TA/Prabhupada 0142 - பௌதிக இயற்கையின் இந்த வதை செய்முறையை நிறுத்துங்கள்Lecture on SB 6.1.15 -- Denver, June 28, 1975

ஆகையால் மக்கள் முதலில் வாழ்க்கையின் குறிக்கொள் என்ன என்பதை புரிந்துக் கொள்ளவில்லை. தற்சமயம் அவர்கள் அக்கறை கொள்ளவில்லை. பாவம் நிறைந்த வாழ்க்கை எது, பக்தி நிறைந்த வாழ்க்கை எது என்ற வித்தியாசம் அவர்களுக்கு இல்லை. ஆனால் நாம் இவற்றில் நம்பிக்கை கொள்ளாமல் இருக்கலாம், ஆனால் காரியங்கள் அங்கே அவ்வாறு தான் இருக்கிறது. எவ்வாறு என்றால் உங்களுக்கு சில நோய்கள் தொற்றிக் கொண்டால், அது வெளியே தெரிந்துவிடும். நீங்கள் நம்புகிறீர்களோ, இல்லையோ அதனால் பரவாயில்லை. இதோ நம் மருத்துவர் சஹிப் இருக்கிறார். அவருக்கு தெரியும், அதாவது உங்களுக்கு ஏதாவது நோய் தொற்றிக் கொண்டால், அது வெளியே தெரிந்துவிடும். ஆகையால் நாம் பலவிதமான தொற்றுகிற தன்மைகளுடைய, நோயை தொற்றுவிக்கிறோம். அங்கே மூன்று தன்மைகள் உள்ளன - ஸத்வ-குண, ரஜோ-குண, தமோ-குண - மேலும் நம்முடைய தொற்றுதலுக்கேற்று, நாம் வேறுபட்ட உடலை ஏற்றுக்கொள்ள வேண்டும். கர்மணா தைவ நேத்ரேண (ஸ்ரீமத் பாகவதம் 3.31.1) நாம் எல்லோரும், பௌதிக இயற்கையின் குணங்களுக்கு ஏற்றவாறு வேலை செய்கிறோம், மேலும் நம் சகவாசத்திற்கேற்ப நாம் ஒரு குறிப்பிட்ட வகையான உடலை ஏற்றுக் கொள்ள வேண்டும், ததா தேஹான்தரப் ப்ராப்தி: (பகவத் கீதை 2.13). துரதிஷ்டவசமாக பொருள்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்ற இந்த இயற்கை விஞ்ஞானத்தை கற்க, அங்கே ஆன்ம ஞானம், கல்லூரி, பல்கலைக்கழகம் எதுவும் இல்லை. ப்ரக்ருதே க்ரியமாணானி குணை: கர்மாணிஸர்வஷ: (பகவத் கீதை 3.27).

ப்ரக்ருதி என்றால் அங்கிருப்பது. ஆகையால் நாம் இந்த ஜட உலகில் தொற்றுகின்ற நிலையின் காரணமாக இருக்கின்றோம். இதுதான் நம் பிரச்சனை. மேலும் நாம் இறக்க வேண்டும். அதுதான் உண்மை. "எனக்கு இறப்பில் நம்பிக்கை இல்லை," என்று நீங்கள் கூறினால், அது சமாதானமாகாது. இறப்பு கண்டிப்பாக அங்கே இருக்கும். நீங்கள் இறந்தேயாக வேண்டும். ஆகையால் இவ்விதமாக நம் வாழ்க்கை நடந்துக் கொண்டிருக்கிறது. ஆகையால் மானிட வாழ்க்கையில் நம்மால் இதை சீர்செய்ய முடியும். இதுதான் கிருஷ்ண உணர்வின் செயல்முறை, அதாவது நம்முடைய வேறுபட்ட பௌதிக குணங்களால், நிரந்தரமான சகவாசத்தை சீர்செய்தால்..., மேலும் இந்த சகவாசத்தின் விளைவால், நாம் ஒரு உடலை ஏற்றுக் கொண்டு மீண்டும் மரணமடைகிறோம், மறுபடியும் மற்றொரு உடலை ஏற்றுக் கொண்டு மறுபடியும் இறக்கிறோம். இந்த வேலை நிறுத்தப்படும். யத் கத்வா ந நிவர்தந்தே தத்தாம பரமம் மம (பகவத் கீதை 15.6). ஏதோ ஒரு வகையில், நீங்கள் ஸ்ரீ கிருஷ்ணரின் திருவடிகளில் வீடுபெறு அடையும் தகுதி பெற்றால், யத் கத்வா. பிறகு நீங்கள் மீண்டும் பிறவி எடுக்க வேண்டியதில்லை. இந்த ஜட கட்டுண்ட வாழ்க்கை எப்பொழுதும் துன்பம் நிறைந்தது என்பதை அவர்கள் புரிந்துக் கொள்ளவில்லை. அவர்கள் அதை ஏற்றுக் கொண்டார்கள், "இது மிகவும் நன்றாக இருக்கிறது." மிருகங்கள். மிருகங்கள், மிருகவதை மையங்கள் போல், வளர்ப்பு பிராணிகள் கிடங்கு, அங்கே நிறைய மிருகங்கள் உள்ளன, அவைகள் வதைக்கப்படப் போகின்றன. எல்லோருக்கும் தெரியும். அந்த மிருகங்கள், அவைகளுக்கும் தெரியும். ஆனால் மிருக இனம் என்னும் காரணத்தால், அவைகளால் ஒன்றும் செய்ய முடியவிலை. அதேபோல், இந்த ஜட உலகம் என்னும் மிருகவதை மையங்களில் நாமும் அமர்த்தப்பட்டுள்ளோம், அது ம்ருத்யு-லோக என்று அழைக்கப்படுகிறது. எல்லோருக்கும் தெரியும் அதாவது அவர்கள் வதை செய்யப்படுவார்கள் என்று. இன்றோ நாளையோ அல்லது ஐம்பது வருடங்கள் அல்லது நூறு வருடங்கள் கழித்து, எல்லோருக்கும் தெரியும் அவர்கள் வதை செய்யப்படுவார்கள் என்று. அவர் இறந்துவிடுவார். இறப்பு என்றால் கொலை செய்யப்படுவது. ஒருவரும் சாக விரும்பமாட்டார்கள். மிருகங்களும் கூட, சாக விரும்புவதில்லை. ஆனால் அவைகள் வலுக்கட்டாயமாக கொல்லப்படுகின்றன. இதை தான் மிருகவதை என்கிறோம். அதேபோல், யார் சாக விரும்புவார்கள்? ஒருவரும் சாக விரும்பமாட்டார்கள். ஆனால் இயற்கையின் சட்டப்படி அது கொல்லப்பட வேண்டியுள்ளது. அதற்கு தான் மிருகவதை மையங்கள். இந்த பௌதிக உலகம் முழுமையுமே வதை மையம். அதை நாம் உணர வேண்டும். மேலும் இது ம்ருத்யு-லோக என்று அழைக்கப்படுகிறது. இது தான் பிரச்சனை. ஆனால் அவர்கள் அதை மிகவும் முக்கியத்துவமுடையதாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள், மிருகங்களைப் போல். மிருகங்கள், அவை முக்கியமாக எடுத்துக் கொள்ளாது. இன்னும் தான் சாகப் போகிறோம் என்று தெரிந்தும் கூட, அவைகளால் எந்த முடிவும் எடுக்க முடியாது. ஆகையால் நம் நிலையும் அவ்வாறே உள்ளது. ம்ருத்யுஸம்ஸார ஸாகராத், தேஷாமஹம் அனுகம்பார்தமஹம் அஞ்ஞான-ஜம் தமஹ.

தேஷாமஹம் ஸமுத்தர்த்தா ம்ருத்யுஸம்ஸார ஸாகராத் (பகவத் கீதை 12.7). ஆகையால் நம் நிலையை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். ஒருவரும் சாக விரும்பமாட்டார்கள், ஆனால் அவர் வதை செய்யப்படுகிறார். மறுபடியும் அவருக்கு மற்றொரு வாய்ப்பு, மற்றொரு உடல் அளிக்கப்படுகிறது. மறுபடியும் அவர் வதை செய்யப்படுகிறார். இதுதான் இயற்கையின் நீதி, நடந்துக் கொண்டிருக்கிறது. தைவி ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா (பகவத் கீதை 7.14). நாம் இதை முக்கியமாக புரிந்துக் கொள்ள வேண்டும், அதாவது எவ்வாறு பௌதிக இயற்கையின் வதை செய்யும் செயலை நிறுத்துவது. அதுதான் அறிவாற்றல். இல்லையெனில், பூனைகளும், நாய்களும் போல் சந்தோஷமாக இருக்க வேண்டும், "ஓ, நான் ஆனந்தமாக சாப்பிட்டும் குதித்துக் கொண்டும் இருக்கிறேன். வதை செய்யப்படுவதைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை," அது ஒரு சிறந்த அறிவாற்றல் அல்ல. இயற்கையின் இந்த வதம் செய்யும் செயலை எவ்வாறு நிறுத்துவது என்பதே அறிவாற்றல். அது தான் அறிவாற்றல். அதைப் பற்றி கலந்துரையாடல் நடந்துக் கொண்டிருக்கிறது.

ஆகையால் எவரும் இந்த வதம் செய்யும் முறையில் இருந்து பக்தி மார்க்கத்தின் மூலம் விடுதலை பெறலாம். அது இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது, கேசித் .கேவலயா பக்த்யா (ஸ்ரீமத் பாகவதம் 6.1.15). கேசித். அது மிகவும் சாதாரணமல்ல. கிருஷ்ண உணர்வுக்கு ஒருவர் வருவது மிகவும் அபூர்வமானது. கேசித் .கேவலயா பக்த்யா. வெறுமனே பக்தி மார்க்கத்தால், வதைப்படும் இந்த அபாயமான நிலையிலிருந்து ஒருவர் விடுதலை பெறலாம். கேசித் .கேவலயா பக்த்யா (ஸ்ரீமத் பாகவதம் 6.1.15). மேலும் அவர்கள் யார்? வாஸுதேவ-ப்ராயணாஹ, கிருஷ்ணர் பக்தர்கள். கிருஷ்ணரின் பெயர் வாஸுதேவ. அவர் வசுதேவரின் மகன்; ஆகையினால் அவர் பெயர் வாஸுதேவ. ஆகையால் வாஸுதேவ-ப்ராயணாஹ. ப்ராயணாஹ என்றால் "நம்முடைய இறுதியான இலக்கு வாஸுதேவ, கூடுதலாக ஒன்றுமில்லை." அவர்களை வாஸுதேவ-ப்ராயணாஹ என்று அழைக்கிறோம். வாஸுதேவ-ப்ராயணாஹ, அகஹம் துன்வந்தி. அகஹம் என்றால் பௌதிக தூய்மைக் கேடு. நாம் எப்போதும் பௌதிக தூய்மைக் கேடுடன் சம்பந்தப்பட்டுள்ளோம். ஆகையால் நாம் வாஸுதேவ-ப்ராயணாஹவானால்..., வாஸுதேவ: ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்லப: (பகவத் கீதை 7.19), அதே பொருள். கேசித் - என்றால் மிக அரிதாக என்று இங்கு கூறப்படுகிறது. மேலும் கிருஷ்ணரும் பகவத்-கீதையில் கூறியிருக்கிறார், வாஸுதேவ: ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்லப: (பகவத் கீதை 7.19). ஸுதுர்லப:, மிக அரியது.