TA/Prabhupada 0304 -பரம பூரணத்தை மாயையால் மறைக்க முடியாது



Lecture -- Seattle, October 2, 1968


பிரபுபாதர்: மேலும் வாசியுங்கள்.


தமால கிருஷ்ணன்: "ஒரே நேரத்தில் இருக்கும் இந்த ஒற்றுமையும் வேற்றுமையும் உயிர்வாழிக்கும் பரமாத்மாவுக்கும் மத்தியில் இருக்கும் இந்த உறவில் எப்பொழுதும் இருக்கும்.


பிரபுபாதர்: இந்த உடன்நிகழும் ஒற்றுமையும் வேற்றுமையும், அதே உதாரணம் தான், நிலம். ஒருவர்," ஓ, நான் அந்த பகுதியில் தண்ணீரை கண்டேன்." என்பார். மற்றொருவர், " இல்லை, நான் அதே இடத்தில் நிலத்தை கண்டேன்." என்பார். ஆகையால் ஒரே நேரத்தில் ஒற்றுமையும் வேற்றுமையும். நம் நிலைப்பாடு... நாம் ஆன்மா, மற்றும் கிருஷ்ணர், பகவானும் ஆன்மா... அவர் பூரண ஆத்மா மற்றும் நான் அந்த ஆத்மாவின் நுண்ணிய துகள். சூரியனின் மேற்பரப்பு, சூரிய கிரகம் மற்றும் சூரிய ஒளி, அதில் ஜொலிக்கும் துகள்களையும் சூரிய ஒளி என்கிறோம் அதுபோல் தான். சூரியனின் அந்த மொத்த அணு துகள்களின் இணைப்பால் நமக்கு சூரிய ஒளி கிடைக்கிறது. ஆகையால் நாமும் சூரிய கிரகத்தின் துகள்களைப் போல் தான் ஜொலிக்கின்றோம், ஆனால் நம்மை பூரண சூரியனுக்கு சரிசமமாக எண்ண முடியாது. சூரிய ஒளியில் ஜொலிக்கும் துகள்கள், அளவில், சூரிய கிரகத்திற்கு சமம் ஆக முடியாது, ஆனால் இயல்பிலோ சமம் தான்.


அதுபோலவே, நாம் உயிர்வாழீகள், பரம ஆத்மாவின், பகவான் கிருஷ்ணரின் நுண்ணிய துகள்கள். ஆகையால் நாமும் ஜொலிக்கின்றோம். நாம் அதே குணங்களை பெற்றிருக்கின்றோம். தங்கத்தின் சிறு துகளும் தங்கம் தான். அது இரும்பு ஆக மூடியாது. அதுபோலவே, நாம் ஆத்மா, அதனால் (குணத்தில்) ஒற்றுமைக் கொள்கிறோம். ஆனால் நான் சிறு துளி என்பதால்... அந்த உதாரணத்தைப் போல் தான். அந்த கரை பகுதி சிறிதானதனால், சில நேரங்களில் தண்ணீரால் மூடப்பட்டிருக்கிறது. ஆனால் பெரும் நிலப் பகுதியில் தண்ணீர் இருப்பதில்லை. அதுபோலவே, மாயையால், சிறு துகள்களைப் போன்ற ஆன்மாவை பார்வையிலிருந்து மறைக்க மூடியும். ஆனால் பரம பூரணத்தை மாயையால் எப்பொழுதும் மறைக்க முடியாது. ஆகாயத்தில் சூரிய ஒளியின் உதாரணத்தைப் போல் தான். மேகங்களால் சூரிய வெளிச்சத்தை, சூரியனின் அம்சத்தை மறைக்க முடியும். ஆனால் மேகங்களின் அப்பால் ஒரு விமானத்தில் சென்றால், சூரிய ஒளியை மேகங்களற்ற நிலையில் காணலாம். மேகத்தால் சூரியனை முழுசாக மறைக்க மூடியாது. அதுபோலவே, மாயையால் பரம பூரணத்தை மறைக்க முடியாது. மாயையால் சிறு துகளான பிரம்மனின் பார்வையை மறைக்க முடியும்.


மாயாவாத கொள்கை என்னவென்றால்: "நான் இப்பொழுது மாயையால் கவரப்பட்டிருக்கிறேன். மாயையிலிருந்து மீண்ட உடன் நான் பூரணத்தில் ஐக்கியம் ஆவேன்..." (வாஸ்தவத்தில்) நாம் பூரணத்துடன் குணத்தில் ஐக்கியம் உடையவர்கள் தான். சூரிய ஒளியும் சூரிய கிரகத்தின் போல் தான். எவ்விடத்தில் எல்லாம் சூரியன் இருக்கிறதோ, அங்கே சூரிய ஒளியும் இருக்கிறது, ஆனால், சூரிய ஒளியின் சிறு துகள்களால் எப்பொழுதும் பூரண சூரிய கிரகத்திற்கு சமம் ஆக முடியாது. அது தான் சைதன்ய மஹாபிரபுவினால் இந்த அத்தியாயத்தில் வர்ணிக்கப்படிருகிறது.