TA/Prabhupada 0203 - ஹரே கிருஷ்ண இயக்கத்தை நிறுத்திவிடாதீர்கள்



Lecture and Initiation -- Chicago, July 10, 1975

பிரபுபாதர்: யக்ஞ, உயிர் பலி..... யக்ஞ-தான-தபஹ-க்ரியா. மனித வாழ்க்கை யக்ஞ செயல்படுத்தவும், அறம் செய்யவும், மேலும் கடுமையான நோன்பு பயிற்சி செய்யவும் ஏற்பட்டது. மனித வாழ்க்கை என்றால், மூன்று காரியங்கள். மனித வாழ்க்கை பூனைகளையும் நாய்களையும் போல் வாழ்வதற்காக அல்ல. அது தோல்வியாகும். அது போன்ற நாகரிகம், நாய் நாகரிகம், மனித வாழ்க்கையின் தோல்வியாகும். மனித வாழ்க்கை மூன்று காரியங்களுக்கானது: யக்ஞ-தான-தபஹ-க்ரியா. தியாகம் செய்வது எப்படி, தர்மம் செய்வது எப்படி, என்பதை ஒருவர் அறிந்திருக்க வேண்டும், மேலும் எவ்வாறு துறவறம் மேற்க்கொள்வது என்று பயிற்சி பெறுவது. இதுதான் மனித வாழ்க்கை. ஆகையால் யக்ஞ-தான-தபஸ்ய, மற்ற யுகங்களில் அவர்கள் வழிமுறைக் கேற்ப செயல் புரிந்துக் கொண்டிருந்தார்கள். எவ்வாறு என்றால் சத்திய-யுகத்தில், வால்மீகி முனி போல், அவர் துறவறம், தியானத்தை, அறுபதாயிரம் ஆண்டுகளுக்கு மேற்கொண்டார். அந்த காலத்தில் மக்கள் நூறாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தார்கள். அது இப்பொழுது சாத்தியமல்ல. அந்த யுகத்தில் தியானம் சாத்தியமாக இருந்தது, ஆனால் இப்பொழுது அது சாத்தியமல்ல. ஆகையினால் சாஸ்திரம் பரிந்துரை செய்கிறது, அதாவது யக்ஞாய்: சங்கீர்தன-ப்ராயை: "நீங்கள் இந்த யக்ஞா, சங்கீர்தன, செயல்படுத்துங்கள்." ஆகையால் சங்கீர்தன-யக்ஞா செயல்படுத்துவதன் மூலம், நீங்கள் அதே கர்மபலன் அடைவீர்கள். வால்மீகி முனி தியானத்தை, அறுபதாயிரம் ஆண்டுகளுக்கு மேற்கொண்ட பின்னர் பலன் பெற்றார் அதேபோல், நீங்களும் அதே பலனை பெறலாம் ஒருவேளை சில நாட்களுக்கு வெறுமனே சங்கீர்தன-யக்ஞா செயல்படுத்துவதன் மூலம்.— அது மிக கருணை மிக்கது. ஆகையால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் ஏனென்றால் இந்த மேற்கத்திய நாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில், நீங்கள், அதிஸ்டமிக்க ஆண்களும் பெண்களும், இந்த சங்கீர்தன-யக்ஞவில் ஐக்கியமானீர்கள். மக்கள் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கும் மிகவும் திருப்தியாக இருக்கிறது. ஆகையால் இந்த யக்ஞ, நீங்கள் விக்ரகத்தை பேருந்துகளில் எடுத்துச் சென்றதால், உட்புறம் சென்று மேலும் யக்ஞ செயல்படுத்துவது..... உங்கள் நாடு முழுவதும் தேசியமயமாக இந்த சமயக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளும்வரை இந்த செய்முறையை தொடருங்கள். பக்தர்கள்: ஜேய்! பிரபுபாதர்: அவர்கள் அதை ஏற்றுக் கொள்வார்கள். இது சைதன்ய மஹாபிரபுவால் முன்னுரைக்கப்பட்டது, ப்ருதிவீதே ஆச்சே யத நகராதி-கராம ஸர்வத்ர ப்ரசார ஹைபெ மொர நாம சைதன்ய மஹாபிரபுவின் விருப்பம் யாதெனில் ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு சிறு நகரத்திலும், ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு நகரத்திலும், இந்த சங்கீர்தன இயக்கம் அங்கு இருக்கும், மேலும் மக்கள் சைதன்ய மஹாபிரபுவிற்கான தங்கள் கடமையை உணர்வார்கள்: "என் பகவானே, தாங்கள் எங்களுக்கு உன்னதமான பொருளை கொடுத்து இருக்கிறீர்கள்." இதுதான் தீர்க்க தரிசனம். வெறுமனே நாம் இயன்றவரை சிறப்பாக முயற்சி செய்ய வேண்டும். ஆகையால் இது மிகவும் கடினமானதல்ல. நீங்கள் ஸ்ரீ மூர்த்தியை முறையுடன் அமர்த்திவிட்டிர்கள். வேறுபட்ட பேருந்துகளில் எடுத்து மேலும் ஒவ்வொரு நகரங்காளாக, ஒவ்வொரு சிறு நகரங்காளாக, ஒவ்வொரு கிராமமாக செல்லுங்கள். மேலும் உங்களுக்கு இப்பொழுது அனுபவம் இருக்கிறது, ஆகையால் இந்த இயக்கத்தை விரிவாக்குங்கள். நான் உங்களிடம் பலமுறை கூறியது போல் அதாவது உங்கள் நாடு, அமெரிக்கா, செல்வ வளமுள்ளது, மேலும் அவர்களுக்கு தேவையானது இது மட்டுமே, சங்கீர்தன... பிறகு அவர்கள் நிறைவு பெறுவார்கள். நேற்று நான் பல விஷயங்கலைப் பற்றி கலந்துரையாடிக் கொண்டிருந்தேன் - ஒரு வேளை நீங்கள் செய்தித்தாளில் பார்த்திருப்பீர்கள் - அதாவது ஒரு தீவிர முழுச்சோதனை, ஆன்மீக முழுச்சோதனை தேவைப்படுகிறது. தற்போது, இந்த நேரத்தில் காரியங்கள் நல்ல முறையில் செல்லவில்லை. பௌதிக அளவில், வருத்தப்படாதீர்கள் ஏனென்றால் இந்த பந்தயம் நம் ஆன்மீக வாழ்க்கைக்கு உகந்ததல்ல. பௌதிக அளவில் முதிர்சியடையுங்கள், ஆனால் உங்கள் ஆன்மீக கடமையையும் ஆன்மீக அடையாளத்தையும் மறந்துவிடாதீர்கள். பிறகு அது தொலைந்துவிடும். பிறகு அது ச்ரமஏவ ஹி கேவலம் (ஸ்ரீமத் பாகவதம் 1.2.8), வெறுமனே ஒன்றுமில்லாததிற்கு வேலை செய்துக் கொண்டிருப்பதாகும். எவ்வாறு என்றால் நிலாவிற்கு குறிப்பிட்ட நோக்கத்துடன் பயணம் செய்தது போல், வெறுமனே காலத்தை வீணாக்கி மேலும் தேவையற்ற பணச் செலவு. பல கோடிக் கணக்கான பணத்தை நீங்கள் வீண் அடித்தீர்கள், மேலும் உங்களுக்கு என்ன கிடைத்தது? சிறிதளவு தூசி, அவ்வளவு தான். அவ்விதமாக முட்டாள்தனமாக இருக்காதீர்கள். நடைமுறைக் கேற்ப இருங்கள். இவ்வளவு பெரிய தொகையிலான பணம், டாலரில், செலவழிக்கப்பட்டது, கிருஷ்ண பக்தி இயக்கத்தை உங்கள் நாடு முழுவதும் பரப்புவதில் இருந்தால், பிறகு அளவற்ற பயன்கள் பெற்று இருப்பீர்கள். எவ்வகையாயினும், நாங்கள் எதுவும் கூற இயலாது. உங்கள் பணம் நீங்கள் வீண் செலவு செய்யலாம். அது உங்கள் வேலை. ஆனால் நாங்கள் அதிகாரிகளுக்கும் விவேகமுள்ளவர்களுக்கும் விண்ணப்பிக்கிறோம், அதாவது இந்த சங்கீர்தன இயக்கத்தை ஏற்றுக் கொள்ளுங்கள், முக்கியமாக அமெரிக்காவில், மேலும் உலகின் மற்ற பகுதிகளுக்கு, ஐரொப்பா, ஆசியாவிற்கும், விரிவுபடுத்துங்கள். உங்களுக்கு ஏற்கனவே உலகிலேயே பணக்கார நாடு என்ற மரியாதை இருக்கிறது. உங்களுக்கு அறிவாற்றல் உள்ளது. உங்களுக்கு அனைத்தும் இருக்கிறது. சும்மா இந்த இயக்கத்தை, கிருஷ்ண பக்தி இயக்கத்தை, பொறுமையுடனும், மேலும் ஊக்கத்துடனும், அறிவாற்றலுடனும், ஏற்றுக் கொள்ளுங்கள். இது மிகவும் சுலபமானது. உங்களுக்கு ஏற்கனவே அனுபவம் உள்ளது. அதை நிறுத்திவிடாதீர்கள். மேன்மேலும் அதிகமாக்குங்கள். உங்கள் நாடு மகிழ்ச்சி அடையும், மேலும் இந்த உலகம் முழுவதும் மகிழ்ச்சி அடையும். மிக்க நன்றி. பக்தர்கள்: ஜேய்!