TA/Prabhupada 0191 - இதோ இருக்கிறார்கள் குறைபாடற்ற மனிதர்கள்



Lecture on SB 6.1.52 -- Detroit, August 5, 1975

பிரபுபாதர்: கிருஷ்ணரின் கருணையால், குருவின் கருணையால், இருவரும்... ஒருவரின் கருணையை மட்டும் ஏற்றுக் கொள்ள முயற்சிக்காதீர்கள். குரு க்ருஷ்ண க்ருபாய பாய பக்தி-லதா-பீஜ. குருவின் கருணையால் ஒருவர் கிருஷ்ணரை அடைகிறார். மேலும் க்ருஷ்ண சேய் துமார, க்ருஷ்ண டைதே பாரோ. ஒரு குருவை அணுகுதல் என்றால் சும்மா அவர் மூலம் கிருஷ்ணரை வேண்டுதல். க்ருஷ்ண சேய் துமார. ஏனென்றால் கிருஷ்ணர் பக்தர்களுடைய கிருஷ்ணர். கிருஷ்ணர் எஜமானர் ஆவார், ஆனால் யாரால் கிருஷ்ணரை கட்டுப்படுத்த முடியும்? அவருடை பக்தர். கிருஷ்ணர் நித்தியமான கட்டுப்பாட்டாளர், ஆனால் அவர் பக்தரால் கட்டுப்படுத்தப்படுகிறார். அதாவது, கிருஷ்ணர் பக்தி-வட்சல ஆவார். எவ்வாறு என்றால் பெரிய தந்தை, உயர் நீதிமன்ற நீதிபதி மேலும்.... அங்கே ஒரு கதை இருக்கிறது அதாவது பிரதமர் மந்திரி க்லேட்‌ஸ்டோந், அவரை யாரோ பார்க்க வந்தார். மேலும் திரு க்லேட்‌ஸ்டோந் தகவல் அளித்தார் அதாவது "காத்திருங்கள். நான் ஒய்விலாது இருக்கிறேன்." ஆகையால் அவர் மணிக் கணக்கில் கார்த்திருந்தார், பிறகு அவர் துருவியறி நினைத்தார்: "இந்த பண்புள்ள மனிதர் என்ன செய்துக் கொண்டிருக்கிறார்?" ஆகையால் அவர் உள்ளே சென்று காண விரும்பினார், அதாவது... அவர் ஒரு குதிரையாகிவிட்டார், மேலும் அவருடைய குழந்தையை முதுகின்மேல் தூக்கிக் கொண்டிருந்தார். நீங்கள் பாருங்கள்? அந்த வேலையை அவர் செய்துக் கொண்டிருந்தார். பிரதம மந்திரி, அவர் பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறார், ஆனால் ஒரு குழந்தையின் பாசத்தால் அவர் கட்டுப்படுத்தப்பட்டுள்ளார். இதைத்தான் பாசம் என்கிறோம். ஆகையால் அதேபோல், கிருஷ்ணர் நித்தியமான கட்டுப்பாட்டாளர். ஈஸ்வர: பரம: க்ருஷ்ண: சக்-சித்-தானந்த -விக்ரஹ அனாதிர் ஆதிர் கோவிந்த: சர்வ-காரண-காரணம் (பிரச. 5.1) அவரே நித்தியமான கட்டுப்பாட்டாளர், ஆனால் அவர் அவருடைய பக்தர், ஸ்ரீமதி ராதாராணியால் கட்டுப்படுத்தப்படுகிறார். அவர் கட்டுப்படுத்தப்பட்டுள்ளார். ஆகையால் இதை எளிதாக புரிந்துக் கொள்ள முடியாது அவர்களிடையே இருந்த கடந்தக்கால நிகழ்வுகள் என்ன என்பதை... ஆனால் கிருஷ்ணர் பக்தரால் கட்டுப்படுத்தப்படுவதை விரும்பி ஏற்றுக் கொள்கிறார். அது கிருஷ்ணரின் குணம். எவ்வாறு என்றால் தாயார் யசோதாவைப் போல். தாயார் யசோதா கிருஷ்ணரை கட்டுப்படுத்தப்படுகிறார், அவரை கட்டிபோட்டுக் கொண்டு: " நீ மிகவும் சுட்டித்தனம் நிறைந்தவன், நான் உன்னை கட்டி போடுவேன்." தாயார் யசோதாவிடம் ஒரு கம்பு இருந்தது, மேலும் கிருஷ்ணர் அழுது கொண்டிருக்கிறார். கிருஷ்ணர் அழுது கொண்டிருக்கிறார். இந்த நிகழ்வுகளை நீங்கள் படியுங்கள். இது ஸ்ரீமத் பாகவதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது, குந்தியின் பிரார்த்தனையில், அவர் எவ்வாறு பாராட்டுகிறார் அதாவது "என் அன்புக்குரிய கிருஷ்ணா, நீங்கள் நித்தியமானவர். ஆனால் தாயார் யாசோதா கம்பைக் கண்டு நீங்கள் அழுதுக் கொண்டிருந்தீர்கள், அந்த காட்சியை நான் பார்க்க வேண்டும்." கிருஷ்ணர் பக்தி-வட்சல ஆவார் அதாவது அவர் நித்தியமான கட்டுப்பாட்டாளர். ஆனால் தாயார் யாசோதா போன்ற பக்தர், ராதாராணி போன்ற பக்தர், கோபியர்கள் போன்ற பக்தர்கள், மாடு மேய்க்கும் இளையர்கள் போன்ற பக்தர்கள், அவர்களால் கிருஷ்ணரை கட்டுப்படுத்த முடியும். அதுதான் விருந்தாவன வாழ்க்கை. ஆகையால் இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் உங்களை அங்கே அழைத்துச் செல்ல முயற்சிக்கிறது. இந்த முட்டாள்கள், அவர்கள் வழி தவறி வேறுபட்டு செல்கிறார்கள். இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தின் முக்கியத்துவம் என்ன என்பது அவர்களுக்கு தெரியவில்லை. அவர்கள் மனித சமூகத்திற்கு முதன்மையான பயனும், நிலையும் கொடுக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். பகவானுடன் இருக்கும் ஒருவராக இருக்க விரும்பவில்லை, ஆனால் பகவானை கட்டுப்படுத்தும் உரிமையை கொடுக்கிறார்கள். இதுதான் கிருஷ்ண பக்தி இயக்கம். மிக்க நன்றி. பக்தர்கள்: ஜாய்!