TA/Prabhupada 0163 - மதம் என்பது கடவுளால் இயற்றப்பட்ட நெறிமுறைகளும் சட்டங்களும் ஆகும்



Lecture on BG 4.3 -- Bombay, March 23, 1974

ஒருவரது வாழ்க்கையின் குறிக்கோள் , கடவுளை அடைவதே. இதுவே வாழ்வின் மிக உயர்ந்த லட்சியமாகும். நாம் இந்த பௌதீக சட்டங்கள் நிறைந்த வாழ்வில் விழுந்துவிட்டோம். நாம் உண்மையில் துன்பப்படுகிறோம். ஆனால் நாம் இதை உணர்வதில்லை. விலங்குகளைப் போல் மூடர்களாக இருக்கிறோம். நமது வாழ்வின் உண்மையான லட்சியம் என்ன என்று நமக்கு தெரிவதில்லை.

வாழ்க்கையின் உண்மையான லட்சியம் பகவத் கீதையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. janma-mṛtyu-jarā-vyādhi-duḥkha-doṣānudarśanam (பகவத் கீதை 13.9). மாறி மாறி வரும் பிறப்பு, இறப்பு, மூப்பு மற்றும் நோய் என்கிற சுழற்சி நமக்குரியதல்ல என்று எப்போது நாம் உணர்கிறோமோ என்பது இதன் அர்த்தம் யாரும் மரணத்தை விரும்புவதில்லை. ஆனால் அது நம் மீது திணிக்கப்படுகிறது. "நான் விரும்பாவிட்டாலும் மரணம் என்பது எனக்கு நிச்சயிக்கப்பட்டது. இதுவே நமது சிக்கல்" என்பதை ஒருவர் புரிந்து கொள்வதில்லை. இந்த அறியாமையே நமக்கு பிரச்சினை. இதை எவ்வாறு தீர்ப்பது என்பது பற்றி யாரும் சிந்திப்பதில்லை. அனைவரும் தற்காலிகமான பௌதீக பிரச்சினைகளை தீர்ப்பதிலேயே மூழ்கியிருக்கிறோம். தற்காலிகமான பௌதீக பிரச்சினைகள் நமக்கு உண்மையான பிரச்சினையே கிடையாது நம் முன் இருக்கும் உண்மையான சவால் என்பது பிறப்பு, இறப்பு, மூப்பு மற்றும் நோய் என்ற சுழற்சியை நிறுத்துவதே. இதுவே நாம் தீர்க்க வேண்டிய பிரச்சினை. நாம் இந்த பௌதீக உலகிலிருந்து விடுதலை அடைந்தால் தான் இந்த பிரச்சினைக்கு தீர்வே காண முடியும்.

எனவே கிருஷ்ணர் மீண்டும் அவதரித்தார். Yadā yadā hi dharmasya glānir bhavati bhārata (பகவத் கீதை 4.7). Dharmasya glāniḥ. Glāniḥ என்றால் சிதைக்கப்படுதல்.மனிதர்கள் பல மதங்களை உருவாக்கியிருக்கின்றனர். "இது எங்கள் மதம்." "இது இந்து மதம்", "இது இஸ்லாமிய மதம்", "இது கிறித்துவ மதம்", "இது பௌத்த மதம்" மேலும் "இது சீக்கிய மதம்". இந்த மதம் , அந்த மதம் என பல மதங்களை உருவாக்கியுள்ளனர். மதம் என்பது இவ்வாறு வர்ணிக்கப்படுகிறது.. dharmaṁ tu sākṣād bhagavat-praṇītam (ஸ்ரீமத் பாகவதம் 6.3.19).. அதாவது மதம் என்பது கடவுளால் கொடுக்கப்பட்ட நெறிமுறைகளும், சட்டங்களும் தான். இதுவே உண்மையான மதம் ஆகும். எனவே இது எளிமையாக இவ்வாறு கூறப்படுகிறது: dharmaṁ tu sākṣād bhagavat-praṇītam (ஸ்ரீமத் பாகவதம் 6.3.19). ஒரு மாநிலத்திற்குரிய சட்ட திட்டங்கள் அதன் அரசாங்கத்தால் இயற்ற்றப்படுவதைப்போல் இது கடவுளால் இயற்றப்பட்டவையாகும் மாநிலத்திற்குரிய சட்டங்களை நீங்கள் உருவாக்க முடியாது. இதை நான் பல முறை சொல்லியிருக்கிறேன். மாநில சட்டங்கள் அரசாங்கத்தால் உருவாக்கப்படுகிறது. அதைப்போல் மதமும் கடவுளால் உருவாக்கப்படுகிறது. கடவுளால் இயற்றப்பட்ட மதமே உண்மையான மதம் ஆகும். கடவுளால் இயற்றப்பட்ட மதம் எது? என்ற கேள்வி எழும். (பக்தரைப் பார்த்து சொல்கிறார்: அவர்களுக்கு மறைப்பதால் இங்கு வந்து நிற்கவும் ) கடவுளால் இயற்றப்பட்ட மதம் என்ன என்பது பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது. sarva-dharmān parityajya mām ekaṁ śaraṇaṁ vraja (பகவத் கீதை 18.66). இதுவே கடவுளால் இயற்றப்பட்ட மதம் ஆகும். "அனைத்து மதங்களையும் சடங்குகளையும் மறந்து... என்னுடைய பக்தனாகி, என்னிடம் சரணடைவாயாக." என்று சொல்லப்பட்டுள்ளது.