TA/Prabhupada 0343 - இந்த மூடர்களுக்கு புத்திமதி சொல்ல முயற்சி செய்து வருகிறோம்



Lecture on BG 3.27 -- Madras, January 1, 1976

கிருஷ்ணர் இந்த கிரகத்தில் இருந்தப் போது, தன் செயல்களாலையே நிரூபித்தார், அவர் எல்லோரையும் ஆள்கிறார் ஆனால் யாராலையும் அவரை கட்டுப்படுத்த முடியவில்லை. அது தான் ஈஷ்வர. அதற்கு தான் பரமேஷ்வர என்று பெயர். யார் வேண்டுமானாலும் ஈஷ்வரராக, கடவுளாக இருக்கலாம். ஆனால் கடவுள்களுக்கு தலைவர் கிருஷ்ணரே ஆவார். நித்யோ‌ நித்யானாம் சேதனஸ் சேதனானாம் (கதா உபனிசத் 2.2.13). ஆக நாம் இதை நன்கு புரிந்துகொள்ள முயற்சி செய்யவேண்டும், மற்றும் இது அவ்வளவு கஷ்டமானதல்ல. அதே ஆட்சியாள்பவர் நம் எல்லோர் முன்பும் நம்மில் ஒருவராக வருகிறார், ஒரு மனிதனாக வருகிறார். ஆனால் நாம் அவரை அப்படி ஏற்பதில்லை. அது தான் பிரச்சினை.


அவஜானந்தி மாம் மூடா மானுஷீம் தனும் ஆஷ்ரிதம் (பகவத்-கீதை 9.11)


அது மிகவும் வருந்தத்தக்கது. கிருஷ்ணர் கூறுகிறார், "நான் மீயுயர்ந்த ஆட்சியாளர் யாரென்று வெளிக்காட்ட வருகிறேன், மற்றும் எல்லோருக்கும் புரியுமாறு இருப்பதற்காக நான் ஒரு மனிதனாக நடந்துக் கொள்கிறேன். நான் பகவத்-கீதையில் கற்ப்பித்திருக்கிறேன், இருப்பினும் இந்த மூடர்களால், அயோக்கியர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆக கடவுள் இருக்கிறார். நாம் கடவுளின் பெயரை குறிக்கிறோம், கிருஷ்ண, கடவுளின் விலாசத்தையும் வெளிபடுத்துகிறோம், பிருந்தாவனம், கடவுளின் தந்தையின் பெயர், தாயின் பெயர். பிறகு எதற்காக... கடவுளை கண்டுபிடிப்பதில் என்ன பிரச்சினை இருக்கிறது? ஆனால் அவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். மூட. அவரைப் போன்றவர்களை மூட என அழைக்கப்பட்டிருக்கிறது. ஆக காலையில் பத்திரிகையாளர்கள் என்னை, "உங்கள் இயக்கத்தின் நோக்கம் என்ன?" என்று கேட்டார்கள். அதற்கு நான் கூறினேன், "மூடர்களுக்கு புத்திமதி சொல்வது தான்." இந்த மூடர்களுக்கு புத்திமதி சொல்ல முயற்சி செய்து வருகிறோம். அது தான் இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தின் மொத்த பொருளாகும். மேலும் யார் மூடன் எனப்படுவான்? அது கிருஷ்ணரால் விவரிக்கப்பட்டிருக்கிறது.


ந மாம் துஷ்க்ருதினோ மூடா ப்ரபத் யந்தே நராத மா (பகவத்-கீதை 7.15)


எதற்காக? மாயயாபஹ்ருத-க்ஞான:. அவன் அறிவு எதற்காக மாயையால் அபகரிக்கப்பட்டிருக்கிறது? ஆஸீரம் பாவம் ஆஷ்ரித:. நம்மிடம் எளிய சோதனை ஒன்று இருக்கிறது. ஒரு வேதியியலாளரால், இது எந்த திரவம் என்று சோதனை குழாயில் பரிசோதனை செய்து க்ண்டுபிடிக்க முடியும். நாம் வெகு புத்திசாலிகள் அல்ல. பல மூடர்களில் நாமும் ஒருவர் தான். ஆனால் நம்மிடம் அந்த சோதனை குழாய் இருக்கிறது. கிருஷ்ணர் கூறுகிறார்... நாம் மூடர்களாகவே இருந்து, கிருஷ்ணரிடமிருந்து கல்வியை கற்றுக் கொள்கிறோம். இதுதான் கிருஷ்ண பக்தி. நாம் பெரிய அறிவாளியைப் போல் நடிப்பதில்லை - "எங்களுக்கு எல்லாம் தெரியும்." இல்லை. நாம்... சைதன்ய மகாபிரபுவும் தன்னை ஒரு மூடனாக கருதினார். அவர் பிரகாஷானந்த சரஸ்வதியிடம் வாதம் செய்யும்போது... அவர் ஒரு மாயாவாதி சந்நியாசி. சைதன்ய மகாபிரபு ஆடி, பாடி இருந்தார். ஆகையால் இந்த மாயாவாதி சந்நியாசிகள் அவரை விமர்சித்தார்கள், "அவர் (மகாபிரபு) ஒரு சந்நியாசி, அப்படி இருந்தும் சில மென்மை உணர்ச்சி உடையவர்களுடன் வெறும் ஆடி, பாடிக் கொண்டிருக்கிறாரே. என்ன இது?" ஆகையால் பிரகாஷானந்த சரஸ்வதிக்கும் சைதன்ய மகாபிரபுவுக்கும் இடையே ஒரு சந்திப்பு அமைக்கப்பட்டது. சைதன்ய மகாபிரபு அந்த சந்திப்பில் ஒரு தாழ்ந்த சந்நியாசியாக கலந்து கொண்டார். ஆக பிரகாஷானந்த சரஸ்வதி அவரை கேட்டார், "ஐய்யா, தாங்கள் ஒரு சந்நியாசி. எப்பொழுதும் வேதாந்தத்தை படிப்பதே உங்கள் கடமையாகும். பிறகு எப்படி தாங்கள் ஜெபித்து பாடிக் கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் வேதாந்தத்தை படிப்பதில்லையே." சைதன்ய மகாபிரபு கூறினார், "ஆம் ஐய்யா, அது உண்மை தான். என் குரு மகாராஜர் என்னை ஒரு மூடனாக, அயோக்கியனாக கருதினார். ஆகையால் நான் அவ்வாறு செய்கிறேன். "அது எப்படி?" அவர் கூறினார்,


குரு மோரெ மூர்க தேகி கரிலா ஷாஸன (சைதன்ய சரிதாம்ருதம் ஆதி லீலை 7.71)


என் குரு மகாராஜர் என்னை அடிமட்டத்து முட்டாளாக கருதி என்னை திட்டுவார்." "எவ்வாறு திட்டுவார்?" அதாவது, "நீ வேதாந்தம் படிப்பதற்கு தகுதியற்றவன். இது உனக்கு சாத்தியம் அல்ல. நீ ஒரு மூடன். நீ ஹரே கிருஷ்ண ஜெபம் செய்தால் உனக்கு நல்லது." ஆக அவர் நோக்கம் என்ன? நோக்கம் என்னவென்றால், தற்போது, இந்த மூடர்களால் எப்படி வேதாந்தத்தை புரிந்துகொள்ள முடியும்? அதற்கு ஹரே கிருஷ்ண ஜெபிப்பதே தேவலை. பிறகு உனக்கு எல்லா அறிவும் கிடைக்கும்.


ஹரேர் நாம ஹரேர் நாம ஹரேர் நாமைவ கேவலம் கலௌ நாஸ்தி எவ நாஸ்தி எவ நாஸ்தி எவ கதிர் அன்யத (சைதன்ய சரிதாம்ருதம் ஆதி லீலை 17.21)


இந்த காலத்தில் மக்கள் மிகவும் வீழ்ச்சியுற்றவர்கள். அவர்களால் எப்படி வேதாந்தத்தை புரிந்துகொள்ள முடியும். மேலும் யாரிடம் வேதாந்தத்தை படிக்க நேரம் இருக்கிறது? ஆக வேதாந்தத்தின் கற்பித்தலை நேரடியாக கிருஷ்ணர் கூறும்படி ஏற்றுக்கொள்வதே நல்லது, வேதைஸ் ச ஸர்வைர் அஹம் எவ வேத்ய: (பகவத்-கீதை 15.15). வேதாந்த ஞானம் என்பது 'சப்தாத் அனாவ்ருத்தி'. இந்த 'சப்த-ப்ரம்மன்' என்பதை ஜெபிப்பதால் ஒருவரால் முக்தி அடைய முடியும். ஆகையால் இது சாத்திரங்களில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது:


ஹரேர் நாம ஹரேர் நாம ஹரேர் நாமைவ கேவலம் கலௌ நாஸ்தி எவ நாஸ்தி எவ நாஸ்தி எவ கதிர் அன்யதா (சைதன்ய சரிதாம்ருதம் ஆதி லீலை 17.21)


ஆக ஒருவர் உண்மையிலேயே இந்த பௌதீக ஆசாபாசங்களிலிருந்து விடுபடுவதில் ஆர்வமாக இருந்தால்,


ஜன்ம–ம்ருத்யு-ஜரா-வ்யாதி (பகவத்-கீதை 13.9)


இவை தான் துன்பங்கள் - ஆகையால் சாத்திரங்களின்படி, மகாஜனர்களின்படி, இந்த ஹரே கிருஷ்ண மகா-மந்திரத்தின் ஜெபத்தை ஏற்றுக் கொள்ளவேண்டும். இது தான் நம் நோக்கம்.