TA/Prabhupada 0323 - அன்ன பறவைகள் கூட்டம் உருவாக்க தானே ஒழிய காகங்களின் கூட்டம் சேர்பதற்கல்ல



Lecture on SB 3.25.12 -- Bombay, November 12, 1974

ஆக இது தான் பௌதீக வாழ்க்கை, 'பவர்க'. நீ இதை மறுபக்கம் திருப்ப விரும்பினால் அதுக்கு 'அபவர்க' என்று பெயர். ஆக இங்கு அது அபவர்க-வர்தனம் என்றழைக்கப்படுகிறது, அதாவது எவ்வாறு மோட்சம் பெறுவதின் மீது இருக்கும் ஆர்வத்தை அதிகரிப்பது. மக்கள் மிகவும் மந்தபுத்தியுள்ளவர் ஆகிவிட்டார்கள், அவர்களுக்கு மோட்சம் என்றால் என்னவென்று புரிவதில்லை. அவர்களுக்கு புரிவதில்லை. மிருகங்களைப் போல் தான். அவன்... ஒரு மிருகத்திற்கு "இது தான் மோட்சம்," என்பதை தெரிவித்தால் அவனுக்கு என்ன புரியும்? அவனுக்கு புரியாது. அவனுக்கு அது சாத்தியம் அல்ல. அதுபோலவே தற்போதைய மனித சமுதாயம் அப்படியே மிருகங்ஙணகளைப் போல் ஆகிவிட்டது. அவர்களுக்கு அபவர்க அதாவது மோட்சம் என்றால் என்ன என்பதே தெரியாது. அவர்களுக்கு தெரியாது. ஆனால் ஒரு காலத்தில், இந்த மனித வாழ்க்கை, அபவர்க என்பதற்காக தான், என்பதை மக்கள் புரிந்து இருந்தார்கள். அபவர்க‌‌ என்றால் ப(प), ஃப(फ), ப(ब), ஃப(भ), ம செயல்களை நிறுத்துவது. அதுக்கு தான் அபவர்க-வர்தனம் என்று பெயர். ஆக தேவாஹுதியினால் கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும், கபிலதேவரால் அளிக்கப்பட்ட பதில்கள், அது தான் அபவர்க-வர்தனம். ஆது தான் தேவை. அனைத்து வேதங்களின் கற்பித்தலும் இதுதான்.


தஸ்யைவ ஹேதோ: ப்ரயதேத கோவித


அபவர்க என்பதை எல்லோரும் பின்பற்ற முயற்சி செய்யவேண்டும். ஒவ்வொருவரும் மிகச்சிறப்பாக முயற்சி செய்யவேண்டும். "அப்போ என் பிழைப்புக்கான வழி?" சாத்திரம் எப்போதும் பராமரிப்புக்கு முக்கியத்துவம் தருவதில்லை, அதாவது "நீ பராமரிப்பு செலவுக்காக முயற்சி செய்." என. சாத்திரம் கூறுகிறது, "அது வரும். அது ஏற்கனவே இருக்கிறது. அது வரும்." ஆனால் நமக்கு அதன்மீது நம்பிக்கை இல்லை அதாவது, "கடவுள் வழங்கியிருக்கிறார்..., மிருகங்களுக்கு, பறவைகளுக்கு, மரங்களுக்கு, அனைவருக்கும் உணவு வழங்குகிறார். பிறகு எனக்கு எதற்காக வழங்க மாட்டார்? நான் என் நேரத்தை அபவர்க பின்பற்றுவதற்கு செலவு செய்கிறேன்." அவர்களுக்கு நம்பிக்கையே இல்லை. அத்தகைய கற்றலே அவரிடம் கிடையாது. ஆகையால் சிறந்த சகவாசம் தேவை. காக்கை சகவாசம் அல்ல, அன்ன பறவை சகவாசம். அப்பொழுது தான் இந்த உணர்வு வரும். இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் என்பது அன்ன பறவைகள் கூட்டம் உருவாக்க தானே ஒழிய காகங்களின் கூட்டம சேர்பதற்கல்ல. காகங்கள் அல்ல. காகங்களுக்கு ஆர்வம் இருப்பதில்லை. அவர்கள் அப்புறப்படுத்தப்பட்ட விஷயங்களில், அதாவது குப்பையில் தான் ஆர்வமாக இருப்பார்கள்.


புன: புனஸ் சர்வித-சர்வனானாம் (ஸ்ரீமத் பாகவதம் 7.5.30)


இதில் தான் ஆர்வமாக இருப்பார்கள். புன: புனஸ் சர்வித-சர்வனானாம். நாம் விட்டு வெளியே எறிகிறோமே... சாப்பிட்டு, இலையை தூற எறிகிறோம். அது போல் தான். அதில் மிச்சம் மீதி இருக்கும் உணவை தேடி காகங்களும் நாய்களும் வருகின்றன. அவர்கள் ஆர்வமாக இருப்பார்கள். அவர்கள் சொல்லமாட்டார்கள்... ஒரு அறிவுள்ளவன் அங்கே போகமாட்டான். ஆனால் இந்த காகங்களும் நாய்களும் அங்கே செல்வார்கள். ஆக இந்த உலகமே அப்படி தான். புன: புனஸ் சர்வித-சர்வனானாம் (ஸ்ரீமத் பாகவதம் 7.5.30)

சவைத்ததையே மீண்டும் சவைப்பது. உதாரணமாக நீ கரும்பை சவைத்து வீதியில் தூற எறிகிறாய். பிறகு யாராவது வந்து அதை மீண்டும் சவைத்தால் அவன் ஒரு மடையன். அவனுக்கு தெரிந்திருக்கவேண்டும், "அந்த கரும்பிலிருந்து சாறு எடுக்கப்பட்டிருக்கிறது. சவைத்து என்ன பயன்?" ஆனால் அப்படிப்பட்ட மிருகங்கள் இருக்கின்றன. அவர்கள் மீண்டும் சவைக்க விரும்புவார்கள். ஆக இந்த பௌதீக சமுதாயம் என்றால் சவைத்ததையே சவைக்கும் சமுதாயம். ஒரு தந்தை தன் மகனுக்கு பிழைப்புக்காக சம்பாதிக்கும் வழியை கற்று தருகிறான், அவன் திருமணத்தை நிகழ்துகிறான் மற்றும் அவன் குடியேற உதவி செய்கிறான். ஆனால் அவனுக்கு இது தெரியும் "இந்த பணம் சம்பாதிப்பது திருமணம் செய்வது, குழந்தைகள் பெறுவது, இந்த வேலையெல்லாம் நானும் செய்திருக்கிறேன், ஆனால் இதில் எனக்கு திருப்தி இல்லை. நான் எதற்காக என் மகனையும் இதே வேலையில் ஈடுபடுத்துகிறேன்?" இது தான் சவைத்ததை மீண்டும் சவைப்பது. ஒரே விஷயத்தை மீண்டும் சவைப்பது. "நான் இப்படி செய்வதால் திருப்தி அடையவில்லை, ஆனால் எதற்காக நான் என் மகனையும் இதில் ஈடுபடுத்த வேண்டும்?" தன் மகனை சவைத்ததை சவைப்பதிலிருந்து தவிர்க்க வைப்பவன் தான் உண்மையான தந்தை. அவன் தான் உண்மையான தந்தை.


பிதா ந ஸ ஸ்யாஜ் ஜனனி ந ஸ ஸ்யாத், ந மோசயேத் ய: ஸமுபேத-ம்ருத்யும்


இது தான் வாஸ்தவத்தில் கர்ப்பத்தடை. ஒரு மனிதன் தந்தை ஆக ஆசை படக்கூடாது, ஒரு பெண் தாய் ஆக ஆசைப்பட கூடாது, மரணத்தின் பிடியிலிருந்து தன் குழந்தைகளை காப்பாற்ற தகுதியுள்ளவராக இருந்தால் ஒழிய. அது தான் தாய் தந்தையின் கடமை.