TA/Prabhupada 0152 - ஒரு பாவி கிருஷ்ணர் உணர்வு பெற முடியாது
Lecture on BG 1.31 -- London, July 24, 1973
அனைவரும் இந்த க்ருஹ-க்ஷேத்ர-ஸுதாப்த-வித்தை: (ஸ்ரீமத் பாகவதம் 5.5.8), இல்லற வாழ்க்கையில் கொஞ்சம் நிலத்துடன் சந்தோஷமாக இருக்க விரும்புகிறார்கள். அந்த காலத்தில் தொழிற்சாலைகள் கிடையாது. தொழிற்சாலைகள் தேவையில்லை. நிலம். உங்களுக்கு நிலம் கிடைத்தால், பிறகு நீங்கள் உங்கள் உணவை உற்பத்தி செய்யலாம். வாஸ்தவத்தில் அதுதான் நமக்கு சரியான வாழ்க்கை. இங்கு இந்த கிராமத்தில் இவ்வளவு நிலம் காலியாக இருப்பதை நாம் பார்க்கின்றோம், ஆனால் அவர்கள் தங்களுடைய உணவை உற்பத்தி செய்வதில்லை. அவர்கள் பசுக்களை தங்கள் உணவாக்குகிறார்கள், பரிதாபத்திற்குரிய பசுக்கள், அவற்றைக் கொன்று உண்கிறார்கள். இது நல்லதல்ல. க்ருஹ-க்ஷேத்ர. நீங்கள் க்ருஹஸ்தர் ஆகுங்கள், ஆனால் உங்கள் உணவை நிலத்திலிருந்து உற்பத்தி செய்யுங்கள், க்ருஹ-க்ஷேத்ர. மேலும் நீங்கள் உணவு உற்பத்தி செய்தப் பிறகு குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள், க்ருஹ-க்ஷேத்ர-ஸுதாப்த-வித்த. இந்தியாவில் கிராமங்களில், ஏழை மக்கள், விவசாயிகளில் இன்னுமும் இது தான் முறை, அதாவது ஒரு விவசாயியிடம் ஒரு பசுவை பராமரிக்க சக்தி இல்லாத பட்சத்தில், அவன் திருமணம் செய்துக் கொள்ளமாட்டான். ஜோறு மற்றும் கோரு. ஜோறு என்றால் மனைவி, மேலும் கோரு என்றால் பசு. ஆக ஒருவனுக்கு பசுவை பராமரிக்க சக்தி இருந்தால் ஒழிய அவன் திருமணம் செய்யக்கூடாது. ஜோறு மற்றும் கோரு. ஏனென்றால் அவனுக்கு மனைவி வந்தால், உடனேயே அவன் குழந்தைகளை பெறுவான். ஆனால் குழந்தைகளுக்கு பசும் பால் கொடுக்க முடியாமல் போனால், குழந்தைகள் பலவீனமாக இருப்பார்கள், ஆரோக்கியமாக இருக்கமாட்டார்கள். அவர்கள் போதுமான அளவிற்கு பால் குடிக்க வேண்டும். எனவே பசு தாயாகக் கருதப்படுகிறது. ஏனென்றால், ஒரு தாய் குழந்தையை பெற்றிருக்கிறாள், மற்றொரு தாய் பால் கொடுக்கிறாள். ஆக அனைவரும் பசு தாயிற்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும், ஏனென்றால் அவள் பால் கொடுக்கிறாள். ஆக நம் சாஸ்திரப்படி ஏழு தாய்கள் இருக்கிறார்கள். ஆதெள மாதா, பெற்றெடுத்த தாய். ஆதெள மாதா, அவள் தாய். குரு-பத்தினி, குருவின் மனைவி. அவளும் ஒரு தாய். ஆதெள மாதா, குரு-பத்தினி, பிராம்மணி. பிராம்மணனின் மனைவி, அவளும் ஒரு தாய். ஆதெள மாதா, குரு-பத்தினி, பிராம்மணி, ராஜ-பத்னிகா, ராணியும் ஒரு தாய். ஆக எத்தனை பேர்? ஆதெள மாதா, குரு-பத்தினி, பிராம்மணி, ராஜ-பத்னிகா, பிறகு தேனு. தேனு என்றால் பசு. அவளும் ஒரு தாய். மேலும் தாத்ரி. தாத்ரி என்றால் தாதி. தேனு தாத்ரி ததா ப்ருத்வீ, பூமியும் கூட. பூமியும் ஒரு தாய். பொதுவாக மக்கள், அவர்கள் பிறந்த இடத்தை, தங்கள் தாய் நாட்டை கவனிப்பார்கள். அது நல்லது. ஆனால் அத்துடன் பசு தாயையும் அவர்கள் கவனிக்க வேண்டும். ஆனால் அவர்கள் தாயை கவனிப்பதில்லை. எனவேதான் அவர்கள் பாவிகள். அவர்கள் துன்பப்பட வேண்டியிருக்கும். போர், கொடிய நோய்கள், பஞ்சம், இவைகளை எல்லாம் அவர்கள் சந்திக்க வேண்டிவரும். மக்கள் பாவிகளானதும், உடனேயே இயற்கையின் தண்டனையும் தானாகவே வந்து சேரும். உங்களால் அதை தவிர்க்க முடியாது. ஆகவே எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு என்றால் இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் தான். மக்களுக்கு பாவிகள் ஆகாமல் இருக்க கற்றுத் தருவது. ஏனென்றால் ஒரு பாவியால் கிருஷ்ண உணர்வுடையவன் ஆக முடியாது. கிருஷ்ண உணர்வுடையவன் ஆவது என்றால் அவன் தன் பாவச் செயல்களை கைவிட வேண்டும்.