TA/Prabhupada 0362 - நம் இயக்கத்தில் பன்னிரண்டு ஜி.பி.ஸி குழுவினர் போல், கிருஷ்ணரிடமும் பன்னிரண்டு



Lecture on SB 1.13.15 -- Geneva, June 4, 1974

நீங்கள் தெருவில் நடக்கும் பொழுது, ஒரு எறும்பு உங்கள் கால் பட்டு செத்தால், நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள். இது தான் இயற்கையின் சட்டம். நாம் இத்தகைய ஆபத்தான நிலையில் இருக்கிறோம். ஒவ்வொரு அசைவிலும் தண்டனை உண்டு. நீங்கள் சாஸ்திரத்தை நம்பினால், அது வேறு விஷயம். நீங்கள் நம்பாவிட்டால், உங்கள் விருப்பப்படி எதை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் இயற்கை, அதாவது கடவுளின் சட்டம் என்பது மிகவும் கடுமையானது, மிகவும் கண்டிப்பானது என்பதை சாத்திரங்களிலிருந்து புரிந்துகொள்ளலாம். எனவே மண்டூக முனிவர் எமராஜரை கண்டித்தார், "என் குழந்தை பருவத்தில், அறியாத வயதில் நான் ஒன்றை செய்ததற்கு, 'நீ எனக்கு இவ்வளவு பெரிய தண்டனையை வழங்கியுள்ளாய். எனவே நீ ஒரு பிராமணனோ அல்லது சத்திரியனோ ஆவதற்கு பொருத்தமானவன் இல்லை. நீ சூத்திரன் ஆகிவிடு." ஆக அவர் சூத்திரன் ஆவதின் சாபத்தை பெற்றார். எனவே எமராஜர், விதுரன் என்ற பெயரில் ஒரு சூத்திர தாயின் கர்ப்பத்தில் பிறந்தார். இது தான் விதுரரின் பிறப்பின் வரலாறு. அவர் இல்லாததால், தேவர்களில் ஒருவரான அர்யமா என்றவர், யமராஜரின் பொறுப்பை ஏற்றார்.

ஆகவே, "அபிபரத் அர்யமா தண்டம்" என கூறப்படுகிறது. அப்பொறுப்பை நிகழ்த்தியே ஆகவேண்டும். நீதிபதியின் பதவியை காலியாக வைத்திருக்க முடியாது. யாராவது வந்து செயல்படவேண்டும். எனவே அர்யமா செயல்பட்டார். யதாவத் அக-காரிஷு. அக-காரிஷு. அக-காரி என்றால்... அக என்றால் பாவ செயல்கள், மற்றும் காரிஷு. காரிஷு என்றால் பாவ செயல்களில் ஈடுபடுபவர்கள். மற்றும் யதாவத். யதாவத் என்றால் சரியான பொருத்தமான வகையில், எப்படி தண்டிக்கப்படவேண்டுமோ அப்படி. யதாவத் அக-காரிஷு. யாவத் ததார ஷூத்ரத்வம். எமராஜர் சூத்திரராக இருந்த வரையில், அர்யமா அவர் இடத்தில் எமராஜராக பொறுப்பை ஏற்றார். இது‌ தான் பொருள். (கருத்தை படித்து :) "விதுரர் ஒரு சூத்திர தாயின் கர்ப்பத்தில் பிறந்தார். ஆகையால் தன் சகோதரர்களான திருதராஷ்ட்டிரர் மற்றும் பாண்டுவுடன் அரச பாரம்பரியத்தில் பங்கேற்பதற்கு கூட தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த சூழ்நிலையில், இப்படிப்பட்ட அறிஞர்களுக்கு அறிவுறுத்தும் ஆலோசகர் பதவியில் எப்படி அவரால் பொறுப்பேற்க முடிந்தது? அதற்கு பதில் என்னவென்றால், அவர் பிறப்பால் ஒரு சூத்திரனாக இருந்தாலும், மைத்ரேய ரிஷியால் அங்கிகரிக்கப்பட்டு, ஆன்மீகத்தில் தெளிவை அடைவதற்காக உலகை துறந்ததால் மற்றும் அவரிடமிருந்து ஆன்மீக ஞானத்தை முற்றிலும் கற்றதால், ஆச்சாரியார் அதாவது ஆன்மீக ஆலோசகர் பதவியில் பணியாற்றுவதற்கு தகுதியள்ளவராக இருந்தார்." விதுரர் ஒரு சூத்திரர், பிறப்பால் சூத்திரர். பிறகு எப்படி அவர் ஒரு போதகர் ஆனார்? காரணம் என்னவென்றால்,


"சைதன்ய மஹாபிரபுவின்படி, திவ்ய ஞானத்தை அதாவது கடவுளை பற்றிய விஞ்ஞானத்தை நன்கறிந்தவன் எவனும், பிறகு அவன் பிராமணனோ சூத்திரனோ, குடும்பஸ்தனோ சந்நியாசியோ, ஆன்மீக குரு ஆவதற்கு தகுதிபெற்றவனே." அவன் சூத்திரனாக பிறந்ததால், பிரசாரம் செய்யமுடியாது என்று அர்த்தம் ஆகாது. அவனால் ஆச்சாரியார் அதாவது ஆன்மீக குருவின் ஸ்தானத்தை ஏற்கமுடியாது. இது சைதன்யரின் தத்துவம் அல்ல. சைதன்யரின் தத்துவம் இந்த வெளிப்புற உடலுடன் சம்பந்தப்பட்டதல்ல. சைதன்யரின் தத்துவம் ஆத்மாவை சம்பந்தப்பட்டது. இந்த இயக்கம், ஆன்மாவை உயர்நிலைக்கு எடுத்துச் செல்லும் இயக்கம், ஆன்மாவை தாழ்வடைவதிலிருந்து காக்கும் இயக்கம். எனவே சிலசமயங்களில் மக்கள் ஆச்சர்யப்பட்டு போகிறார்கள். உடலை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கையின் கருத்தில், அதே செயல்கள் கர்ம என்றழைக்கப்படுகின்றன. ஆன்மீக வாழ்வின் தளத்தில், அதே கர்ம என்பது பக்தி ஆகிறது. அதே கர்ம என்பது பக்தி ஆகிறது. ஆக பக்தி என்பது செயலற்ற தன்மை கிடையாது. பக்தி என்பது முற்றிலும் செயலை சார்ந்தது.


யத் கரோஸி பஜ் ஜுஹோஸி யத் அஷ்னாஸி யத் தபஸ்யஸி குருஸ்வ தத் மத்-அர்பணம் (பகவத்-கீதை 9.27)


இது தான் பக்தி, பக்தி-யோகம். கிருஷ்ணர் எல்லோருக்கும் கூறுகிறார், "உன் கர்மாவை உன்னால் கைவிட முடியாவிட்டால் பரவாயில்லை. ஆனால் உன் கர்மாவின் பலனை எனக்கே அர்ப்பணி. பிறகு அது பக்தியாகிவிடும்." ஆக விதுரர் வாஸ்தவத்தில் எமராஜர். அவர் வெறும் எமராஜராக மட்டும் இல்லாமல், இந்த விஷயத்தில் ஒரு மிகச் சிறந்த அதிகாரியும் ஆவார். சாஸ்திரத்தில் பன்னிரண்டு அதிகாரிகள் குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் தான் எமராஜர். பலிர் வையாஸகிர் வயம். இது ஸ்ரீமத் பாகவதத்தில் கூறப்பட்டிருக்கிறது. எமராஜர் கிருஷ்ணரின் ஜி.பி.ஸி. குழுவில் ஒருவர். ஆமாம். நம் இயக்கத்தில் பன்னிரண்டு ஜி.பி.ஸி. குழுவினர் இருப்பது போல், கிருஷ்ணரிடமும் பன்னிரண்டு ஜி.பி.ஸி. குழுவினர் உள்ளனர்.


ஸ்வயம்பூர் நாரத: ஷம்பு: குமார: கபிலோ மனு: ப்ரஹலாதோ ஜனகோ பீஷ்மோ பலிர் வையாஸகிர் வயம் (ஸ்ரீமத் பாகவதம் 6.3.20)


அந்த பன்னிரண்டு நபர்கள், கிருஷ்ண பக்தியை பிரசாரம் செய்வதற்கு அங்கிகாரம் பெற்றவர்கள். ஆக நாம் பின்பற்றவேண்டும்.


மஹாஜனோ யேன கத: ஸ பந்தா சைதன்ய சரிதாம்ருதம் 17.186)


எனவே நாம் இந்த ஜி.பி.ஸி. குழுவை உருவாக்கியிருக்கிறோம். ஆகையால் அவர்கள் மிகவும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அவர்கள் சூத்திரன் ஆகுமாறு தண்டிக்கப்படுவார்கள். எமராஜர் ஜி.பி.ஸி. யில் ஒருவராக இருந்தும், ஒரு சிறிய தவறை செய்தார். அவர் ஒரு சூத்திரன் ஆகுமாறு தண்டிக்கப்பட்டுள்ளார். ஆக ஜி.பி.ஸி. ஆனவர்கள், இஸ்கானின் செயல்பாடுகளை நிகழ்த்துவதில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். பதவி மிகப்பெரிய பொருப்புடையதானதால், தண்டனையும் மிகப்பெரியதாக தான் இருக்கும். அது தான் சவால். விதுரரின் உதாரணத்திலிருந்து நீங்களே பார்க்கலாம். அவர் உடனேயே தண்டிக்கப்பட்டார். அவர் ஒரு சிறிய தவறை செய்தார். ஏனென்றால் ரிஷிகளும் முனிவர்களும் சாபமிடுவார்கள்.