TA/Prabhupada 0369 - என்னுடைய இந்த சீடர்கள், என் அம்சம்



Room Conversation with Life Member, Mr. Malhotra -- December 22, 1976, Poona

திரு. மல்ஹோத்ரா: ஆனால் கடந்தகாலத்தில் பல முனிவர்கள் அஹம் ப்ரஹ்மாஸ்மி என அறிவித்திருக்கிறார்களே, அது எப்படி.


பிரபுபாதர்: (ஹிந்தி). நீ பிரம்மன். ஏனென்றால் நீ பரப்பிரம்மனின் அம்சம். அதை நான் முன்பே உனக்கு கூறியிருக்கிறேன், அதாவது... தங்கம், தங்கக் கட்டி மற்றும் ஒரு சிறிய துகள், அதுவும் தங்கம் தான். அதுபோலவே, பகவான் பரப்பிரம்மன், மற்றும் நாம் அவர் அம்சங்கள். ஆகையால் நான் பிரம்மன். ஆனால் நான் பரப்பிரம்மன் அல்ல. கிருஷ்ணர், அர்ஜுனரால் பரப்பிரம்மன் என ஏற்க்கப்பட்டுள்ளார்:


பரம் ப்ரஹ்ம பரம் தாம பவித்ரம் பரமம் பவான் (பகவத்-கீதை 10.12)


பரப்பிரம்மன். ஆக பரம் என்கிற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது, பரமாத்மா, பரப்பிரம்மன், பரமேஷ்வர. எதற்காக? அது தான் வித்தியாசம். ஒருவர் மீயுயர்ந்தவர் மற்றும் ஒருவர் கீழ்படிந்தவர். கீழ்படிந்த பிரம்மன். நீ பிரம்மன், அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அந்த பரப்பிரம்மன் அல்ல. நீ பரப்பிரம்மன் என்றால், பிறகு எதற்காக நீ பரப்பிரம்மன் ஆவதற்கு ஸாதனா (பயிற்சி) ஏற்கிறாய்? எதற்காக? நீ பரப்பிரம்மன் என்றால், எப்பொழுதும் பரப்பிரம்மனாக அல்லவா இருக்கவேண்டும். பரப்பிரம்மன் ஆவதற்கு ஸாதனா செய்யவேண்டிய அவசியம் ஏற்படும் அளவுக்கு எப்படி இந்த தாழ்ந்த நிலைக்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறாய்? அலு பைத்தியக்காரத்தனம். நீ ஒண்ணும் பரப்பிரம்மன் அல்ல. நீ பிரம்மன். நீ தங்கம், ஒரு சிறிய துகள். ஆனால் "நான் தங்கக் கிணறு." என உன்னால் கூறமுடியாது. அப்படி உன்னால் செய்யமுடியாது.


பரம் ப்ரஹ்ம பரம் தாம பவித்ரம் பரமம் பவான் (பகவத்-கீதை 10.12)


கோபால கிருஷ்ண: அவர் செல்வதற்கு நேரம் ஆயிற்றா என கேட்கிறார். நீங்களும் எங்களுடன் வருகிறீர்களா? நல்லது.


பிரபுபாதர்: சற்று தண்ணீர் தாருங்கள். என்னுடைய இந்த சீடர்கள், அவர்கள் என் அம்சம். முழு இயக்கமும் அவர்கள் ஒத்துழைப்பால் தான் நடந்துக் கொண்டிருக்கிறது. ஆனால் நான் என் குரு மகாராஜருக்கு சமமானவன் என அவன் கூறினால், அது அபராதம். திரு.


மல்ஹோத்ரா: சிலசமயம் தன் சீடன் தம்மைவிட உயரவேண்டும் என குரு ஆசைப்படலாம் இல்லையா.


பிரபுபாதர்: அப்படியென்றால் அவன் (சீடன்) தற்போது தாழ்ந்த நிலையில் இருக்கிறான். முதலில் அதை நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். திரு.


மல்ஹோத்ரா: ஒவ்வொரு தகப்பனும் தன் பிள்ளைகள் உயர்வதை உறுதி படுத்துவதைப் போல்.


பிரபுபாதர்: ஆம், இருந்தாலும் தந்தை தந்தை தான், மற்றும் ஒரு பிள்ளையால் தந்தை ஆக முடியாது. திரு. மல்ஹோத்ரா: தந்தை தந்தை தான் ஆனால் அவன் முன்னேறுவதை அவர் விரும்புவார்...


பிரபுபாதர்: இல்லை, இல்லை. தன் மகன் சமமாக தகுதி பெற்றிருக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கலாம், இருந்தாலும் தந்தை தந்தை தான், மற்றும் பிள்ளை பிள்ளை தான். அது நிரந்தரமானது. அதுபோலவே, கடவுளின் ஒரு அம்சம் மிகவும் சக்திவாய்ந்தவராக இருக்கலாம், ஆனால் அதற்காக அவன் கடவுள் ஆகிவிட்டான் என்று அர்த்தம் ஆவதில்லை. திரு.


மல்ஹோத்ரா: மற்ற குரு சிஷ்ய பரம்பரைகளில், சிஷ்யன் குரு ஆகிறான், பிறகு அவன் சிஷ்யன். குருக்கள் மாறலாம்.


பிரபுபாதர்: அவர்கள் அப்படி மாறமுடியாது. குரு மாற்றம் என்றால், சிஷ்யன் குருவுக்கு பதிலாக செயல்படுவான், ஆனால் ஒருபோதும் தாம் குருவுக்கு சமமாகிவிட்டதாக கூறமாட்டான். அப்படி கிடையாது. திரு.


மல்ஹோத்ரா: நான் நினைப்பது என்னவென்றால், ஸ்வாமிஜி, உங்கள் குரு உங்கள் மூலம் பிரசாரம் செய்கிறார், மற்றும் நீங்கள் இவர்கள் மூலம் பிரசாரம் செய்கிறீர்கள்.


பிரபுபாதர்: ஆமாம். திரு.


மல்ஹோத்ரா: ஆக சிஷ்யன் என்பவன் அவன் சிஷ்யர்கள் மூலம் குருவாகிறான்.


பிரபுபாதர்: அது சரி தான். ஏவம் பரம்பரா-ப்ராப்தம் (பகவத்-கீதை 4.2)

ஆனால் அதற்காக அவன்... அவன் குருவுக்கு பிரதிநிதியாக இருக்கலாம், கடவுளுக்கு பிரதிநிதியாக இருக்கலாம், ஆனால் அதற்காக அவன் கடவுள் ஆகிவிட்டதாக அர்த்தம் இல்லை.


திரு. மல்ஹோத்ரா: ஆனால் தன் சீடர்களுக்கு அவன் குரு ஆகிறான்.


பிரபுபாகர்: அது சரி தான். திரு. மல்ஹோத்ரா: ஒருபோதும் குருவுக்கு சமமானவன் ஆவதில்லை.


பிரபுபாதர்: சமமாக அல்ல, பிரதிநிதியாக. சமமாக அல்ல. நான் என் பிரதிநிதியாக ஒரு நபரை அனுப்பலாம், அவன் திறமைசாலியாகவும் இருக்கலாம், சிறப்பாக தொழிலை செய்பவனாக இருக்கலாம், இருப்பினும் அவனால் எனக்கு சமம் ஆகமுடியாது. அவன் என் பிரதிநிதியாக செயல்படுகிறான், அது வேறு விஷயம். ஆனால் அதற்காக அவன் உண்மையான முதலாளி ஆனதாக அர்த்தம் இல்லை.


திரு. மல்ஹோத்ரா: ஆனால் உங்களது சிஷ்யர்கள் என்ற முறையில் நீங்கள் குருவாக ஏற்கப்படுகிறீர்கள்.


பிரபுபாதர்: ஆனால் எனக்கு சமமாக ஆகவிட்டதாக அவர்கள் ஒருபோதும் கூறமாட்டார்கள். "நான் என் குருவுக்கு சமமாக முன்னேறிவிட்டேன்." ஒருபோதும் கூறக்கூடாது. இந்த சிறுவனைப் போல் தான், அவன் எனக்கு தனது நமஸ்காரத்தை வழங்குகிறான். அவன் பிரசாரம் செய்வதில் என்னைவிட கைதேர்ந்தவனாக இருக்கலாம், ஆனால் அவனுக்கு, "தாம் கீழ்படிந்தவன்." என்பது தெரியும். இல்லையென்றால் எப்படி அவனால் எனக்கு நமஸ்காரம் செய்ய இயலும்? அவன் நினைத்திருக்கலாம், "ஓ, நான் இவ்வளவு கற்றுள்ளேன். நான் இவ்வளவு முன்னேறிவிட்டேன். நான் எதற்காக அவரை எனக்கு மேம்பட்டவராக ஏற்கவேண்டும்?" அப்படி கிடையாது. அது தொடரும். என் இறப்புக்குப் பிறகும், நான் மறைந்தப் பிறகும், அவன் என் படத்திற்கு நமஸ்காரம் செய்து வணங்குவான்.


திரு. மல்ஹோத்ரா: ஆனால் தன் சீடர்கள் மத்தியில் அவன் வணங்கப்படுவான்...


பிரபுபாதர்: அது சரி, ஆனால் எப்போதும் அவன் தன் குருவுக்கு ஒரு சிஷ்யனாக தான் இருப்பான். அவன் ஒருபோதும், "நான் இப்போது குரு ஆகிவிட்டேன், அதனால் எனக்கு என் குருவைப் பற்றி கவலைப் படவேண்டிய அவசியம் இல்லை," எனக் கூறமாட்டான். ஒருபோதும் கூறமாட்டான். நான் செய்வதுபோல் தான், ஆனால் நான் என் குருவை இன்னுமும் வழிபட்டு வருகிறேன். ஆக நான் எப்பொழுதும் என் குருவுக்கு கீழ்படிந்தவன் தான். நான் குரு ஆகியிருந்தாலும், என் குருவுக்கு கீழ்படிந்தவன் தான்.