TA/Prabhupada 0278 - சிஷ்யர்கள் என்றால் ஒழுங்கு முறையை ஏற்றுக் கொள்பவர்கள்



Lecture on BG 7.2 -- San Francisco, September 11, 1968

இந்த அறிவை கிருஷ்ணருடன் உறவு கொண்டு அவரிடம் சரணடைந்த ஒரு ஆத்மாவால் தான் புரிந்துக் கொள்ள முடியும். சரணடையாமல், கட்டுப்படுத்துபவரையும், அவருடைய சக்தியையும், அனைத்தையும் எவ்வாறு கட்டுப்படுத்துகிறார் என்பதையும், புரிந்துக் கொள்வது மிகவும் கடினம். துப்யாம் பரபன்னாய அசெஷத: ஸமக்ரேண உபடெக்ஷியாமி. இதுதான் நிலைமை. பிற அத்தியாயங்களில் நீங்கள் காண்பீர்கள் கிருஷ்ணர் கூறுகிறார்,


நாஹம் ப்ரகாஷ: ஸர்வஸய (பகவத் கீதை 7.25).


எவ்வாறு என்றால் நீங்கள் எந்த கல்வி நிலையங்களுக்குச் சென்றாலும், அந்த நிறுவனத்தின் விதிகள் விதிமுறைகளுக்கு நீங்களே சரணடையாவிட்டால், அந்த நிறுவனாத்தால் தெரிவிக்கப்படும் அறிவினை எவ்வாறு சாதகமாக்கிக் கொள்வீர்கள்? எங்கும், எவ்விடத்திலும் நீங்கள் ஏதாவது பெற வேண்டும் என்றால், நீங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும், அல்லது நீங்கள் விதிமுறைகளுக்கு சரணடையப்பட வேண்டும். எவ்வாறு என்றால் எங்கள் வகுப்புகளில் நாங்கள் பகவத் கீதையிலிருந்து சில படிப்பினை விளக்குகிறோம், மேலும் நீங்கள் இந்த வகுப்பின் விதிகளையும் விதிமுறைகளையும் பின்பற்றவில்லை என்றால், நீங்கள் அறிவை பெறுவது சாத்தியமல்ல. அதே போல், கட்டுப்படுத்துபவரின் முழுமையான அறிவும் மேலும் கட்டுப்படுத்தும் செயல்முறையும் அர்ஜுன்னைப் போல் கிருஷ்ணரிடம் சரணடைந்தால் ஒருவரால் புரிந்துக் கொள்ள முடியும். ஒருவர் சரணடைந்த ஆத்மாவாக இல்லையெனில், அது சாத்தியமல்ல. நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ளுங்கள் கிருஷ்ணர், அர்ஜுன் தானே கிருஷ்ணரிடம் சரணடைந்தார்.


சிஷ்யஸ்தே 'ஹம் ஷாதி மாம் த்வாம் ப்ரபன்னம் (பகவத் கீதை 2.7)


ஆகையினால் கிருஷ்ணரும் அவரிடம் பேசிக் கொண்டிருக்கிறார். உண்மையிலேயே, வேதத்தின் இந்த சம்பாஷணை செயல்படுத்தக் கூடாது, இருப்பினும் பேச்சாளருக்கும் பார்வையாளர்களுக்கும் உறவுமுறை இருந்தால். ஆகையால் பார்வையாளர் என்றால் சிஷ்யர்கள். சிஷ்யர்கள் என்றால் ஒழுங்கு முறையை ஏற்றுக் கொள்பவர்கள். சிஷ்ய. சிஷ்ய. துல்லியமான சமஸ்கிருத வார்த்தை சிஷ்ய. ஒரு சிஷ்ய என்றால்... அங்கு வினைச்சொல் இருக்கிறது, ஷாஸ் என்று அழைக்கப்படுகிறது. ஷாஸ் என்றால் கட்டுப்படுத்துதல். ஷாஸ்ஸிலிருந்து, "சாஸ்திரம்" வாந்தது. சாஸ்திரம் என்றால் கட்டுப்படுத்தும் புத்தகங்கள். மேலும் ஷாஸ்ஸிலிருந்து, சாஸ்திரம். சாஸ்திரம் என்றால் ஆயுதம். விவாதங்கள் தோல்வியடையும் போது, காரணங்கள் தோல்வியடையும்... எவ்வாறு என்றால் மாநில கட்டுப்பாட்டைப் போல். முதலில் அவர்கள் உங்களுக்கு சட்டத்தைக் கொடுப்பார்கள். நீங்கள் சட்டத்தை எதிர்த்தால், நீங்கள் விதிமுறை புத்தகங்களை பின்பற்றவில்லை, அதாவது சாஸ்திர, பிறகு அடுத்த கட்டம் சாஸ்திர. சாஸ்திர என்றால் ஆயுதங்கள். நீங்கள் அரசாங்கத்தின் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால், வலது பக்கம் விலகுங்கள், பிறகு அங்கு காவல்துறையின் கைத்தடி இருக்கிறது - சாஸ்திர.ஆகையால் நீங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். நீங்கள் பண்புள்ள மனிதராக இருந்தால், பின் சாஸ்திரத்தின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு இருப்பீர்கள். மேலும் நீங்கள் எதிர்த்து நின்றால், பிறகு அங்கு துர்க்காதேவியின் திரிசூலம் இருக்கிறது. நீங்கள் துர்க்காதேவியை பார்த்திருக்கிறீர்களா, அந்த சித்திரம், திரிசூலம், மும்மடங்கு அவலநிலை. நீங்கள் மீறக் கூடாது, நான் கூறுவதாவது, விதிகளும் விதிமுறைகளையும் நீங்கள் மீறக் கூடாது. அரசாங்கத்தைப் போல், அதேபோல் கிருஷ்ணரின் நித்தியமான அரசாங்கமும். அது சத்தியமல்ல.

உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள் அங்கு சில ஆரோக்கியமான விதிகள் இருக்கின்றன. நாம் அதிகமாக உண்டால், பிறகு நீங்கள் சில நோயால் கட்டுப்படுத்தப்படுகிறிர்கள். உங்களுக்கு அஜீரணம் ஏற்படும் மேலும் மருத்துவர் மூன்று நாட்களுக்கு சாப்பிட வேண்டாம் என்று அறிவுரை அளிப்பார். ஆகையால் அங்கு கட்டுப்பாடு இருக்கும். இயற்கையாக, இயற்கை என்றால் பகவானின் சட்டம், தன்னிச்சையாக வேலை செய்கிறது. முட்டாள்தனமான மக்கள் பகவானின் சட்டத்தைப் பார்பதில்லை, ஆனால் பகவானின் சட்டம் அங்கிருக்கிரது. சூரியன் சரியான நேரத்தில் உதிக்கிறது, சந்திரன் சரியான நேரத்தில் தோன்றுகிறது. முதல் வருடம், முதலில் ஜனவரி, சரியான நேரத்தில் தோன்றியது. ஆகையால் அங்கு கட்டுப்பாடு இருக்கிறது. ஆனால் முட்டாள்தனமான மக்கள், அதைப் பார்ப்பதில்லை. அனைத்தும் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆகையால் பகவானை அறிந்துக் கொள்ளவும் மேலும் எவ்வாறு காரியங்கள் இயங்குகின்றன, அவை எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகிறன, இந்த காரியங்கள் தெரிந்துக் கொள்ளப்பட வேண்டியவை. நாம் வெறுமனே மிகையுனர்ச்சியால் செல்லக் கூடாது. மதம்சார்ந்த மிகையுணர்ச்சி கண்மூடித்தனமாக பின்பற்றுபவர்களுக்கு நல்லது. ஆனால் தற்கால நிலையில், மக்கள் கல்வியில் முன்னேற்றம் அடைகிறார்கள். ஆகையால் பகவத்-கீதை உங்களுக்கு முழு தகவல் அளிக்கிறது அப்போதுதான் நீங்கள் பகவானை உங்கள் காரணத்துடன், உங்கள் விவாதத்துடன், உங்கள் அறிவுக்கு ஏற்ப ஏற்றுக் கொள்வீர்கள். இது கண்மூடித்தனமாக பின்பற்றுவதல்ல. கிருஷ்ணர் உணர்வு மிகையுனர்ச்சி மிக்கதல்ல. அது அறிவாலும் நடைமுறைக்குரிய அறிவாலும் ஆதரிக்கப்பட்டது. விக்ஞானம்.

ஞானம் விக்ஞான ஸஹிதம்

ஆகையால் விக்ஞான ஸஹிதம் இல்லாமல்... மேலும் இதன் செயல்முறை யாதெனில் இந்த அறிவை புரிந்துக் கொண்டு சரணடைந்த ஆத்மாவாக ஆவது. ஆகையினால், நாங்கள்... சிஷ்யர், சிஷ்யர் என்றால் கட்டுப்பாட்டை ஏற்றுக் கொள்பவர். கட்டுப்பாட்டை ஏற்றுக் கொள்ளாமல், நம்மால் எந்த முன்னேற்றமும் அடைய முடியாது. அது சாத்தியமல்ல. எந்த அறிவுத் துறையிலும், நடவடிக்கைத் துறையிலும், நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்றால், அறிவுப்பூர்வமாகவும் மேலும் உண்மையையும், பிறகு நீங்கள் கட்டுப்படுத்துகின்ற நெறிமுறைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

சமகரண வக்ஷ்ய ஸ்வரூபம் சர்வொகரம் யத்ர திஹ்யம் தத் உபய-விஷயகம் ஞானம் வியாக்தும்