TA/Prabhupada 0127 - தான்தோன்றித்தனத்தினால் ஒரு பெரிய நிறுவனம் தோல்வியை தழுவியது
Lecture on SB 1.2.11 -- Vrndavana, October 22, 1972
பிறகு..., என் குரு மஹாராஜ் வழக்கமாக கூறுவார் "கிருஷ்ணரை பார்க்க முயற்சிக்காதீர்கள், ஏதோ ஒன்று செய்து கிருஷ்ணர் உங்களை பார்க்கும்படி செய்யுங்கள்" அதுதான் தேவைப்படுகிறது. ஒருவேளை கிருஷ்ணர், உங்களால் கிருஷ்ணரின் கவனத்தில் சிறிதளவு ஈர்க்க முடிந்தால், காருண்ய-கதாக்ஷ-வைபவ்வதாம், கதாக்ஷ-வைபவ்வதாம..., ப்ரபோடானந்த சரஸ்வதி கூறுகிறார், எப்படியாயினும் உங்களால் கிருஷ்ணரின் கவனத்தைச் சிறிதளவு ஈர்க்க முடிந்தால், உங்கள் வாழ்க்கை வெற்றிகரமாக அமையும். உடனடியாக. மேலும் எவ்வாறு உங்களால் ஈர்க்க முடியும்? பக்த்யா மாமபிஜானாதி (பகவத் கீதை 18.55). வெறுமனே கிருஷ்ணருக்கு சேவை செய்யுங்கள். சேவையை ஏற்றுக்கொள்ளுங்கள், ஆன்மீக குருவால் கட்டளையிடப்பட்டது போல், கிருஷ்ணருக்கு சேவை செய்வதை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனென்றால் ஆன்மீக குரு கிருஷ்ணரின் பிரதிநிதி ஆவார். நாம் கிருஷ்ணரை நேரடியாக அணுக முடியாது. யஸ்ய ப்ரஸாதாத் பகவத்-ப்ரஸாதோ. உங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குரு இருந்தால், கிருஷ்ணரின் பிரதிநிதி, இதுவும் மிக கடினமாக இருக்காது. அனைவரும் கிருஷ்ணரின் பிரதிநிதியாகலாம். எவ்வாறு? நீங்கள் வெறுமனே கிருஷ்ணரின் தகவலை எந்த கலப்படமும் இல்லாமல் நிறைவேற்றுங்கள். அவ்வளவு தான்.
எவ்வாறு என்றால் சைதன்ய மஹாபிரபு கூறியது போல், ஆமார ஆஜணாய குரு ஹணா (சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை 7.128), "என் கட்டளையின்படி நீங்கள் ஆன்மீக குருவாகுங்கள்." ஆகையால் சைதன்ய மஹாபிரபுவின், கிருஷ்ணர், கட்டளையை ஏற்றுக் கொண்டால், பிற்கு நீங்கள் குருவாகலாம். ஆமார ஆஜணாய குரு ஹணா. துரதிஷ்டவசமாக, நாம் ஆச்சார்யர்களின் கட்டளையை ஏற்றுக்கொள்ள விரும்புவதில்லை. நாம் நம் சொந்த முறைகளை உற்பத்தி செய்கிறோம். நமக்கு நடைமுறை அனுபவம் உள்ளது, தான்தோன்றித்தனத்தினால் எவ்வாறு ஒரு பெரிய நிறுவனம் தோல்வியை தழுவியது என்று. ஆன்மீக குருவின் கட்டளையை ஏற்று நடக்காததால், அவர்கள் ஏதோ ஒன்றை உற்பத்தி செய்து அனைத்து பொருளையும் இழந்தனர். ஆகையினால் விஸ்வநாத சக்ரவர்தி தாகூர ஆன்மீக குருவின் வார்த்தைகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறார். வ்யவஸாயாத்மிகா புத்திரேகேஹ குருநந்தன (பகவத் கீதை 2.41). நீங்கள் ஆன்மீக குருவின் கட்டளைக்கு ஏற்ப ஒரே நிலையிலிருந்தால், பிறகு, உங்களுடைய சொந்த செளகரியங்கள் அல்லது அசெளகரியங்களைப் பற்றி கவலைப்படாமல் இருந்தால், பிறகு நீங்கள் முழுமையடைவீர்கள்.
- yasya deve parā bhaktir
- yathā deve tathā gurau
- tasyaite kathitā hy arthāḥ
- prakāśante mahātmanaḥ
- (ŚU 6.23)
கிருஷ்ணரின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளின் கட்டளையை நாம் மிகவும் விசுவாசத்துடன் பின்பற்ற வேண்டும். பிறகு நம் வாழ்க்கை வெற்றிகரமாக அமையும். பிறகு நாம் கிருஷ்ணர் உண்மையுருவை புரிந்துக் கொள்ள முடியும். வதந்தி தத் தத்வ-விதஸ் தத்வம் (ஸ்ரீமத் பாகவதம் 1.2.11). நாம் தத்வ-வித்திடமிருந்து கேட்க வேண்டும், தவறான கல்விமான் மேலும் அரசியல்வாதிகளிடமிருந்து அல்ல. இல்லை. உண்மையை அறிந்த ஒருவரிடமிருந்து நீங்கள் கேட்டுக் கொள்ள வேண்டும். மேலும் அந்த கொள்கையுடன் நீங்கள் ஒரே நிலையிலிருந்தால், பிறகு நீங்கள் அனைத்தையும் மிகவும் தெளிவாக புரிந்துக் கொள்வீர்கள். மிக்க நன்றி.