TA/Prabhupada 0123 - சரணடைய கட்டாயப்படுத்தினால் - அது ஒரு பெரும் பாக்கியமாகும்
Lecture-Day after Sri Gaura-Purnima -- Hawaii, March 5, 1969
பக்தர்: நம்முடைய நிலைமையின் காரணமாக, நாம் கிருஷ்ணரிடம் நம்மை அவரிடம் சரணடையும்படி கட்டாயப்படுத்த இரந்து வேண்டலாமா?
பிரபுபாதர்: ஆம், நீங்கள் அவரிடம் இரந்து வேண்டலாம். மேலும் அவர் சில நேரங்களில் கட்டாயப்படுத்துவார். வேறு வழியின்றி நீங்கள் கிருஷ்ணரிடம் சரணடையும் சூழ்நிலையை அவர் ஏற்படுத்துவார். ஆம். அது தனிபட்ட ஆதரவு. அது தனிபட்ட ஆதரவு. ஆம். என் ஆன்மீக குரு நான் சமயப் போதனை செய்ய வேண்டும் என்று விரும்பினார், ஆனால் எனக்கு அது பிடிக்கவிலை, ஆனால் அவர் என்னை கட்டாயப்படுத்தினார். ஆம், அது என்னுடைய நடைமுறை அனுபவம். எனக்கு சந்நியாசம் ஏற்றுக் கொண்டு மேலும் சமயப் போதனை செய்ய விருப்பம் இல்லை, ஆனால் என் ஆன்மீக குரு அதை விரும்பினார். எனக்கு அதில் அவ்வளவு விருப்பமில்லை, ஆனால் அவர் என்னை கட்டாயப்படுத்தினார். அதுவும் நடைப்பெற்றது. அது தனிபட்ட ஆதரவு. அவர் என்னை கட்டாயப்படுத்திய போது, அந்த நேரத்தில், நான் நினைத்தேன் அதாவது "என்ன இது? என்ன...? நான் எதாவது தவறான வாக்கு கொடுக்கிறேனா அல்லது இது என்ன?" நான் குழப்பமடைந்தேன். ஆனால் சிறிது நேரம் கழித்து, நான் புரிந்துக் கொண்டேன், அதாவது எனக்கு அளிக்கப்பட்டது ஒரு பெரும் பாக்கியம் என்று. நீங்கள் பாருங்கள்? ஆகையால் கிருஷ்ணர் யாரையாவது சரணடைய கட்டாயப்படுத்தினால், அது ஒரு பெரும் பாக்கியமாகும். ஆனால் பொதுவாக, அவர் அவ்வாறு செய்வதில்லை. ஆனால் கிருஷ்ணர் சேவையில் மிகவும் விசுவாசமாக இருக்கும் ஒருவருக்கு அவர் அவ்வாறு செய்வார். ஆனால் அதே நேரத்தில் அவனுக்கு ஜட இன்பத்தில் சிறிது விருப்பம் இருக்கு. அந்த தருணத்தில் அவர் செய்வது, அதாவது "இந்த மூடனுக்குத் தெரியவில்லை ஜட வசதிகள் அவனை சந்தோஷ்மடையச் செய்யாது என்று, மேலும் அவன் விசுவாசமுடன் என் ஆதரவை நாடுகிறான். ஆகையால் அவன் ஒரு முட்டாள். ஆகையினால் அவனிடம் ஏதாகிலும் வாய்ப்பு, சிறிய வாய்ப்பு ஜட பெருமகிழ்ச்சி இருந்தாலும், அதை முறியடித்துவிடும். பிறகு என்னிடம் சரணடைவதைத் தவிர அவனுக்கு வேறு மாற்று வழி இல்லாது போகும்." அது பகவத்-கீதையிலும், ஸ்ரீமத் பாகவதத்திலும் கூறப்பட்டுள்ளது. யஸ்யாஹம் அனுக்கிரிநாமி ஹரிஸ்யெ தத்-டனாம்ஸநை:. கிருஷ்ணர் கூறுகிறார் அதாவது "நான் யாருக்காவது தனிபட்ட ஆதரவு அளித்தால், பிறகு நான் அவரை வறுமையில் அடிப்பட வைப்பேன். அவருடைய புலன்களின் பெரு மகிழ்ச்சிக்கான அனைத்தையும் நான் எடுத்துவிடுவேன்." நீங்கள் பார்த்தீர்களா? அது ஸ்ரீமத் பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது. ஏனென்றால் இங்கு இந்த ஜட உலகில் அனைவரும் ஆனந்தமாக இருக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள், அதிகமாக சம்பாதிப்பதன் மூலம், வியாபாரம் மூலம், பணி புரிவதன் மூலம், இதன் மூலம் அதன் மூலம். ஆனால் தனிபட்ட வகையில், கிருஷ்ணர் அவருடைய வியாபாரம் அல்லது பணியை வெற்றி பெறாமல் செய்துவிடுவார். உங்களுக்கு அது விருப்பமா? (சிரிப்பு) அந்த நேரத்தில் கிருஷ்ணரிடம் சரணடைவதைவிட அவருக்கு வேறு மாற்றுவழி இல்லை. நீங்கள் பாருங்கள். ஆனால் சில நேரங்களில், நம் வியாபார முயற்சியில் அல்லது சம்பாதிக்கும் முயற்சியில் வெற்றி காணவில்லை என்றால், நாம் வருத்தம் அடைகிறோம் அதாவது "ஓ, கிருஷ்ணர் என்னிடம் மிகவும் குரூரமாக இருக்கிறார் என்னால் இதில் அவரை நம்ப முடியவில்லை." ஆனால் அது அவருடைய ஆதரவு, தனிபட்ட ஆதரவு. நீங்கள் அவ்வாறு புரிந்துக் கொள்ள வேண்டும்.