TA/Prabhupada 0314 - உடலின் மேல் அவ்வளவு கவனம் செலுத்துவதில்லை,ஆனால் ஆன்மாவின் மேல் முழு கவனம்Lecture on SB 6.1.10 -- Los Angeles, June 23, 1975

சண்டை, சச்சரவு மற்றும் மன வேற்றுமை நிறைந்த இந்த யுகம் கலியுகம் என்றழைக்கப்படுகிறது. இந்த யுகத்தில் இதுதான் ஒரே வழிமுறை: ஹரி-கீர்த்தனாத். ஹரி-கீர்த்தன என்றால் இந்த ஸங்கீர்த்தன இயக்கம். ஹரி-கீர்த்தன... கீர்த்தன என்றால் பெருமாளின் புகழைப் பாடுவது, ஹரி-கீர்த்தன. இது ஸ்ரீமத் பாகவதத்திலும் உறுதிப்படுத்த பட்டிருக்கிறது


காலேர் தோஷ-நிதே ராஜன் அஸ்தி ஹி ஏகோ மஹான் குண: கீர்தனாத் ஏவ க்ருஷ்ணஸ்ய முக்த-ஸங்க: பரம் வ்ரஜேத் (ஸ்ரீமத் பாகவதம் 12.3.51)


ஆக இது பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது, மேலும் இதைப்போலவே, ஸ்ரீமத் பாகவதத்தில், ஸ்ரீ சைதன்ய மஹாப்ரபுவைப் பற்றி கூறப்பட்டிருக்கிறது த்விஷாக்ருஷ்ணம்...


க்ருஷ்ண-வர்ணம் த்விஷாக்ருஷ்ணம் ஸங்கோபாங்காஸ்த்ர-பார்ஷதம் யக்ஞை: ஸங்கீர்த்தன-ப்ராயைர் யஜந்தி ஹி ஸுமேதஸ (ஸ்ரீமத் பாகவதம் 11.5.32)


ஆக சைதன்ய பிரபுவை வழிபடுவது நம் முதல் கடமை. நாம் அர்ச விக்கிரகத்தை வைத்திருக்கிறோம். முதலில் நாம் சைதன்ய மஹாப்ரபு மற்றும் அவரது துணைமையரை தாழ்ந்து வணங்குகிறோம், பிறகு குரு-கௌராங்க, பிறகு ராதா-கிருஷ்ணர் அல்லது ஜகன்னாதரை வணங்குகிறோம். ஆக கலியுகத்தில் இதுவே வழிமுறை என்பதால்,


யக்ஞை: ஸங்கீர்த்தன-ப்ராயைர் யஜந்தி ஹி ஸுமேதஸ


நீ வெறும் இந்த ஸங்கீர்த்தனம் செய்தால், வெறும் இந்த வழிமுறையை பின்பற்றினால், முடிந்தவரை, பல முறை இதை பகவான் சைதன்யரின்‌ முன்பே செய்தால் உன் வெற்றி நிச்சயம். வேறு எதுவும் தேவை இல்லை. இது பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது:


யக்ஞை: ஸங்கீர்த்தன-ப்ராயைர் யஜந்தி ஹி ஸுமேதஸ


புத்திசாலிகள், தன்னுணர்வின் இந்த எளிதான முறையை உடனேயே ஏற்றுக் கொள்வார்கள். அதிகமாக ஜெபிப்பதால் இதையத்தை சுத்திகரிக்கும் இந்த செயல்முறை நன்றாக செயல்படும்.


சேதோ-தர்பண-மார்ஜனம் (சைதன்ய சரிதாம்ருதம் அந்திய லீலை 20.12)


இது பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. சேதோ தர்பண... இது தான் முதல் படி, ஏனென்றால் நமது ஆன்மீக வாழ்க்கையை, இதை தவிர்த்து தொடங்க முடியாது, அதாவது சேதோ-தர்பண-மார்ஜனம், அழுக்கான கண்ணாடியைப் போன்ற நமது இதயத்தை சுத்தம் செய்தால் ஒழிய முடியாது. ஆனால் இது தான் சுலபமான வழிமுறை. நீ ஹரே-கிருஷ்ண மஹா-மந்திரத்தை மெய்மறந்த இன்பத்தில் ஜெபித்தால், முதல் பலனாக உன் இதயம் தூய்மை அடையும். பிறகு உன்னால் உன் நிலைமை என்ன, நீ யார், உன் கடமை என்னவென்று அறிய முடியும். உன்‌ இதயம் அசுத்தமாக இருந்தால்... பிராயச்சித்தத்தின் விதிமுறையால் இதயத்தின் அழுக்கை சுத்தம் செய்ய முடியாது. அது சாத்தியமல்ல.


ஆகையால்... பரீக்ஷித் மஹாராஜர் மிக்க புத்திசாலி. அவர் கூறுகிறார், ப்ராயஷ்சித்தம் அதோ அபார்தம். அப, அப என்றால் "எதிர்மறையான", மற்றும் அர்த என்றால் "அர்த்தம்." "அது அர்த்தமற்றது." அவர் உடனேயே நிராகரிக்கிறார்: ப்ராயஷ்சித்தம் அபார்தம். "என்ன பலன் இருக்கும்? அவன் அசுத்தமாகவே இருப்பான். அவன் இதயம், அவன் உள்ளம் சுத்திகரிக்கப் படுவதில்லை." அவன் உள்ளத்தில் எல்லா அபத்தமான விஷயங்களையும் கொண்டிருப்பான். "நான் எப்படி ஏமாற்றுவேன், எப்படி கள்ள வியாபாரம் செய்வேன், எப்படி புலனுகர்ச்சி செய்வேன், எப்படி விபச்சாரியிடம் சென்று சாராயம் குடிப்பேன்." இதெல்லாம் நிரம்பியிருக்கும். ஆக வெறும் கோவிலிக்குச் சென்று மன்னிப்பு கேட்பதால், ஏதாவது பிராயச்சித்தம் செய்வதால், எந்த பலனும் இருக்காது. இந்த ஸங்கீர்த்தனம் என்கிற முறையை தீவிரமாக பின்பற்றவேண்டும்.


சேதோ-தர்பண-மார்ஜனம் பவ-மஹா-தாவாக்னி-நிர்வாபணம் (சைதன்ய சரிதாம்ருதம் அந்திய லீலை 20.12)


முதல் படியாக உன் இதயத்தை சுத்திகரிக்க வேண்டும். அடுத்த படியாக பவ-மஹா-தாவாக்னி-நிர்வாபணம். இதயம் தூய்மை அடைந்த பிறகு உன்னால் இந்த ஜட உலகில் உன் நிலைமை என்னவென்று புரிந்துகொள்ள முடியும். அசுத்தமான இதயத்துடன் புரிந்துகொள்ள முடியாது. இதயம் சுத்தமாக இருந்தால், "நான் இந்த உடல் அல்ல" என்பதை உன்னால் புரிந்துகொள்ள முடியும். நான் ஆன்மா. நான் உண்மையில் எனக்காக என்ன செய்து கொண்டிருக்கிறேன்? நான் ஆன்மா. நான் இந்த உடல் அல்ல. நான் இந்த உடலை நன்றாக கழுவி கொண்டிருக்கிறேன் ஆனால் வாஸ்தவத்தில் நான் ஏங்கிக் கொண்டிருக்கிறேன்." இது தான் நடந்து கொண்டிருக்கிறது. பௌதீக நாகரீகம் என்றால் அவர்கள் உடலை மட்டும் கவனித்துக் கொள்வார்கள் மற்றும் உடலுக்குள் இருக்கும் ஆன்மாவை பற்றி எந்த அறிவும் இருப்பதில்லை. இதுதான் பௌதீக நாகரிகம்.


ஆனால் நம் கிருஷ்ண பக்தி இயக்கத்தில், உடலின் மேல் அவ்வளவு கவனம் செலுத்துவதில்லை ஆனால் ஆன்மாவின் மேல் முழு கவனம் செலுத்துவது உண்டு. இதுதான் கிருஷ்ண உணர்வு, நேர்மாறானது. ஆகையால் அவர்களால் இந்த இயக்கத்தை புரிந்துகொள்ள முடியவில்லை. இது முற்றிலும் ஆன்மீக இயக்கம். இது பௌதீக இயக்கம் அல்ல. ஆகையால் சிலசமயம் தவராக எண்ணுகிறார்கள், "உங்களை பின்பற்றுபவர்கள் வலுக்குறைந்தவர்கள். அவர்கள் இப்படி ஆகிவிடுகிறார்கள். அவர்கள் மாமிசம் சாப்பிடாததால் உற்சாகம் குறைவாக இருக்கிறது." ஆனால் "உற்சாகத்தைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை. எங்களுக்கு ஆன்மீக வாழ்க்கை தான் முக்கியம்." ஆக சில சமயங்களில் அவர்கள் தவறாக புரிந்துக்கொள்கிறார்கள். மக்கள் புரிந்து கொள்ளலாம் அல்லது புரிந்துகொள்ளாமலேயே இருக்கலாம் - எதுவாக இருந்தாலும் அது முக்கியமில்லை. தொடர்ந்து கீர்த்தனம் செய்து மீண்டும் ஜட வாழ்க்கையை பெறாமல் இருக்கும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மிக நன்றி.