்துவிடும். சூரியனின் வெப்பநிலை சிறிதளவு கூடியதால், அனைத்தும் முடிந்துவிடும்.

நீஹாரம் இவ பாஸ்கர:. இந்த உதாரணம் பாகவதத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. நீஹார, இதை நீஹார என்றழைக்கிறோம். எவ்வாறு என்றால் நீஹார உடனடியாக பாஸ்கராவால், சூரியனால் சிதறடிக்கப்படும், அதேபோல், ஒருவரால் தன்னுடைய முடங்கிருக்கும் பக்தியை விழிப்பூட்ட முடிந்தால், பிறகு அனைத்தும் முடிந்துவிடும், அவருடைய அனைத்து பாவச் செயல்களின் எதிர் நடவடிக்கை, முடிந்துவிடும்.

நீஹாரம் இவ பாஸ்கர:. நீங்கள் சும்மா உருவாக்குங்கள்... நீங்கள் கணக்கிடுகிறீர்கள் சூரியன் இந்த இரசாயனம் அந்த இரசாயனம்பல பாகங்கள் ஒருங்கினைந்தது என்று. சும்மா ஒரு சூரியனை உருவாக்கி தூரப் போடுங்கள். வெறுமனே எதிர்கால அறிவியலின்படி பொதுக்கோட்பாடு, வெற்று வேட்டும் மேலும் வார்த்தைகளை திரித்துக் கூறுவதும், அது நல்லதல்ல.

ஸ்வரூப தாமோதர: ஆராய்ச்சியின் அர்த்தம் அதுதான். ஆராய்ச்சி என்றால் முன்பு தெரியாதிருந்தவற்றை புரிந்துக் கொள்ள முயல்வது.

பிரபுபாதர்: ஆம். ஆராய்ச்சி என்றால் நீங்கள் எல்லோரும் முட்டாள்களும், அயோக்கியர்களும் என்று நீங்களே ஒப்புக்கொள்வது. ஆராய்ச்சி என்பது யாருக்காக? ஒன்றும் தெரியாத ஒருவருக்கு. இல்லையெனில் ஆராய்ச்சி என்கின்ற கேள்வி எங்கே? உங்களுக்கு தெரியாது. நீங்கள் அதை ஒப்புக்கொண்டீர்கள். ஆகையால் மனித அறிவுக்கு எட்டாத பல சக்திகள் அங்கே இருக்கின்றன. அவை எவ்வாறு செய்யப்படுகிறது என்று உங்களுக்குத் தெரியாது. ஆகையினால் நீங்கள் கற்பனைக் கெட்டாத சக்தியை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. மேலும் இந்த கற்பனைக் கெட்டாத சக்தியின் நெறிமுறையை ஏற்றுக் கொள்ளாவிட்டால், அங்கே கடவுள் என்பதற்கு அர்த்தமில்லை. அந்த பால-யோகீ கடவுளானது போல் அல்ல. ஆகையால் இது முட்டாள்களுக்கும், அயோக்கியர்களுக்கும் ஏற்றது. ஆனால் அறிவுடையவர்கள், அவர்கள் கற்பனைக் கெட்டாத சக்தியை சோதனை செய்து பார்ப்பார்கள். எவ்வாறு என்றால் நாம் கிருஷ்ணரை பகவானாக ஏற்றுக் கொண்டோம் - கற்பனைக் கெட்டாத சக்தியை. நாம் ராமரை ஏற்றுக் கொண்டோம் - கற்பனைக் கெட்டாத சக்தியை. மிக மலிவாக அல்ல. ஒரு அயோக்கியன் வந்து கூறினான், "நான் பகவானின் அவதாரம்." மற்றொரு அயோக்கியன் அதை ஆமோதித்தான். அது அவ்வாறு அல்ல. "ராமகிருஷ்ணர் பகவான் ஆவார்." நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. நாம் அந்த கற்பனைக் கெட்டாத சக்தியை பார்க்க வேண்டும். எவ்வாறு என்றால் கிருஷ்ணர், ஒரு குழந்தையாக, மலையை தூக்கினார். இது கற்பனைக் கெட்டாத சக்தியாகும். ராமசந்திர, அவர் தூண்கள் இல்லாமலே கற்கலாள் பாலம் அமைத்தார். கற்கள் மிதக்க துவங்கின்: "வாருங்கள்." ஆகையால் அதுதான் கற்பனைக் கெட்டாத சக்தி. இந்த கற்பனைக் கெட்டாத சக்தியை உங்களால் ஒத்துக் கொள்ள முடியாததால், அவை வர்ணிக்கப்படும் போது, நீங்கள் கூறுகிறீர்கள், "ஓ, இவை அனைத்தும் வெறும் கதைகள்." இதை எவ்வாறு கூறுவது? கற்பனைக் கதைகள். ஆனால் இந்த மிக உயர்ந்த சாதுக்கள், வால்மீகியும் வியாசதேவும் மேலும் மற்ற ஆச்சார்யர்கள், அவர்கள் வெறுமனே நேரத்தை கற்பனை கதைகள் எழுதுவதில் வீனடித்தார்களா? சிறந்த கற்ற கல்விமான்கள்? அவர்கள் கற்பனை பழங்கதை என்று மாற்றி எழுதவில்லை. அவர்கள் அதை உண்மையான சம்பவமாக ஏற்றுக் கொண்டார்கள். அங்கே காட்டுத்தீ வந்தது. அனைத்து நண்பர்களும் மாடுமேய்க்கும் பையன்களும் குழப்பம் அடைந்தனர். அவர்கள் கிருஷ்ணரை நோக்கிச் சென்றனர்: "கிருஷ்ண, என்ன செய்வது?" "சரியானதே," அவர் வெறுமனே நெருப்பை அப்படியே விழுங்கிணார். இதுதான் கற்பனைக் கெட்டாத சக்தி. அதுதான் பகவான். ஐஷ்வர்யஸ்ய சமகரஷ்ய வீர்யஸ்ய யஷாஸ்ய: ஷிரிய: (விஷ்ணு புராண 6.5.47). ஆறு செல்வச் சிறப்பும் நிறைந்திருந்தது. அவர்தான் கடவுள். கற்பனைக் கெட்டாத சக்தி அல்லது கடவுளை தியானத்தால் கண்டறியும் சக்தி, நம்மிடமும் இருக்கிறது. மிக சிறிய அளவில். ஆகையால் பல காரியங்கள் நம் உடலினுள் நடந்துக் கொண்டிருக்கிறது. நம்மால் விவரிக்க இயலாது. அதே உதாரணம். என் நகங்கள் மிகச் சரியாக அதே வடிவில் வளர்கின்றன. நோயினால் பழுதடைந்திருந்தாலும், மறுபடியும் வளர்கின்றது. என்ன இயந்திர சாதனங்கள் பணிப்புரிகின்றன என்று எனக்கு தெரியாது, நகம் வளர்கிறது, அனைத்தும் சரியாக பொருந்தும் நிலையில். அது என் உடம்பிலிருந்து வருகிறது. ஆகையால் அது மனித அறிவுக்கு எட்டாத சக்தி. எனக்கும் மருத்துவர்களுக்கும் அனைவருக்கும் மனித அறிவுக்கு எட்டாத சக்தியாக இருந்தாலும்.., அவர்களால் விவரிக்க முடியாது.