TA/Prabhupada 0140 - ஒரு பாதை பக்திவழி; ஒரு பாதை பக்தியற்றது. அதற்கு மூன்றாம் வழியில்லை



Lecture on SB 6.1.45 -- Laguna Beach, July 26, 1975

இது கிருஷ்ண பக்தி இயக்கம். நாங்கள்மக்களுக்கு கற்பித்துக் கொண்டிருக்கிறோம் அதாவது அடுத்தடுத்த பிறவிகளில் நீங்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இப்பொழுது மனித சமுதாயம் இருக்கும் நிலையில், அதாவது இந்த பிறவிக்குப் பின் மறுபிறவிகள் உள்ளன என்பதே அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் மிகவும் முன்னேற்றம் அடைந்து இருக்கிறார்கள். சரியான பூனைகளும் நாய்களும், அவைகளுக்கு மறுபிறவிகள் உள்ளன என்பதே தெரியாது. அது இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது: யேன யாவான் யதாதர்மோ தர்மோ வேஹ ஸம்ஹித:. இஹ, இஹ என்றால் "இந்த பிறவியில்." ஸ ஏவ தத் - க்பலம் புங்க்தே ததா தாவத் அமுத்ர வை. அமுத்ர என்றால் "அடுத்த பிறவி." ஆகையால் நாம் நம் மறுபிறவிக்கு ஏற்பாடு செய்துக் கொண்டிருக்கிறோம். யதா அதர்மோ, யதா தர்மோ. அங்கே இரண்டு பொருள்கள் உள்ளன: பக்தராகவோ அல்லது பக்தியற்றவராகவோ நடிக்கலாம். அதற்கு மூன்றாம் வழியில்லை. ஒரு பாதை பக்தியுடன்; ஒரு பாதை பக்தியற்றது. ஆகையால் இங்கு இரண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. யேன யாவான் யதாதர்மோ தர்மோ. தர்ம என்றால் ஆதார நிலைமை. தர்ம சில ஆங்கில அகராதியில் குறிப்பிடுவதுபோல், "ஒரு விதமான சமய நம்பிக்கை." என்று பொருள்படாது. நம்பிக்கை திரை மறைவாகலாம். அது தர்மம் அல்ல. தர்ம என்றால் மூலமானது, ஆதார நிலையானது. அதுதான் தர்ம. நான் பலமுறை கூறி இருக்கிறேன். எவ்வாறு என்றால் தண்ணீர் போல். தண்ணீர் ஓர் திரவம். அது அதனுடைய தர்ம. தண்ணீர் சூழ்நிலை காரணமாக அது திடமானால், பனிக்கட்டி, ஆனால் இருப்பினும், அது மீண்டும் திரவமாக முயலும், ஏனென்றால் அதுதான் அதனுடைய தர்ம. நீங்கள் பனிக்கட்டியை வையுங்கள், படிப்படியாக அது திரவமாகிவிடும். அப்படியென்றால் தண்ணீரின் இந்த திட நிலை செயற்கையானது. சில இரசாயன சேர்க்கையால் தண்ணீர் திடமானது, ஆனால் இயற்கையின் நடைமுறையால் அது திரவமாகிறது.

ஆகையால் நம் நிகழ்கால நிலை திடமானது: "இறைவனைப் பற்றி எதையும் கேட்பதில்லை." ஆனால் இயற்கையான நிலை யாதெனில் நாம் இறைவனின் சேவகன். ஏனென்றால் நாம் எஜமானரை தேடுகிறோம். அந்த நித்தியமான எஜமானர் கிருஷ்ணர் ஆவார். போக்தாரம் யக்ஞ-தபஸாம் ஸர்வ லோக மஹேஸ்வரம் (பகவத் கீதை 5.29). கிருஷ்ணர் கூறுகிறார், "அனைத்து படைத்தலுக்கும் நானே எஜமானர். நானே அனுபவிப்பாளர்." அவரே எஜமானர். சைதன்ய ஸரிதாமருத கூறுகிறது, ஏகல ஈஸ்வர கிருஷ்ண. ஈஸ்வர என்றால் கட்டுப்படுத்துபவர் அல்லது எஜமானர். ஏகல ஈஸ்வர கிருஷ்ண ஆர ஸபபுருதிய: "கிருஷ்ணரை தவிர, அங்கே எவ்வகை பெரிய அல்லது சிறிய ஜீவாத்மாக்கள் இருந்தாலும் அவர்கள் அனைவரும் சேவகர்கள், கிருஷ்ணரை தவிர." ஆகையால் நீங்கள் பார்ப்பீர்கள்: கிருஷ்ணர் எவருக்கும் சேவை செய்யவில்லை. அவர் வெறுமனே அனுபவித்துக் கொண்டிருக்கிறார். போக்தாரம் யக்ஞ-தபஸாம் ஸர்வ லோக மஹேஸ்வரம். மற்றவர்களும் நம்மை போன்றவர்கள், முதலில் அவர்கள் கடினமாக உழைக்கிறார்கள், அதன் பிறகு அனுபவிக்கிறார்கள். கிருஷ்ணர் வேலை செய்வதில்லை. ந தஸ்ய காரியம் காரணம் சவித்யதே. இருப்பினும், அவர் அனுபவிக்கிறார். அதுதான் கிருஷ்ணர். ந தஸ்ய, இதுதான் வேதத்தின் தகவல். ந தஸ்ய காரியம் காரணம் சவித்யதே: "பகவான், கிருஷ்ணர், அவருக்கு செய்வதற்கு ஒன்றுமில்லை." நீங்கள் பாருங்கள், ஆகையினால், கிருஷ்ணர் எப்போதும் கோபியர்களுடன் நடனமாடிக் கொண்டிருப்பார், மேலும் இடையர் சிறுவர்களுடனும் விளையாடிக் கொண்டிருப்பார். மேலும் அவர் களைப்படைந்ததும், யமுனை நதிக்கரையில் படுத்துக்கொள்வார், உடனடியாக அவர் நண்பர்கள் வருவார்கள். ஒருவர் அவருக்கு விசிரிவிடுவார்; ஒருவர் அவருக்கு பிடித்துவிடுவார். ஆகையால் அவர்தான் எஜமானர், அவர் எங்கு சென்றாலும், அவர்தான் எஜமானர். ஏகல ஈஸ்வர கிருஷ்ண. ஈஸ்வர பரமஹ கிருஷ்ண: (பிரம்ம சம்ஹிதை 5.1). நித்தியமான கட்டுப்பாட்டாளர் கிருஷ்ணரே. "பிறகு யார் கட்டுப்பாட்டாளர்?" இல்லை, அவரை கட்டுப்படுத்த ஒருவரும் இல்லை. அதுதான் கிருஷ்ணர். இங்கு நாம் இன்னின்னவற்றுக்கு நிறுவனத் தலைவர், ஐக்கிய நாட்டின் ஜனாதிபதி, ஆனால் நான் நித்தியமான கட்டுப்பாட்டாளர் அல்ல. போது மக்கள் விரும்பியதும், உடனடியாக கீழே இறக்கிவிடுவார்கள். அதை நாம் புரிந்துக் கொள்வதில்லை, அதாவது நாமே நம்மை தேர்ச்சி பெற்ற கட்டுப்பாட்டாளராக தோரணையுடன் நிற்பது, ஆனால் நான் யாரோ ஒருவரால் கட்டுப்படுத்தப்படுகிறேன். ஆகையால் அவர் கட்டுப்பாட்டாளர் அல்ல. இங்கு நாம் ஒரு கட்டுப்பாட்டாளரை சில கால கட்டம்வரை காணலாம், ஆனால் அவர் மற்றொருவரால் கட்டுப்படுத்தப்படுகிறார். ஆகையால் கிருஷ்ணர் என்றால் கட்டுப்படுத்துபவர், ஆனால் அவரை கட்டுப்படுத்த அங்கு ஒருவருமில்லை. அதுதான் கிருஷ்ணர்; அதுதான் பகவான். இதுதான் புரிந்துக் கொள்ளும் விஞ்ஞானம். பகவான் என்றால் அனைத்தையும் கட்டுப்படுத்துபவர், ஆனால் அவருக்கு கட்டுப்பாட்டாளர் இல்லை.