TA/Prabhupada 0205 - மக்கள் இதை ஏற்றுக்கொள்வார்கள் என்று ஒருபோதும் நான் எதிர்பார்க்கவில்லை
Morning Walk -- May 20, 1975, Melbourne
பிரபுபாதர்: ஒருவன் கிருஷ்ண உணர்வை அடைந்தானா என்பதை நீங்கள் சோதித்து பார்க்க தேவையில்லை. கிருஷ்ண உணர்வை அடைவது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. அது அவ்வளவு சுலபம் அல்ல. அதற்கு பல ஜென்மங்கள் எடுக்கும். பஹுனாம் ஜன்மனாம் அந்தே (பகவத் கீதை 7.19) ஆனால் நீங்கள் உங்கள் கடமையை செய்து தான் ஆகவேண்டும். வெளியே சென்று பிரச்சாரம் செய்யுங்கள். யாரே தேக , தாரே கஹ 'க்ருஷ்ண'-உபதேஷ (சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை 7.128). அத்துடன் உங்கள் கடமை முடிந்தது. அவரை மாற்ற நீங்கள் முயற்சி செய்யத்தான் செய்வீர்கள். அவர் மாற மறுத்தால், நீங்கள் உங்களது கடமையிலிருந்து வழிதவறியதாக அர்த்தம் ஆகாது. நீங்கள் சாதாரணமாக சென்று பேசவேண்டியது தான். உதாரணத்திற்கு, நான் உங்கள் நாட்டிற்கு வந்தபோது, நான் எந்த வெற்றியையும் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் எனக்கு தெரியும், "தகாத உடலுறவு கூடாது, மாமிசம் உண்ணுதல் கூடாது" என்று நான் கூறினால் என்னை உடனேயே நிராகரிகரித்து விடுவார்கள். (சிரிப்பு). ஆக எனக்கு நம்பிக்கையே இல்லை. பக்தர்(1): அவர்கள் அவைகளுக்கு அடிமையாகிவிட்டனர். பிரபுபாதர்: ஆமாம். ஆனால் நீங்கள் என்னை ஏற்றுக்கொண்டது உங்கள் நல்ல மனசு. அதை நான் எதிர்பார்க்கவில்லை. "இந்த மக்கள் என்னை ஏற்றுக்கொள்வார்கள்" என நான் எதிர்பார்க்கவே இல்லை. ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. ஹரி ஷௌரி: ஆக நாம் கிருஷ்ணரை மட்டுமே முழுமையாக நம்பி இருந்தால்... பிரபுபாதர் : அது மட்டும் தான் நம் கடமை. ஹரி ஷௌரி: நாம் பலனை எதிர்பார்த்தால் பிறகு... பிரபுபாதர்: மேலும் ஆன்மீக குரு எப்படி பரிந்துரைக்கிறாரோ, நாம் அப்படியே நம் கடமைகளை நிறைவேற்ற வேண்டும். Guru-kṛṣṇa-kṛpāya (CC Madhya 19.151). குரு-கிருஷ்ண-க்ருபாய (சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை 19.151) அப்பொழுதுதான் இருவரிடமிருந்தும்... அதாவது ஆன்மீக குரு மற்றும் கிருஷ்ணரிடமிருந்தும் நமக்கு அனுக்கிரகம் கிடைக்கும். மற்றும் அது தான் வெற்றி.