TA/Prabhupada 0183 - ஆந்தையாரே, தயவு செய்து உங்கள் கண்களைத் திறந்து சூரியனைப் பாரும்



Lecture on SB 6.1.37 -- San Francisco, July 19, 1975

கடவுள் பிரசாரம் செய்வது என்னவென்றால் "இதோ நான் இங்கே இருக்கிறேன். நான் வந்துவிட்டேன்." பரித்ராணாய ஸாதூனாம் வினாஷாய ச துஷ்க்ருதாம் (பகவத்-கீதை 4.8). உனக்கு உய்வு அளிக்கவே உன் முன்னே வந்திருக்கிறேன் . "பரித்ராணாய ஸாதூனாம்". "நீ என்னை அறிய முயற்சி செய்கிறாய். எனவே உன்முன்னே வந்திருக்கிறேன்." "நீ ஏன் கடவுள் உருவமற்றவர் என்று எண்ணுகிறாய். இதோ நான் இங்கே இருக்கிறேன், கிருஷ்ணன், உருவமுடன்." "நான் கையில் புல்லாங்குழலுடன் இருப்பதைப் பார். எனக்கு பசுக்கள் என்றால் மிக்க பிரியம்." "நான் பசுக்களை, முனிவர்களை, பிரம்மாவை மற்றும் மற்ற அனைத்து உயிர்களையும் சமமாக நேசிக்கிறேன். ஏனெனில் அவர்களனைவரும் வெவ்வேறு உடலில் இருக்கும் எனது பிள்ளைகளே." கிருஷ்ணர் விளையாடுகிறார். கிருஷ்ணர் பேசுகிறார். இருப்பினும் இந்த சில மூடர்கள் அவரை அறிவதில்லை. இதில் கிருஷ்ணரின் தவறு என்ன ? நமது தவறு தான். 'அந்த'. இதை ஆந்தையுடன் ஒப்பிடலாம். ஆந்தை கண்களைத் திறந்து சூரியவெளிச்சத்தைப் பார்ப்பதில்லை. ஆந்தை தெரியுமா? அவைகள் திறப்பதில்லை. நீங்கள் எவ்வளவு சொன்னாலும் சரி, "ஆந்தையாரே, தயவு செய்து உங்கள் கண்களைத் திறந்து சூரியனைப் பாரும், பதிலுக்கு "சூரியனெல்லாம் ஒன்றும் கிடையாது. எனக்கு தெரியவில்லையே." (சிரிப்பு) இந்த ஆந்தை சமுதாயம். இந்த ஆந்தைகளை எதிர்த்து நீங்கள் போரிட வேண்டும். நீங்கள் உறுதியாக இருக்கவேண்டும். குறிப்பாக சந்நியாசிகள். நாம் ஆந்தைகளை எதிர்த்து போரிட வேண்டும். ஏதேனும் ஒரு கருவியைக் கொண்டேனும் அவர்களின் கண்களைத் திறக்க வைக்க வேண்டும். (சிரிப்பு) ஆக இப்படி நடந்து கொண்டிருக்கிறது. கிருஷ்ண பக்தி இயக்கம் என்பது இந்த ஆந்தைகளுடன் போரிடும் இயக்கமாகும்.

இது ஒரு சவால்: யுயம் வை தர்ம-ராஜஸ்ய யதி நிர்தெஷ-காரிண:(ஸ்ரீமத் பாகவதம் 6.1.38), நிர்தெஷ-காரிண:. சேவகனுக்கு தனது எஜமானனின் கட்டளையை நிறைவேற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. ஆகையினால் நிர்தெஷ-காரிண:. அவர்கள் மறுபேச்சு பேச முடியாது. தனக்கு என்ன கட்டளையோ அதை செய்தே ஆகவேண்டும். ஆக எவனாவது (சேவகன் என்று) கூறினால்... அவன் எதிர்பார்க்கிறான்... நான் நினைக்கிறேன்... இங்கு விஷ்ணு தூதர்களும் குறிப்பிடப்பட்டுள்ளார், வசுதேவோக்த-காரிண:. அவர்களும் சேவகர்கள். 'உக்த' என்றால் வாசுதேவர் என்ன கட்டளைகளை இட்டாலும் அவர்கள் நிறைவேற்றுவார்கள். இதைப்போலவே எம தூதர்கள், அவர்கள் எமராஜரின் சேவகர்கள். அவர்களையும் நிர்தேஷ-காரிண: என்று அழைக்கப்பட்டிருக்கிறது. "நீ உண்மையிலேயே எமராஜரின் சேவகன் என்றால், நீ அவருடைய ஆணையின்படி செயல்படவேண்டும், மேலும் உனக்கு தர்மம் என்றால் என்ன மற்றும் அதர்மம் என்றால் என்ன என்று தெரிந்திருக்க வேண்டும்." ஆகையால் அவர்கள் யமராஜின் உண்மையான சேவர்கள், அதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்போது அவர்கள் தன் அடையாளத்தை இவ்வாறு அளிக்கிறார்கள், 'யமதூத உசு: வேத-ப்ர்ணிஹிதோ தர்ம', உடனடியாக பதிலளிக்கப்பட்டது. "தர்ம என்றால் என்ன?" என்று கேள்வி. உடனடியாக பதிலளிக்கப்பட்டது. தர்ம என்றால் என்ன என்று அவர்களுக்கு தெரியும். வேத-ப்ரணிஹிதோ தர்ம: "வேதங்களில் விவரிக்கப்பட்டது தான் தர்மம்." நீங்கள் தர்மத்தை உருவாக்க முடியாது. வேதம், உண்மையான கல்வி, வேதம் என்றாலே கல்வி . வேத-சாஸ்திரம். ஆகையால் படைப்புக் காலத்திலிருந்தே, வேதம், பிரம்மருக்கு அளிக்கப்பட்டது. வேதம்... ஆகையால் 'அபௌருஷேய' என்று அழைக்கப்படுகிறது; அது உருவாக்கப்படவில்லை. அது ஸ்ரீமத் பாகவதத்தில் விளக்கப்பட்டுள்ளது, 'தேனே ப்ரம ஹ்ருத ஆதி-கவயே.' ப்ரம்ம, ப்ரம்ம என்றால் வேதம். வேதத்தின் மற்றொரு பெயர் ப்ரம்ம, ஆன்மீக அறிவு, அல்லது முழுமையான அறிவு, ப்ரம்ம. ஆக 'தேனே ப்ரம்ம ஆதி-கவயே ஹ்ருத'. ஆகையால் வேதம் என்பது ஆன்மீக குருவிடமிருந்து கற்க வேண்டும்.

வேதத்தை புரிந்துக் கொண்ட முதல் உயிர்வாழீ ப்ரம்மா என்று கூறப்படுகிறது. ஆனால் அவர் எப்படி புரிந்துக் கொண்டார்? அந்த குரு எங்கே? அங்கே வேறு உயிரினம் எதுவும் இல்லை. பிறகு அவர் எப்படி வேதத்தை புரிந்துக் கொண்டார்? கிருஷ்ணரே குருவாக இருந்தார், மேலும் அவர் எல்லோருடைய இதயத்திலும் நிலைபெற்றிருக்கிறார். ஈஷ்வர: ஸர்வ-பூதானாம் ஹ்ருத்-தேஷே (அ)ர்ஜுன திஷ்டதி (பகவத்-கீதை 18.61). ஆக அவர் (கிருஷ்ணர்) இதயத்திலிருந்து போதிக்கிறார். ஆக கிருஷ்ணர், சைத்ய-குருவாக, இதயத்திலிருந்து போதிக்கிறார் - அவர் கருணை மிக்கவர், மேலும் அவர் வெளியிலிருந்து தன் பிரதிநிதியை அனுப்புகிறார். சைத்ய-குரு மற்றும் குரு, இரண்டு வழியாகவும், கிருஷ்ணர் முயற்சி செய்துக் கொண்டிருக்கிறார். கிருஷ்ணர் உண்மையிலேயே கருணை மிக்கவர். ஆகையால் வேதங்கள் மனிதர்களால் உருவாக்கப்பட்ட புத்தகங்கள் அல்ல. வேத, அபௌருஷேய. அபௌருஷேய என்றால் உருவாக்கப்படாதது... நாம் வேதங்களை சாதாரணமான ஊகித்து உணர்ந்த புத்தகமாக எண்ணக் கூடாது. இல்லை. இது பக்குவமான அறிவு. இது பக்குவமான அறிவு. இதை, எந்த கலப்படமும் இல்லாமல், ஊகித்த பொருள் விளக்கமும் செய்யாமல், உள்ளபடி ஏற்றுக் கொள்ள வேண்டும். இது பகவானால் போதிக்கப்பட்டது. ஆகையால் பகவத்-கீதையும் ஒரு வேதம். அது கிருஷ்ணரால் சொல்லப்பட்டது. ஆக இதில் எதையும் சேர்க்கவோ, மாற்றவோ முடியாது. இதை உள்ளபடி ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் உங்களுக்கு சரியான கல்வி கிடைக்கும்.