TA/Prabhupada 0306 - நாம் நமது சந்தேகங்களை கேட்டு தெளிவடைய வேண்டும்



Lecture -- Seattle, October 2, 1968


பிரபுபாதர்: கேள்வி ஏதாவது இருக்கிறதா? முதலில் கேட்போர்களிலிருந்து. நாங்கள் கேள்விகளை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதாவது கேள்வி, சந்தேகம் இறந்தால் நீங்கள் கேட்கலாம்.


தத் வித்தி ப்ரணிபாதேன பரிப்ரஷ்ணேன ஸேவயா (பகவத் கீதை 4.34)


எதுவாக இருந்தாலும், புரிந்துகொள்ள ஆர்வமுடையவராக இருந்தால், நாம் நமது சந்தேகங்களை கேட்டு தெளிவடைய வேண்டும். புரிகிறதா?


இளைஞன்: வார்த்தைகளுக்கு அப்பால் உணர்வை ஒருவரால் அடைய முடியுமா? அல்லது ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொள்ள வார்த்தைகளின் வடிவத்தில் இல்லாமல், ஒலி அல்லது ஒலியைப்போல் ஏதாவது நடுக்கம் உள்ளதா? அது ஓம் என்கிற சொல்லை நோக்கி இருக்கலாம். அப்படி ஏதாவது தொடர்புகொள்ளும் முறை இருக்கிறதா, நானும் நீங்களும் புரிந்துகொள்ளும் வகையில், நானும் என் சகோதரர்களும், மற்றவர்களும், நாமெல்லாரும் புரிந்துகொள்ளும் வகையில்? அப்படி ஏதாவது அனுபவம் இருக்கிறதா, அதில் நாம்... அது கேட்பதற்கு "டாங்க", "ஒங்க" அப்படி ஏதாவது உண்டா? வாய்பேச்சு முறையை தவிர்த்து வேறு எதாவது பேச்சு முறை உண்டா?


பிரபுபாதர்: ஆம், இந்த ஹரே கிருஷ்ண.


இளைஞன்: ஹரே கிருஷ்ண.


பிரபுபாதர்: ஆம்.


இளைஞன்: உங்களால் விவரிக்க முடியுமா? இது எப்படி சாத்தியம் என்று சொல்ல முடியுமா? எல்லா நேரமும் எப்படி இது சாத்தியம்? மனிதனாக இல்லாத, ஆங்கிலத்திலேயோ வேறு எந்த மொழியிலேயோ பேசாமல், எப்படி அந்த ஒரு மொழியை பேச முடியும்?


பிரபுபாதர்: ஒலியை எந்த மொழியிலும் உச்சரிக்கலாம். ஹரே கிருஷ்ண என்பதை சமஸ்கிருதத்தில் மட்டுமே உச்சரிக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஆங்கிலத்திலும் நீங்கள் இதை உச்சரிக்கலாம்: "ஹரே கிருஷ்ண." இதில் ஏதாவது சிக்கல் இருக்கிறதா? இதோ இந்த பையன்களும் ஹரே கிருஷ்ண உச்சரிக்கிறார்கள். ஆக ஒரு சிக்கலும் இல்லை. ஒலி தான் முக்கியம். யார் ஒலி இடுகிறார்கள் என்பது முக்கியம் இல்லை. ஒரு பியானோவை போல் தான், தொட்டால் "டங்க்" என ஒலி தரும். ஒரு அமெரிக்க நாட்டை சேர்ந்தவன் வாசிக்கிறானா அல்லது ஒரே இந்தியன் வாசிக்கிறானா என்பது முக்கியமல்ல. ஒரு இந்து வாசித்தாலும் சரி ஒரு முஸ்லிம் வாசித்தாலும் சரி, ஒலி ஒலி தான். அதுபோலவே, இந்த பியானோ, ஹரே கிருஷ்ண, நீங்கள் தொட்டாலே அது ஒலிக்கும். அவ்வளவுதான். ஆம்?


இளைஞன் (2): நீங்கள் தனிமையில் அமர்ந்து தியானம் செய்வது உண்டா? மனம் அலைபாயும் பொழுது நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் எதைப் பற்றியாவது நினைப்பது உண்டா? நீங்கள் மனதை எதன் மேலாவது செலுத்துவது உண்டா இல்லை அதன் போக்கில் விட்டு விடுவீர்களா?


பிரபுபாதர்: முதலில், உங்களைப் பொறுத்தவரை த்யானம் என்றால் என்ன என்று எனக்கு சொல்லுங்கள்?


இளைஞன் (2): தனிமையில் அமைதியாக அமர்ந்திருப்பது.


பிரபுபாதர்: என்னது?


தமால கிருஷ்ணன்: தனிமையில் அமைதியாக அமர்ந்திருப்பது.


பிரபுபாதர்: தனிமையில் அமைதியாக அமர்ந்திருப்பது. அது சாத்தியமா? அது சாத்தியம் என்று நினைக்கிறீர்களா?


இளைஞன் (2): உங்கள் மனதிற்கு செவிகொடுத்தால்.


பிரபுபாதர்: மனம் இடைவிடாமல் செயல் பட்டிருக்கிறது.


இளைஞன் (2): அது நம்முடன் பேசுவது உண்டு.


பிரபுபாதர்: எப்படி உட்காருவது, சாந்த மனதுடன்?மனம் இடைவிடாமல் செயல் புரிகிறது. அமைதியாக உட்கார்ந்திருக்கும்போது மனம் செயல்படாமல் இருக்கும் அனுபவம் ஏதாவது உண்டா? உறங்கும் பொழுது மனம் செயல் புரிகிறது. நீங்கள் கனவு காண்கிறீர்கள். இது மனதின் செயல் தான். ஆக எப்பொழுது உங்கள் மனம் சாந்தமாக இருக்கிறது?


இளைஞன் (2): அதைத் தான் நான் உங்களிடம் கேட்க விரும்புகிறேன்.


பிரபுபாதர்: ஆம். ஆக மனம் எப்பொழுதுமே அமைதியாக இருப்பதில்லை. உங்கள் மனதை எதிலாவது ஈடுபடுத்த வேண்டும். அதுதான் தியானம்.


இளைஞன் (2): நீங்கள் எதில் ஈடுபடுத்துகிறீர்கள்?


பிரபுபாதர்: ஆம். அது கிருஷ்ணர். பேரழகரான முழுமுதற் கடவுள், கிருஷ்ணரின் மீது எங்கள் மனதை ஈடுபடுத்துகிறோம். மனதை மட்டுமே ஈடுபடுத்தவில்லை, மனதை புலன்களுடன் சேர்த்து கைங்கரியத்தில் ஈடுபடுத்துகிறோம். ஏனென்றால் மனம் என்பது புலன்களுடன் சேர்ந்து செயல் புரிகிறது.