TA/Prabhupada 0155 - எல்லோரும் பகவானாக முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்



Lecture on SB 7.6.5 -- Toronto, June 21, 1976

ஆக, பகவத்-கீதையில் மூன்று சொற்களை நாம் காண்கிறோம். ஸநாதனஹ, அதாவது நித்தியமான என்ற வார்த்தை இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. முதலாவது ஜீவ, இந்த உயிர்வாழிகள், அவர்கள் ஸநாதன: என்று வர்ணிக்கப்படுகிறார்கள். மமைவாம்சோ ஜீவ-பூத: ஜீவ-லோகே ஸநாதன: (பகவத் கீதை 15.7). நாம் அனைவரும் உயிர்வாழிகள், ஸநாதன:. மாயாவின் தாக்கத்தால் நாம் ஜீவ-பூத: ஆகிவிட்டோம் என்பது கிடையாது. நாமே நம்மை மாயாவின் தாக்கத்தில் வைத்திருக்கின்றோம்; அதனால் தான் நாம் ஜீவ-பூத:. உண்மையில் நாம் ஸநாதன. ஸநாதன என்றால் நித்தியமானவர்கள். நித்யொ ஷாஷ்வத. ஜீவாத்மா எப்படி வர்ணிக்கப்பட்டுள்ளது என்றால்: நித்யொ ஷாஷ்வதோ யம் ந ஹன்யதே ஹன்யமானே ஷரிரே (பகவத் கீதை 2.20). அதுதான் ஸநாதன. நாம் அவ்வளவு பெரிய முட்டாள்கள். அதாவது நான் நித்தியமானவன், ஸநாதன, எனக்கு பிறப்பும் இறப்பும் இல்லவே இல்லை என்றால், பிறகு நான் எதற்காக இந்த பிறப்பு மற்றும் இறப்பு என்னும் கொடுந் துன்பத்தில் தள்ளப்பட்டேன்? இதற்கு தான் ப்ரம-ஜிஞாஸா எனப் பெயர். ஆனால் நமக்கு அத்தகைய கல்வியறிவு இல்லை. ஆனால் நாம் கற்க வேண்டும். குறைந்தபட்சம் நாம் இந்த அறிவுரைகளை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் ஸநாதன. மேலும் மற்றொரு உலகம் இருக்கிறது, பகவத் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பரஸ் தஸ்மாத் து பாவோ (அ)'ன்யோ வ்யக்தோ (அ)'வயக்தாத் ஸநாதன: (பகவத் கீதை 8.20). வ்யக்தோ (அ)'வ்யக்தாத் ஸநாதன: இந்த ஜட உலகம் தோன்றியிருக்கிறது மற்றும் அதன் காரணமானது அந்த மொத்த ஜட சக்தி, அதாவது மஹத்-தத்வம். அது தோன்றாதது. ஆகவேதான் வ்யக்தோ (அ)'வ்யக்த்தாத். இதற்கு அப்பால் மற்றொரு இயற்கை உள்ளது, ஆன்மீக இயற்கை, ஸநாதன. அதற்கு தான் ஸநாதன எனப் பெயர். பரஸ் தஸ்மாத் து பாவோ (அ)'ன்யோ வ்யக்தோ (அ)'வயக்தாத் ஸநாதன: (பகவத் கீதை 8.20). மேலும் ஜீவ-பூத:-ஸநாதன. மேலும் பதினொன்றாம் அத்தியாயத்தில், அர்ஜுனர், கிருஷ்ணரை ஸநாதன என்று வர்ணிக்கின்றார். ஆக மூன்று ஸநாதன. மூன்று ஸநாதன. ஆக நாம் அனைவரும் ஸநாதன என்றால், ஸநாதன-தாம் உள்ளது மேலும் கிருஷ்ணரும் ஸநாதன ஆவார், நாமும் ஸநாதன ஆவோம். ஆக இவை மூன்றையும் சேர்த்தால் அதற்கு பெயர் தான் ஸநாதன-தர்மம். ஸநாதன என்றால் என்னவென்றே அவர்களுக்கு தெரியாது. நான் ஒருவிதமாக உடை அணிந்து, ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் பிறந்திருந்தால், பிறகு நான் ஸநாதன-தர்மத்தைச் சேர்ந்தவன் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இல்லை. அனைவரும் ஸநாதன-தர்மத்தை அடையலாம். ஆனால் அவர்களுக்கு ஸநாதன என்ற வார்த்தைக்கு அர்த்தமே தெரியாது. ஒவ்வொரு உயிர்வாழியும் ஸநாதன (நித்தியமானவன்). மேலும் கிருஷ்ணர், கடவுளும் ஸநாதன. மேலும் நாம் ஒன்றாக சந்திக்க கூடிய இடம் ஒன்று உள்ளது - அதுதான் ஸநாதன-தாம். ஸநாதன-தாம, ஸநாதன-பக்தி, ஸநாதன-தர்ம. அது செயல்படுத்தப்படும் போது, அது ஸநாதன-தர்மம் என்றழைக்கப்படுகிறது. ஆக அந்த ஸநாதன-தர்மம் என்பது என்ன? ஒருவேளை நான் அந்த ஸநாதன-தர்மத்திற்குச் சென்றால், ஸநாதனரான கடவுள் அங்கிருப்பார், மேலும் நானும் ஸநாதன. ஆக எங்கள் ஸநாதன செயல்கள் என்னவாக இருக்கும்? நான் ஸநாதன-தாமத்திற்குச் சென்றதால் நான் கடவுள் ஆகிவிட்டேன் என்று அர்த்தமாகுமா? இல்லை. நீங்கள் கடவுள் ஆவதில்லை. ஏனென்றால் ஒருவரால் தான் கடவுளாக இருக்க முடியும். அவர்தான் முழுமுதற் கடவுள், எஜமானர், மற்றும் நாமெல்லாம் சேவகர்கள். சைதன்ய மஹாபிரபு: ஜீவெர ஸ்வரூப ஹய நித்ய க்ருஷ்ண தாஸ (சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை 20.108-109). இங்கு நாம் ஒவ்வொருவரும் நானே கிருஷ்ணர் ஆகவேண்டும் என உரிமை கேட்கிறோம். ஆனால் நீங்கள் ஸநாதன-தாமத்திற்கு திரும்பிச் சென்றபிறகு - அத்தகைய தகுதி இல்லாமல் அங்கு செல்ல முடியாது - பிறகு நாம் பகவானின் சேவையில் நித்தியமாக ஈடுபட்டிருப்போம். அதுதான் ஸநாதன-தர்மம். ஆக நீங்கள் அதை பயிலுங்கள். ஸநாதன-தர்மம் என்றால் இந்த பக்தி-யோகம். நாம் அதை மறந்துவிட்டோம். அதனால் தான் எல்லோரும் கடவுள் ஆக முயல்கிறார்கள். பகவானின் சேவகன் ஆவது எப்படி என்ற பயிற்சியை இனி இங்கு மேற்கொள்ளுங்கள். மேலும் நீங்கள் உண்மையிலேயே தகுதி பெற்றால், அது நீங்கள் இப்போது... நீங்கள் பகவானின் சேவகன் ஆகிவிட்டிர்கள் என்பது உறுதி, அதுதான் பக்தி-மார்கம். சைதன்ய மஹாபிரபு கூறியது போல், கோபீ-பர்துர் பத-கமலயோர் தாஸ-தாஸ-தாஸ-தாஸானுதாஸ:. நீங்கள் பகவானின் சேவகருடைய சேவகருக்கு சேவகர்களானோருக்கெல்லாம் சேவகன் ஆவதில் கை தேர்ந்தவர் ஆனால் - அப்படி நூறு படி கீழ் மட்டத்து, சேவகர் - பிறகு நீங்கள் பக்குவம் அடைந்ததாக அர்த்தமாகும் (சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை 13.80). ஆனால் இங்கு எல்லோரும் முழுமுதற் கடவுள் ஆக முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். 'ஸோ 'ஹம்," "அஹம் ப்ரஹ்மாஸ்மி" போன்ற சொற்களை தவறாகப் பயன்படுத்தி, "நான் தான் பரம்பொருள்." என ஏமாற்றுகிறார்கள். ஆனால் அது அவ்வாறு அல்ல. இவை வேத வார்த்தைகள், ஆனால் ஸோ 'ஹம் என்பதற்கு "நானே இறைவன்" என்ற அர்த்தம் கிடையாது. ஸோ 'ஹம் என்றால் "எனக்கும் அதே தன்மை உள்ளது," எனப் பொருள். ஏனென்றால் மமைவாம்சோ ஜீவ-பூத: (பகவத் கீதை 15.7). ஜீவ என்பது இறைவனின், கிருஷ்ணரின், அம்சம் ஆகும். ஆகவே அதன் சிறப்புத்தன்மை ஒரேமாதிரியாகத் தான் இருக்கும். உதாரணமாக, நீங்கள் கடலிலிருந்து ஒரு சோட்டு நீரை எடுத்துக்கொள்ளுங்கள். கடலிலுள்ள மொத்த நீரின் கலவையும் அந்த சொட்டு நீரின் இரசாயன கலவையும் ஒருபோலவே தான் இருக்கும். அதுதான் ஸோ (அ)'ஹம் அல்லது ப்ரஹ்மாஸ்மி என்று கூறப்படுகிறது. இந்த வேத வாக்குகளை தவறாக பயன்படுத்தி, "நான் கடவுள் ஆகிவிட்டேன்." என கற்பனை செய்யக்கூடாது. மேலும் நீங்கள் கடவுளாக இருந்தால் பிறகு எதற்காக நீங்கள் நாய் ஆனீர்கள்? கடவுள் நாய் ஆகிறாரா என்ன? இல்லை. அது சாத்தியமில்லை. நாம் மிகச்சிறிய அணுக்கள். அதுவும் சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது: கேஷாக்ர-ஷத-பாகஸ்ய ஷததா கல்பிதஸ்ய ச ஜீவ: பாகோ ஸ விஞேய ஸ அநன்தியாய கல்பதே (சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை 19.140) நம்முடைய ஆன்மீக அடையாளம் என்னவென்றால், நாம் முடியின் முனையின் பத்தாயிரத்தாம் பாகம். அது மிகவும் சிறியது, நாம் அந்த முனையை பத்தாயிரம் பாகங்களாக வகுத்தால், அதில் ஒன்று தான் நம்முடைய அடையாளம். மேலும் அந்த சிறிய துகள் இந்த உடலுக்குள் இருக்கிறது. ஆக அதை எங்கே காண முடியும்? அத்தகைய இயந்திரமே ஏதும் கிடையாது. ஆகையினால் நாம் நிராகார என்று கூறுகிறோம். இல்லை, ஆகாரம் இருக்கிறது, ஆனால் அது மிகவும் நுண்ணியமானது, எனவே அதை இந்த ஜடக் கண்களால் பார்ப்பது சாத்தியமில்லை. ஆக நாம் அதை வேதங்களில் உள்ள வாக்கியங்களை வைத்து பார்க்க வேண்டும். ஷாஸ்த்ர சக்ஷுஷ. அதுதான் வேதாந்த ஞானம். நாம் சாஸ்திரத்தின் மூலமாக அனைத்தையும் பார்க்க வேண்டும். இந்த தெளிவற்ற கண்களால் அல்ல. அது சாத்தியமல்ல.