TA/Prabhupada 0292 - ஒப்புயர்வற்றவரை உங்கள் பணியாக அறிவுடன் தேடிச் செல்லுங்கள்
Lecture -- Seattle, October 4, 1968
பிரபுபாதர்: கோவிந்தம் ஆதி-புருஷம் தம் அஹம் பஜாமி. பக்தர்கள்: கோவிந்தம் ஆதி-புருஷம் தம் அஹம் பஜாமி. பிரபுபாதர்: அவருக்கு யாராவது உதவி செய்கிறார்களா? சரி... ஆக நாம் அந்த முழுமுதற் நபரை வெல்வதில் தான் ஆர்வமாக இருக்கிறோம். (சிரிப்பொலி) நமக்கு சார்நிலையில் உள்ளவர்களை வெல்வதில் ஆர்வம் எதுவும் கிடையாது. கோவிந்தம் ஆதி-புருஷம். ஆனால் ஒருவனால் அந்த முழுமுதற் நபரை வெல்ல முடிந்தால், அவன் அனைவரையும் வென்றதற்கு தான் சமம். எப்படி என்றால், அதே உதாரணம் தான். வேதங்களில், உபநிஷதத்தில் கூறப்பட்டிருப்பது என்னவென்றால்: யஸ்மின் விஞாதே சர்வம் ஏவம் விஞாதம் பவந்தி. உங்களால் பரமபுருஷரான அந்த முழுமுதற் கடவுளை, அந்த பரம சத்தியத்தை புரிந்துகொள்ள முடிந்தால், பிறகு உங்களுக்கு அனைத்தும் புரியும். தனித்தனியாக புரிந்துகொள்ள வேண்டியதில்லை. யஸ்மின் விஞாதே சர்வம் ஏதம் விஞாதம் பவந்தி. இதுபோலவே, பகவத் கீதையிலும் கூறப்பட்டிருக்கிறது, யம் லப்த்வா சாபரம் லாபம் மன்யதே நாதிகம் தத: யஸ்மின் ஸ்திதோ ந துக்கேன குருணாபி விசால்யதே (Bபகவத் கீதை 6.20-23) இப்போது நாம், எல்லோரும், நமக்கு கவலை இல்லாத ஒரு வாழ்க்கையின் தரத்தை தேடுகிறோம். எல்லோருடைய இலட்சியமும் அதுதான். நாம் ஏன் போராடிக் கொண்டிருக்கிறோம்? நாம் ஒரு குறிப்பிட்ட இலக்கை அணுக முயற்சி செய்துக் கொண்டிருக்கிறோம். இரண்டு குழுவினர், காற்பந்தாட்டம் விளையாடும்போது, ஒவ்வொருவரும், இலக்கை அணுக முயல்கிறார்கள். அதுதான் அவர்களுக்கு வெற்றி. ஆக எல்லோரும், அவரவர் நிலைமைக்கு ஏற்றபடி, வெவ்வேறு சிந்தனைக்கு ஏற்றபடி, எதோ ஒன்றை அடைய முயன்று வருகிறார்கள். எல்லோரும் ஒரே விஷயத்தை தேடிச் செல்வதில்லை. ஒருவன் பௌதிக இன்பத்தை தேடுகிறான், ஒருவன் போதைப் பொருளை தேடுகிறான், ஒருவன் உடலுறவை தேடுகிறான், ஒருவன் பணத்தைத் தேடுகிறான், வேறொருவன் அறிவைத் தேடுகிறான், இப்படி பல விஷயங்களை தேடுகிறார்கள். ஆனால், தலைச்சிறந்த ஒரு விஷயம் இருக்கிறது. நம்மால் அதை அடைய முடிந்தால், அந்த தலைச்சிறந்த இலக்கை அடைய முடிந்தால், பிறகு நாம் பூரண திருப்தியை அடையலாம். "எனக்கு இனிமேல் எதுவும் வேண்டாம்," என்று சொல்லலாம். ஸ்வாமின் க்ருதார்தோ அஸ்மி வரம் ந யாசே (சைதன்ய சரிதாம்ருதம் மத்ய லீலை 22.42). இப்படி பல உதாரணங்கள் உள்ளன. ஆக அப்பேர்பட்ட இலக்கு ஒன்று இருக்கிறது, அதுதான் கிருஷ்ணர். உங்களால் கிருஷ்ணரைப் புரிந்துகொள்ள முடிந்தால் போதும், பிறகு உங்கள் அறிவு பக்குவம் அடையும், நீங்கள் அனைத்தையும் புரிந்துகொள்வீர்கள். அறிவியல், கணிதம், வேதியியல், இயற்பியல், வானியல், மெய்யியல், இலக்கியம், அனைத்தையும் புரிந்துகொள்வீர்கள். இது அவ்வளவு இன்பகரமானது. எனவே பாகவதம் கூறுகிறது, ஸம்ஸித்திர் ஹரி-தோஷணம் (ஸ்ரீமத் பாகவதம் 1.2.13). நீங்கள் அறிவின் எந்த துறையில், எந்த தொழிலில் ஈடுபட்டிருந்தாலும் சரி, அது முக்கியம் அல்ல. ஆனால் ஞானத்தை நாடிச் செல்லும் உங்கள் முயற்சியால், அந்த பரமனை உங்களால் கண்டுபிடிக்க முடிந்தால், அது தான் உங்கள் பக்குவ நிலை. நீங்கள் ஒரு விஞ்ஞானியா? இருக்கட்டும், அது முக்கியமில்லை. உங்களுடைய விஞ்ஞான ஆராய்ச்சி மூலமாக அந்த பரம்பொருளை கண்டுபிடியுங்கள். பிறகு அதுதான் உங்கள் முயற்சியின் பக்குவ நிலை. நீங்கள் தொழிலதிபரா? ஓ. உங்கள் பணத்தை வைத்து அந்த பரமபுருஷரை கண்டுபிடியுங்கள். நீங்கள் ஒரு காதலரா? ஒப்புயர்வற்ற அந்த காதலரை கண்டுபிடியுங்கள். நீங்கள் அழகுணர்ச்சி உள்ளவர், அழகை தேடுகிறீர்கள் என்றால், அந்த பரமனை கண்டுபிடித்தால், அழகை நாடிச் செல்லும் உங்களுடைய் தேடல் நிறைவடையும். அனைத்தும். கிருஷ்ணர், அதுதான் கிருஷ்ணர். கிருஷ்ண என்றால் எல்லா விதத்திலும் ஈர்க்கக்கூடியவர். நீங்கள் ஒன்றை தேடுகிறீர்கள். நீங்கள் கிருஷ்ணரை கண்டுபிடித்தால், பிறகு உங்கள் இலக்கை பரிபூரணமாக அடைந்ததாக உணர்வீர்கள். எனவேதான் அவர் பெயர் கிருஷ்ண.