TA/Prabhupada 0129 - கிருஷ்ணரை சார்ந்திருங்கள் - அங்கே பஞ்சமே இருக்காது



Lecture on SB 7.6.1 -- Vrndavana, December 2, 1975

கிருஷ்ணர் கூறுகிறார், மன்மனா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு (பகவத் கீதை 9.34). நாங்கள் இதை போதனை செய்துக் கொண்டிருக்கிறோம். இந்த கோயிலில் நாங்கள் எல்லோரையும் கேட்கிறோம், "கிருஷ்ணர் இங்கிருக்கிறார். எப்பொழுதும் கிருஷ்ணரை நினையுங்கள். ஹரே கிருஷ்ண ஜெபியுங்கள்." பிறகு நீங்கள் சிந்திக்க வேண்டும். "ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண," என்றால் கிருஷ்ணரைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பது. கிருஷ்ணரின் பெயரை கேட்ட உடனடியாக, மன்-மனா. மேலும் இதை யார் செய்வார்கள்? மத்-பக்த. நீங்கள் கிருஷ்ணர் பக்தர் ஆனால்தான், உங்கள் நேரத்தை நீங்கள் விரயம் செய்ய முடியாது, "கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண." அப்படியென்றால் வெறுமனே ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜெபித்தலினால் நீங்கள் ஒரு கிருஷ்ண பக்தராகிறிர்கள். மன்மனா பவ மத்பக்தோ மத்யாஜீ.

இப்போது , இந்த கிருஷ்ணர் வழிபாடு..., ஒரு நாள் முழுவதும் கிருஷ்ணரின் மங்கள-ஆர்த்திக்கு, கிருஷ்ண ஜெபத்திற்கு ஈடுபடுத்தப்படுகிறது, கிருஷ்ணருக்கு சமைக்க, கிருஷ்ண பிரசாதம் பகிர்ந்தளிக்க, இன்னும் பல வழிகள். ஆகையால் எங்கள் பக்தர்கள் உலகமெங்கிலும் - அங்கே 102 மையங்கள் உள்ளன - அவர்கள் வெறுமனே கிருஷ்ண உணர்வில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதுதான் எங்கள் பிரச்சாரம், எப்போதும், வேறு தொழில் இல்லை. நாங்கள் எந்த தொழிலும் செய்வதில்லை ஆனால் நாங்கள் குறைந்தது இருபத்தைந்து லட்சம் ரூபாய் செலவு செய்கிறோம். இருபத்தைந்து லட்சம் ரூபாய் ஒவ்வொரு மாதமும், ஆனால் கிருஷ்ணர் வழங்கிக் கொண்டிருக்கிறார். தேஷாம் நித்யாபியுக்தானாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம் (பகவத் கீதை 9.22). நீங்கள் கிருஷ்ண உணர்வோடு இருந்தால், முழுமையாக கிருஷ்ணரை சார்ந்திருந்தால், பிறகு அங்கே பஞ்சமே இருக்காது. நான் இந்த கிருஷ்ணர் தொழிலை நாற்பது ரூபாயோடு ஆரம்பித்தேன். இப்போது எங்களுக்கு நாற்பது கோடி ரூபாய் இருக்கிறது. இந்த உலக முழுவதிலும் பத்து வருடங்களுக்குள் நாற்பது ரூபாயை நாற்பது கொடியாக்கக் கூடிய தொழில் அதிபர் யாராவது இருக்கிறார்களா? அதற்கு உதாரணம் இல்லை. மேலும் பத்தாயிரம் பேர், அவர்கள் தினமும் பிரசாதம் சாப்பிடுகிறார்கள். ஆகையால் இதுதான் கிருஷ்ண உணர்வு. யோகக்ஷேமம் வஹாம்யஹம் (பகவத் கீதை 9.22). நீங்கள் கிருஷ்ண உணர்வில் சேர்ந்த உடனடியாக, நீங்கள் வெறுமனே கிருஷ்ணரை சார்ந்திருங்கள் மேலும் விசுவாசமுடன் வேலையை செய்யுங்கள் அதன் பிறகு கிருஷ்ணர் அனைத்தையும் அளிப்பார். அனைத்தையும்.

ஆகையால் இது நடைமுறையில் தெளிவாக புலப்படுகிறது. மாநிலம், உதாரணத்திற்கு, பம்பாயில், தற்போது நிலத்தின் மதிப்பு ஒரு கோடி ரூபாய். ஆனால் நான் இந்த நிலத்தை வாங்கியபோது என்னிடம் இருந்தது, ஒரு வேளை மூன்று அல்லது நான்கு லட்சம். ஆகையால் இது முழுமையாக ஊகம்தான், ஏனென்றால் எனக்கு நம்பிக்கை இருந்தது அதாவது "என்னால் கட்டணம் செலுத்த முடியும். கிருஷ்ணர் எனக்கு கொடுப்பார்." அங்கு பணம் இல்லை. அது நீண்ட சரித்திரம். அதை கலந்துரைக்க நான் விரும்பவில்லை. ஆனால் இப்போது எனக்கு நடைமுறை அனுபவம் உள்ளது அதாவது நீங்கள் கிருஷ்ணரை - சார்ந்திருந்தால் அங்கு பஞ்சமே இருக்காது. நீங்கள் விரும்புவது எதுவென்றாலும், அது நிறைவேறும். தேஷாம் நித்யாபியுக்தானாம். ஆகையால் எப்பொழுதும் கிருஷ்ண உணர்வில் ஈடுபாடுடன் இருங்கள். பிறகு எந்த ஆசை, உங்களுக்கு இருந்தாலும், அனைத்தும் நிறைவேறும்.