TA/Prabhupada 0328 - இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் அனைத்தையும் உள்ளடக்கிய இயக்கம்University Lecture -- Calcutta, January 29, 1973

ஆக இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் அனைத்தையும் உள்ளடக்கிய இயக்கம். இதனால் உலகத்தின் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காணலாம் - அரசியல், சமுதாயம், மதம், எல்லாம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கும். இது எல்லாம் உள்ளடக்கியது. என் கோரிக்கை என்னவென்றால் நான் இப்போது எனது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சிஷ்யர்களுடன் செயல்பட்டிருக்கிறேன். இந்தியர்களுடன் ஏன் கூடாது? இந்த சபையில் பல இளைஞர்கள், அறிஞர்கள் இருக்கிறார்கள். இந்த இயக்கத்தில் சேர்ந்து, ஸ்ரீ சைதன்ய மஹாப்ரபுவின் ஆணைப்படி


பாரத-பூமிதே மனுஷ்ய ஜன்ம ஹைலா யார ஜன்ம ஸார்தக கரீ கரோ பரோபகார (சைதன்ய சரிதாம்ருதம் ஆதி லீலை 9.41)


இந்த முழு உலகத்தின் நலத்துக்காக செயல்படுவதற்கு இது தான் நேரம். எல்லாவற்றிலும் அவர்கள் குழப்பத்தால் சூழ்ந்து இருக்கிறார்கள். மேற்கத்திய நாடுகளில் ஹிப்பி இயக்கத்தைப் பற்றி தெரியுமா? யார் இந்த ஹிப்பிக்கள்? அவர்களும் நன்கு படித்தவர்கள், பணக்கார குடும்பத்திலிருந்தும் சிலர் இருப்பார்கள், ஆனால் அவர்கள் தன் தகப்பனார் மற்றும் பாட்டனார் விரும்பிய சூழ்நிலையின் போக்கை விரும்புவதில்லை. அவர்கள் அதை நிராகரித்துள்ளார். ஆக இது தான் கிருஷ்ண பக்தி சம்பிரதாயத்தை உலகம் முழுவதும் பிரசாரம் செய்ய தங்கமான வாய்ப்பு. பாகிஸ்தானில் இருக்கும் நிலத்தில் சில கெஜங்கள் ஆக்கிரமிக்கப் பட்டதால் நீங்கள் வருத்தப் படுகிறீர்கள், ஆனால் இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தை நீங்கள் பரப்பினால், உலகம் முழுவதும் ஹிந்துஸ்தான் ஆகிவிடும். இதில் அவ்வளவு சக்தி இருக்கிறது; நான் உங்களுக்கு நானே நேரடியாக உணர்ந்ததை கூறுகிறேன். மக்கள் இதற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.


நான் இந்தியாவில் இருக்கும்வரை வாஸ்தவத்தில் என் நேரம் வீணாகிக் கொண்டிருக்கிறது. இந்தியாவுக்கு வெளியே, தீவிரமான வரவேற்பு இருக்கிறது. என் ஒவ்வொரு நிமிடமும் சரியாக பயன்படுத்தப்படுகிறது. உங்களில் சிலராவது உண்மையான பிராமணர்கள் ஆவீர்கள் என்கிற எதிர்பார்ப்புடன் நான் உங்கள் பல்கலைக்கழகத்திற்கு வந்திருக்கிறேன். சமஸ்கிருத பகுதி என்பது குறிப்பாக பிராமணர்களுக்கானது. படன பாடன யஜன தான ப்ரதிக்ரஹ. பிராமணனை பண்டிதன் என்பார். எதற்காக? ஏனென்றால் பிராமணன் நன்கு கற்றவனாக இருக்கவேண்டும். பிராமணனை முட்டாள் என்று கருத மாட்டார்கள். ஆக இந்த சமஸ்கிருத பகுதி பிராமணர்களுக்கானது.


என் ஆசை என்னவென்றால் உங்களில் சிலர் இந்த இயக்கத்தில் சேர்ந்து வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும், சைதன்ய மஹாப்ரபுவின் இந்த புனிதமான சம்பிரதாயத்தை பிரசாரம் செய்யவேண்டும். நாம் பல கோவில்களை ஸ்தாபனை செய்திருந்தாலும், மேலும் கோவில்களை ஸ்தாபனை செய்ய அவசியம் இருக்கிறது, ராதா-கிருஷ்ணரின் கோயில்கள், சைதன்ய மஹாப்ரபுவின் கோயில்கள், உலகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும். இப்போது நாங்கள் எங்களது ஒவ்வொரு மையங்களிலிருந்தும் பேருந்துகளில் பக்தர்களைக் அனுப்புகிறோம். அவர்கள் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க கிராமங்களின் உள்பகுதியில் செல்கிறார்கள். அங்கு அவர்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.


இங்கிலாந்தில் குறிப்பாக கிராமம் கிராமமாய் செல்கிறார்கள். அவர்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த சம்பர்தாயம் அவ்வளவு சிறப்பானது. கிருத்துவ பாதிரியார்களும் வியந்து போகிறார்கள். அவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். பாஸ்டனில் ஒரு பாதிரியார் ஒரு துண்டு வெளியீடு செய்திருக்கிறார். "இந்த இளைஞர்கள், கிறித்துவ மற்றும் யூதர்களான எங்கள் இளைஞர்கள். இந்த இயக்கத்திற்கு முன்பு, இவர்கள் சர்ச் வாசற்படியை கூட ஏற மாட்டார்கள். இப்போது அவர்கள் கடவுளுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்." அவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். கிறித்துவப் பாதிரியார்கள் சமுதாயம் எங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. சிந்திக்கக்கூடியவர்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்களும் ஒப்புக்கொள்கிறார்கள், "சுவாமிஜி செயல்படுத்தக்கூடிய ஒன்றை வழங்குகிறார்." அவர்கள் தகப்பனாரும் பாட்டனார்களும் என்னிடம் வருகிறார்கள். என்னை வணங்குகிறார்கள். "ஸ்வாமிஜி, தாங்கள் எங்கள் நாட்டுக்கு வந்திருப்பது எங்கள் பாக்கியம்." எனக் கூறுகிறார்கள். நான் தனியாக செயல்படும் பொழுதே இந்த இயக்கம் புகழப்படுகிறது. பிறகு இந்தப் பல்கலைக்கழகத்தின் நபர்கள், அறிஞர்கள் முன்வந்து இந்த இயக்கத்தைப் பற்றி பிரசாரம் செய்தால்... அதற்காகதான் இந்த நிறுவனம் இருக்கிறது. பரதம் தான் ஒரு பிராமணனின் கடமை. பிரம்ம ஜானாதி. பிரம்மன் என்றால் என்னவென்று ஒருவர் கற்று, பிரம்ம-ஞானத்தின் கல்வியை விநியோகிக்க வேண்டும். அதுதான் பிராமணர்களின் கடமை.