TA/Prabhupada 0200 - சிறு தவறு நேர்ந்தாலும் அனைத்து திட்டமும் சீரழிந்துவிடும்Lecture on CC Adi-lila 1.11 -- Mayapur, April 4, 1975

ஆகையால் அனைத்து வேத அமைப்பும் இவ்வாறாக வடிவமைக்கப்பட்டு அதாவது இறுதியில் ஒருவர் பிறப்பு, இறப்பு, முதுமை பிணி என்னும் செயல்முறையிலிருந்து காப்பாற்றபடுவார். நீண்ட காலத்திற்கு முன், விஸ்வாமித்ர முனி மஹாராஜா தசரதரிடம் ராம-லக்ஷ்மணரை வேண்டி வந்தார் அவர்களை காட்டிற்கு அழைத்துச் செல்ல, ஏனென்றால் ஒரு அசுரன் தொந்தரவு செய்துக் கொண்டிருந்தான். முனிவர்கள் கொல்ல இயலும், ஆனால் கொல்லும் தொழில் சத்தரியர்களைச் சேர்ந்தது. இதுதான் வேதியல் நாகரிகம். இது பிராமணரின் தொழில் அல்ல. ஆகையால் மஹாராஜா தசரதரிடமிருந்து விஸ்வாமித்ர முனி பெற்ற முதல் வரவேற்பு, அதாவது ஐஹிஸ்தம் யத் புனர்-ஜென்ம-ஜயாய: "நீங்கள் ஒரு... நீங்கள் உயர்ந்த முனிவர், மத குரு, நீங்கள் இந்த சமுதாயத்தை துறந்துவிட்டீர்கள். நீங்கள் தனியாக காட்டில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறீர்கள். இதன் நோக்கம் என்ன? இதன் நோக்கம் புனர்-ஜென்ம-ஜயாய, திருப்பித்திருப்பி பிறப்பு எடுப்பதை தவிர்க்க." இதுதான் அதன் நோக்கம். அதேபோல், எங்களுடைய, இந்த கிருஷ்ண பக்தி இயக்கமும் அதே நோக்கத்தைக் கொண்டது, புனர்-ஜென்ம-ஜயாய, திருப்பித்திருப்பி பிறப்பும் இறப்பும் தவிர்க்க. இதை நீங்கள் எப்பொழுதும் ஞாபகத்தில் கொள்ள வேண்டும். சிறு தவறு நேர்ந்தாலும் அனைத்து திட்டமும் சீரழிந்துவிடும், .சிறு தவறு. இயற்கை மிகவும் வலிமை வாய்ந்தது. தைவி ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா (பகவத் கீதை 7.14). மிக மிக வலிமை வாய்ந்தது. ஆகையால் நீங்கள் அனைவரும், அடவர்களும் பெண்களும், அமெரிக்காவிலிருந்து வந்திருப்பவர்களுக்கு, என் மனம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் புறக்கணிக்காதீர்கள். மிகவும் உக்கிரமாக இருங்கள். மேலும் மற்றோரு காரியமும் நான் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன், முக்கியமாக அமெரிக்கர்களிடம், அதாவது அமெரிக்காவிற்கு உலகத்தை காப்பாற்ற கூடிய சிறந்த ஆறறல் உள்ளது, ஆகையால் நீங்கள் உங்கள் நாட்டில் சிறந்த சமயச் சொற்பொழிவாற்றினால்... ஆனால் அனைவருக்கும் இந்த ஆர்வம் இருக்காது, ஆனால் உங்கள் நாட்டில் ஒரு பகுதியில் உள்ளவர்கள் மட்டும், நீங்கள் அவர்களை கிருஷ்ணர் உணர்வு உள்ளவர்களாக திருப்பலாம், அது உலகிற்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் நோக்கம் ஒரே மாதிரியே, புனர்-ஜென்ம-ஜயாய: பிறப்பு, இறப்பு, முதுமை என்னும் இந்த முறையிலிருந்து வெற்றி கொள்ள. இது கற்பனையல்ல; இது நிதர்சனம். மக்கள் அலட்சியம் செய்கிறார்கள். ஆனால் நீங்கள் உங்கள்மக்களுக்கு கற்பிக்கலாம்; இல்லையென்றால், அனைத்து மனித சமுதாயமும் ஆபத்துக்கு ஆளாகும். அவர்கள் மிருகங்களைப் போன்றவர்கள், எதுவும் இல்லாமல்... அதிலும் இந்த பொது உடமைவாதி மிக மிக ஆபத்தானவர்கள் - ஒரு பெரிய மிருகத்தை உருவாக்குவதில். அவர்கள் ஏற்கனவே மிருகங்கள், மேலும் இந்த இயக்கம் பெரிய மிருகங்களை உருவாக்குகிறது. ஆகையால் நான் அமெரிக்கர்களிடம் உரையாடுகிறேன் ஏனென்றால் அமெரிக்கர்கள் பொது உடமைவாதிகளின் இயக்கத்திற்கு கடுமையாக எதிர்ப்பு காட்டுகிறார்கள். மேலும் இதை எதிரிடையாகச் சேயல்படுத்தலாம் ஏனென்றால் இந்த செயல்முறை குறிப்பிட்ட காலத்திலிருந்து நீண்ட காலமாக நடப்பில் உள்ளது. தேவ அசுர, தேவாசுர, தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடக்கும் போர். ஆகையால் அதேபோன்ற போர் ஆனால் வேறு பெயரில் அங்கு நடக்கிறது, "பொது உடமைவாதிகளும் பணக்கார முதலாளிகளுக்கும்." ஆனால் பணக்கார முதலாளிகளும் எண்பது சதவிகிதம், தொண்ணூறு சதவிகிதம் அசுரர்கள். ஆம். ஏனென்றால் அவர்களுக்கு இறை விஞ்ஞானம் தெரியாது. அதுதான் அசுர நெறிமுறை. ஆகையால் உங்கள் நாட்டில் அதைச் செய்ய நல்ல வாய்ப்பு உள்ளது, அல்லது அவர்கள் தங்களுடைய அசுர கொள்கையை சீர்செய்ய வேண்டும். அதன் பிறகு மற்ற அசுரர்களுடன் பலத்துடன் போர் புரிய சிறந்த வழிவகை, கிடைக்கும். ஏனென்றால் நாம் தேவவானால்... தேவ என்றால் வைஷ்ணவ. விஷ்ணு-பக்தொ பாவத் தேவ ஆஸுரஸ் தத்-விபரியய:. பகவான் விஷ்ணுவின் பக்தர்கள், அவர்கள் தேவ: அல்லது, தேவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். மேலும் எதிர் எண்ணிக்கையில் உள்ளவர்கள்...... எதிர் எண்ணிக்கையில், அவர்களுக்கும், ஏதோ ஒரு பகவான் இருக்கிறார். எவ்வாறு என்றால் அசுரர்கள், அவர்கள் முக்கியமாக பகவான் சிவனை வழிபடுகிறார்கள். அல்லது ராவண, அதற்கு உதாரணம்... நாம் தேவையில்லாமல் குற்றம் கூறவில்லை. ராவண ஓர் அபாரமான அசுரன், ஆனால் அவர் ஓர் பக்தராக இருந்தார்... பகவான் சிவனை வழிபடுவது என்றால் இலாபம் பெற சில ஜட பயன்பேற. மேலும் விஷ்ணுவை வழிபடுவதில், அங்கே ஜட நன்மை உண்டு. அது விஷ்ணுவால் வழங்கப்படுவது. அது கர்ம அல்ல. ஆனால் வைஷ்ணவ, அவர்கள் எந்த ஜட நன்மைகளுக்கும் பேரவா கொள்வதில்லை. ஜட நன்மைகள் தன்னியக்கமாக வரும். ஆனால் அவர்கள், அவர்கள் நாட்டம் கொள்வதில்லை. அந்யாபிலாஷிதா-ஸூன்யம (பக்தி ரசாம்ருத சிந்து 1.1.11). ஜட நன்மைகள் அவர்கள் வாழ்க்கையின் நோக்கம் அல்ல. அவர்கள் வாழ்க்கையின் நோக்கம் - எவ்வாறு விஷ்ணுவை எவ்வாறு திருப்திபடுத்துவது, பகவான் விஷ்ணு. அதுதான் வைஷ்ணவ. விஷ்ணுர் அஸ்ய தேவதா:. ந தே.... மேலும் அசுரர்கள், அவர்களுக்குத் தெரியாது அதாவது வைஷ்ணவராவது, அதுதான் வாழ்க்கையின் உயர்ந்த பூரணத்துவம் என்று. அவர்களுக்கு அது தெரியாது. ஆகையால் எவ்வகையிலேனும் எங்களுடைய வேண்டுகோள் யாதெனில் நீங்கள் வாலிபர்கள் அனைவரும் இந்த வைஷ்ணவிஸம் வழி வந்திருப்பவர்கள், மேலும் இங்கே நல்ல வாய்ப்பு உள்ளது இந்த சமயக் கோட்பாட்டு முறையை உங்கள் நாட்டில் சொற்பொழிவாற்ற, மற்ற நாடுகளில் அவ்வளவாக வெற்றிகரமாக இல்லையென்றாலும், உங்கள் நாட்டில் நீங்கள் சிறந்த வெற்றி பெறுவீர்கள். இங்கு நல்ல ஆற்றல் உள்ளது. அதை இந்த அசுர கொள்கையுடன் சண்டையிட இன்னும் வலிமையாக்க முயற்சி செய்யுங்கள். மிக்க நன்றி.