TA/Prabhupada 0207 - பொறுப்பற்ற வாழ்க்கை வாழாதீர்கள்



Lecture on SB 6.1.16 -- Denver, June 29, 1975

தூய்மைப்படுத்தும் முறையைப் பற்றி நாம் கலந்துரையாடிக் கொண்டிருக்கிறோம். பலவிதமான முறைகள் விவரிக்கப்பட்டது, ப்ராயசித்தமும் தபஸ்ய மூலமும். நாம் கலந்துரையாடிவிட்டோம். அதன் பிறகு கேவல்யா பக்த. பக்தி அனைத்தையும் உள்ளடக்கியது - கர்ம, ஞான, யோக, அனைத்தும். மேலும் அது தனிப்பட்ட முறையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது, அதாவது எளிமையாகவும் மேலும் பல முறைகளிலும், அங்கே சாத்தியம் உள்ளது, ஆனால் அது ஒருவேளை வெற்றிகரமாக அமையாது. ஆனால் நாம் இந்த முறையை பின்பற்றினால், பிறகு பக்தி மயத் தொண்டு உறுதி. ஆகையால் இந்த தூய்மைப்படுத்தும் முறை என்றால் நிவ்ருத்தி-மார்க. மேலும் ப்ரவருத்தி-மார்க என்றால் நாம் எங்கே போகிறோம் என்ற அறிவு இல்லாமல் விரைந்து செல்வது - நாம் அனைத்தும் செய்கிறோம் நமக்கு பிடித்த எதுவாயினும். அதைத்தான் ப்ரவருத்தி-மார்க என்று கூறுகிறோம். பொதுவாக மக்கள் ப்ரவருத்தி-மார்கத்தில் ஈடுபட்டிருப்பார்கள். அதிலும் இந்த யுகத்தில், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று அவர்கள் கவலை கொள்ளவில்லை. ஆகையினால் அவர்கள் துயர் இன்றி இருக்கிறார்கள் அதாவது "இறப்பிற்குப் பின் பிறப்பு இல்லை. இந்த வாழ்க்கையை இயன்ற அளவிற்கு மிகச் சிறப்பாக அனுபவிப்போம். பிறகு இறப்புக்குப் பின், எது நடந்தாலும் பரவாயில்லை." முதன் முதலாக, அவர்கள் மறுபிறவியை நம்ப மறுத்தார்கள். மேலும் மறுபிறவி இருந்தால் கூட, அவர்கள் பூனையாகவும் நாயாகவும் பிறந்தால் கூட, அவர்கள் கவலை கொள்ளவில்லை. இதுதான் நவ நாகரிகத்தில் உள்ள அனுபவம், பொறுப்பற்ற வாழ்க்கை. ஆனால் நம் கிருஷ்ண பக்தி இயக்கம் மக்களுக்கு கற்பித்துக் கொண்டிருப்பது யாதெனில் " பொறுப்பற்ற வாழ்க்கை வாழாதீர்கள்." உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம், அதாவது நீங்கள் கூறலாம், "அங்கே மறுபிறவி இல்லை என்று." ஆனால் நான் விவாதம் செய்தால், "ஒருவேளை அங்கே மறுபிறவி இருந்தால்..." தற்போது இதுவும் விவாதம் தான், ஏனென்றால் ஒருவரும்... அறியாமையில் இருப்பவர்கள், அவர்களுக்கு தெரியாது அடுத்து மறுபிறவி இருக்கிறதா இல்லையா என்று. ஆகையால் நீங்கள் விவாதிக்கிறீர்கள், "அங்கே மறுபிறவி இல்லை," ஆனால் உங்களுக்கு தெரியாது அடுத்து மறுபிறவி இருக்கிறதா என்று. அது உங்கள் அறிவில் தோன்றவில்லை. ஆகையால் ஒருவேளை நீங்கள் இரண்டு வழியிலும் எடுத்துக் கொண்டு அதைப் பற்றி யோசிக்க நேர்ந்தால்.... நீங்கள் வெறுமனே அங்கே மறுபிறவி இல்லை என்னும் கருத்தில் யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள். இப்பொழுது, நீங்கள் ஏன் என்னுடைய முன்மொழிவை ஏற்றுக் கொள்ளக் கூடாது, "அங்கே மறுபிறவி இருந்தால்"? ஏனென்றால் நீங்கள் தெளிவாக இல்லை, இரண்டில் எதுவாகிலும் இருக்கலாம். நாங்கள் கூறுகிறோம் மறுபிறவி இருக்கிறது. நாங்கள் அந்த உதாரணத்தை ஏற்றுக்கொள்கிறோம்: எவ்வாறு என்றால் இந்த பிள்ளைக்கு அதனுடைய மறுபிறவி உள்ளது. ஒரு பிள்ளை சொல்லலாம். "அங்கே பிறவி மறுபிறவி இல்லை." ஆனால் உண்மையிலேயே அது உண்மைச் செய்தியல்ல. உண்மை யாதெனில், அங்கே மறுபிறவி இருக்கிறது. பிள்ளையின் இந்த உடல் மாறிவிடும் மேலும் அவன் ஒரு பையனாகிவிடுவான். மேலும் பையனின் இந்த உடல் மாறிவிடும், அவன் இளமையான வாலிபனாகிவிடுவான். அதுதான் உண்மை. ஆனால் வெறுமனே வீண் பிடிவாதமாக நீங்கள் மறுபிறவி இல்லை என்று சொன்னால்... அதை நீங்கள் கூறலாம். ஆனால் இந்த விவாதத்தை எடுத்துக் கொள்ளுங்கள்: மறுபிறவி இருந்தால், பிறகு நீங்கள் எவ்வளவு தாறுமாறாக, உங்கள் எதிர்காலத்தை இருளாக்குகிறிர்கள்? அதே உதாரணம்: ஒரு பிள்ளை பள்ளிக்குச் செல்லவில்லை என்றால், கல்வி கற்கவில்லை என்றால், அவர் இவ்வாறு நினத்தால், "இந்த வாழ்க்கையைவிட வேறு எந்த வாழ்க்கையும் இல்லை, நாள் முழுவதும் நான் விளையாடலாம். நான் ஏன் பள்ளிக்குச் செல்ல வேண்டும்?" அவன் அவ்வாறு கூறலாம், ஆனால் அங்கு வாழ்க்கை இருக்கிறது, மேலும் அவன் கல்வி கற்கவில்லை என்றால், மறுபிறவியில், அவன் வாலிபனாகும் போது, அவன் சரியான வேளையில் நீர்ணயபடவில்லை என்றால் பிறகு அவன் துன்பப்படுவான். இது பொறுப்பற்ற வாழ்க்கையாகும். ஆகையால் நாம் மறுபிறவி எடுக்கும் முன்பாக, நம் பாவம் நிறைந்த வாழ்க்கையில் இருந்து விடுபட வேண்டும். இல்லையென்றால் நாம் இதைவிட நல்ல வாழ்க்கையை பெறப்போவதில்லை. முக்கியமாக கிருஷ்ணரின் திருவடிகளில், வீடுபேறு அடைதல், ஒருவர் பாவம் நிறைந்த வாழ்க்கையின் பலன்களை இந்த பிறவியிலேயே முடித்துவிட வேண்டும். பகவத் கீதையில் நீங்கள் காண்பீர்கள், யேஷாம் த்வந்தகதம் பாபம் ஜனானாம் புண்யகர்மணாம் தே த்வந்த்வமோஹநிர்முக்தா பஜந்தே மாம் த்ருடவ்ருதா: (பகவத் கீதை 7.28). கிருஷ்ணரின் விசுவாசமுள்ள பக்தராக, பூரணத்துவம் பெற்ற பக்தராக வேண்டுமென்றால், ஒருவர் பாவச் செயல்கள் நிறைந்த வாழ்க்கையில் இருந்து விடுபட வேண்டும். யேஷாம் த்வந்தகதம் பாபம். இனிமேலும் பாவச் செயல்கள் எதிலும் ஈடுபடுவதில்லை. மேலும் முற்பிறவியில் செய்த பாவச் செயல்கள் எதுவாயினும், அதுவும் செல்லுபடியற்றதாகிவிடும். அதுவும் இல்லாதாகிவிடும். மேலும் அதற்கு எதிர் நடவடிக்கை இல்லை. யேஷாம் த்வந்தகதம் பாபம் ஜனானாம் புண்யகர்மணாம். ஆகையால் மக்கள் பாவச் செயல்களில் அல்லது பக்தி நடவடிக்கைகளில் ஈடுபாடு கொண்டிருக்கிறார்கள். ஆகையால் தங்களுடைய கடந்த கால பாவச் செயல்களின் பலனிலிருந்து விடுபடாதவார்கள் ஆனால் தற்சமயம், அவர்கள் வெறுமனே பக்தி நடவடிக்கைகளில் ஈடுபாடு கொண்டிருந்தால், அத்தகைய நபர், யேஷாம் த்வந்தகதம் பாபம் ஜனானாம் புண்யகர்மணாம், தே, அத்தகைய நபர், த்வந்த்வ-மோஹ-நிர்முக்தா, எந்தவித தயக்கமும், எந்தவித சந்தேகமும் இல்லாமல், பஜந்தே மாம் த்ருடவ்ருதா: அதுதான் இந்த, ஆகையால் கிருஷ்ணருக்கு சேவை செய்வதில் உறுதியான நம்பிக்கையுடனும் பக்தியுடனும் ஈடுபடும் எவரும், புரிந்துக் கொள்ள வேண்டியது யாதெனில் அவர், அனைத்து பாவச் செயல்களின் நடவடிக்கைகளில் இருந்தும் இப்பொழுது விடுதலை பெற்றுவிட்டார்.