TA/Prabhupada 0371 - அமர ஜிவன பாடலின் பொருள்



Purport to Amara Jivana in Los Angeles

ஆமார ஜுவன ஸதா பாபே ரத நாஹிகோ புண்யேர லேஷ. இந்த பாடல் வைணவ தாழ்மை உணர்வில், பக்திவினோத டாகுர் பாடிய பாட்டு. ஒரு வைஷ்ணவன் எப்போதும் மனத்தாழ்மையுள்ளவனாக இருப்பான். ஆக அவர், தன்னை பொதுமக்களில் ஒருவராக எண்ணி, அவர்களின் வாழ்க்கையை பொதுவாக வர்ணிக்கிறார். மக்கள் பொதுவாக இங்கே விவரித்தப்படி இருப்பார்கள். அவர் கூறுகிறார், "என் வாழ்க்கையில் நான் எப்பொழுதும் பாவச் செயல்களில் ஈடுபட்டிருக்கிறேன், மேலும் அதை ஆராய்ந்தால், ஒரு துளியளவு புண்ணியச் செயலைக் கூட தேடிக் கண்டுபிடிக்க முடியாது. வெறும் பாவச் செயல்கள் தான். நான் எப்பொழுதும் மற்ற உயிர் வாழிகளுக்கு தொந்தரவு கொடுப்பதை விரும்புகிறேன். அதுவே என் வேலை ஆகிவிட்டது. மற்றோர் துன்பப்படுவதை மற்றும் நான் இன்பம் பெறுவதை விரும்புகிறேன்." நிஜ ஸுக லாகி பாபே நாஹி தோரி. "என் தனிப்பட்ட புலனுகர்ச்சிக்காக, எந்த பாவச் செயல்களையும் செய்ய நான் கவலைப்படுவதில்லை. அப்படி என்றால் என் புலன்களுக்கு இன்பம் அளிக்கும் வகையில் எந்த பாவச் செயலையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்." தயா-ஹீன-ஸ்வார்த-பரோ. "நான் கருணையே இல்லாதவன், நான் வெறும் என் தனிப்பட்ட நலனை கருதுபவன்." பர-ஸுகே-துகீ. "அதாவது, மற்றோர் துன்பப்பட்டால் நான் மகிழ்ச்சியடைகிறேன். மற்றும் எப்போதும் பொய் பேசுகின்றேன்,".

சதா மித்யா-பாஷீ. "சாதாரணமான விஷயங்களுக்கும் பொய் பேசுவது என் வழக்கம்." பர-துக்க ஸுக-கரோ. "மற்றும் ஒருவர் துன்பப்பட்டால் அது எனக்கு இன்பத்தைத் தருகிறது." அஷேஷ காமனா ஹ்ருதி மாஜே மோர. "என் இதயத்தில் அளவில்லாத ஆசைகள் உள்ளன, மற்றும் நான் எப்பொழுதும் கோபமும் கர்வமும் கொண்டிருக்கின்றேன். பொய்யான பெருமையால் என் நெஞ்சம் எப்போதும் நிறைந்திருக்கிறது. மத-மத்த ஸதா விஷயே மோஹித. "புலன்களுக்கு இன்பம் தரும் விஷயங்களால் நான் எப்போதும் கவரப்படுகிறேன், கிட்டத்தட்ட ஒரு பித்தனைப்போல்." ஹிம்ஸா-கர்வ விபூஷண. "பொறாமையும் கர்வமும் என் ஆபரணங்கள்." நித்ராலஸ்ய ஹத ஸுகார்ஜே பிரத. "உறக்கத்திற்கும் சோம்பேறித்தனத்துக்கும் நான் அடிமையாகிவிட்டேன்," ஸுகார்ஜே பிரத, "புண்ணியச் செயல்களை செய்வதில் இஷ்டம் இல்லாதவனாக இருக்கிறேன்," அகார்ஜே உத்யோகீ ஆமி, "அதர்மச் செயல்களைகச் செய்வதில் ஆரவமாக இருக்கிறேன்." ப்ரதிஷ்டா லாகியா சாத்ய-ஆசரண. "என் கெளரவத்திற்காக மற்றவர்களை ஏமாற்றுகிறேன்." லோப-ஹத ஸதா காமீ, "நான் பேராசையாலும் உடல் சுகம் பெற ஆசையாலும் ஆளப்பட்டிருக்கிறேன்." எ ஹெனொ துர்ஜன ஸஜ்ஜன-பர்ஜித, "ஆக நான் மிகவும் தாழ்ந்தவன் மற்றும் எனக்கு முற்றிலும் பக்தர்களின் சகவாசமே கிடையாது." அபராதி, "குற்றவாளி," நிரந்தர, "எப்பொழுதும்." சுப-கார்ய-சூன்ய, "என் வாழ்க்கையில் எள்ளளவும் தர்ம காரியங்கள் கிடையாது." ஸதானர்த்த மனா:, "கேடு விளைவிக்கும் செயல்களால் என் மனம் எப்பொழுதும் கவரப்பட்டிருக்கிறது." நானா துக்கே ஜர ஜர. "ஆகையால் என் வாழ்க்கையின் கடைசி காலத்தில், இத்தகைய துன்பங்களால் சீரழிந்து போகிவிட்டேன்." பார்தக்யே எகோன உபாய-விஹீன, "தற்போது என் வயதான காலத்தில் என்னிடம் வேறு எந்த வழியும் இல்லை," தா தே தீன அகின்சன, "இந்த கட்டாயத்தால் நான் மிகவும் அடக்க ஒடுக்கமாக ஆகிவிட்டேன்." பக்திவினோத ப்ரபுர சரணே, "இவ்வாறு பக்திவினோத தாகுர் ஆகிய நான், பெருமாள் திருவடியில், வாழ்க்கையில் செயத செயல்களின் கணக்கை ஒப்படைக்கிறேன்."