TA/Prabhupada 0378 - புலியா தொமாரே, பாடலின் பொருள்



Purport to Bhuliya Tomare

இந்த வைஷ்ணவ பாடலில் பக்திவினோத் தாகூர் சரணடைவதை பற்றி பாடியுள்ளார் சரணடைவதைப் பற்றி நாம் நிறைய கேட்டிருக்கிறோம். சரணடைவது எப்படி என்பதை குறிக்கும் சில பாடல்கள் இதோ இங்கு உள்ளன. பக்திவினோத் தாகூர் பாடுகிறார் - புலியா தொமாரே, ஸம்சாரே ஆஸியா, "என் அன்பு நாதா, நான் தங்களை மறந்து, இந்த உலகத்திற்கு வந்தேன். நான் இங்கு வந்ததிலிருந்து, வெகு நீண்டகாலமாக, பல்வேறு உயிரினங்களில் பிறந்து, பல துன்பங்களை அனுபவித்திருக்கிறேன். ஆகையால், நான் உங்களிடம் சரணடைந்து, என் துன்பக்கதையை உங்களிடம் சொல்ல வந்திருக்கிறேன். முதலில், நான் என் தாயின் கருப்பையில் வாழ வேண்டியிருந்தது. " ஜனனி ஜடரே, சிலாம ஜாகோன. "நான் இருந்த இடம் கச்சிதமாக மூடிய ஒரு சிறிய பையை போன்றது". நான் என் தாயின் கருப்பையில், கைகளும் கால்களும் குறுக்கியப்படி தங்கியிருந்தேன். அந்த நேரத்தில், சில வினாடிகளுக்கு மட்டுமே எனக்கு தங்களது தரிசனம் கிடைத்தது. அதற்கு பிறகு, என்னால் உங்களை பார்க்க முடியவில்லை. அந்த ஒரு கணம் மட்டுமே என்னால் உங்களை பார்க்க முடிந்தது. அப்பொழுது நான் நினைதேன், "தாகோன பாவினு ஜனம பாய்யா, இந்த முறை நான் கருப்பையை விட்டு வெளியேரியவுடன், நான் நூறு சதவீதம் நிச்சயமாக பகவத் சேவையில் ஈடுபட்டு பகவானை வழிபடுவேன். இனி இந்த பிறப்பும் இறப்பும் கொண்ட சுழற்சி வேண்டாம். இது மிகவும் மோசமானது. இந்த ஜென்மத்தில் நான் வெறும் பக்தி தொண்டில் ஈடுபட்டு மாயையின் பிடியிலிருந்து வெளியேறுவேன்." ஆனால் துரதிருஷ்டவசமாக, நான் பிறந்தவுடன், "ஜனம ஹொய்லோ, படி மாயா-ஜாலே, நா ஹொய்லோ க்ஞான-லவ, "கர்ப்பத்திலிருந்து நான் வெளியேறிய உடனேயே, மாயா, அதாவது மாய சக்தி, என்னை சிறைப்பிடித்தது, மற்றும் நான் அத்தகைய ஆபத்தான நிலையில் இருந்ததை மறந்துவிட்டேன், தாயின் கருவிலிருந்து வெளியேறியவுடன் நான் முழுமையாக பக்தி தொண்டில் ஈடுபட்டிருப்பேன் என்று கண்களில் கண்ணீருடன் நான் கடவுளிடம் பிரார்த்திதேனே, ஆனால், பிறந்த அடுத்த நிமிடமே இந்த உணர்வுகள் அனைத்தையும் இழந்துவிட்டன. " பின்னர் அடுத்த கட்டம் - ஆதாரேர சேலே, ஸ்வ-ஜனேர கோலே. "பிறகு அனைவரும், செல்ல குழந்தையான என்னை, மடியில் வைத்து கொஞ்சுவார், அப்பொழுது, "வாழ்க்கை மிகவும் இனியது, எல்லோரும் என்னை நேசிக்கிறார்கள்", என நினைத்தேன். பிறகு, "இந்த பௌதீக வாழ்க்கை மிகவும் சுகமானது", என நினைத்தேன்.


ஆதாரேர சேலே, ஸ்வ-ஜனேர கோலே, ஹாஸியா காடானு கால


"ஏனெனில், எந்த பிரச்சனையும் இல்லை. நான் கொஞ்சம் சிரமப்பட்டாலும், எல்லோரும் என் சிரமத்தை நீக்க ஓடோடி வருவார்கள். எனவே என் வாழ்க்கை இப்படியே எப்பொழுதும் இருக்கும் என்று நினைத்தேன். இப்படியாக, வெறும் முகத்தில் ஒரு புன்னகையுடன் நான் என் காலத்தை கழித்து வந்தேன், என் புன்னகை அவர்களுக்கு கவர்ச்சிகரமாக தோன்றியதால் என்னை எப்பொழுதும் தட்டிதழுவினார்கள். "இதுதான் வாழ்க்கை." என்று தோன்றியது. ஜனகி... ஜனக ஜனனி-ஸ்னேஹேதே புலியா, ஸம்ஸார லாகிலோ. "அப்பொழுது, பெற்றோர்களிடமிருந்து நிறைய பாசம் கிடைத்தது. எனவே பௌதீக வாழ்க்கை மிக அருமையானது நான் நினைத்தான்." க்ரமே தின தின, பாலக ஹொய்யா, கேலினு பாலக-ஸஹ. "பிறகு நான் வளர வளர என் சிறுவயது நண்பர்களுடன் விளையாட தொடங்கினேன். அதுவும் ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கைய. சில நாட்களுக்குப் பிறகு, நான் கொஞ்சம் புத்திசாலி ஆனதும், பள்ளிக்குப் அனுப்பப்பட்டேன். அதனால் நான் மிகவும் தீவிரமாக படிக்க ஆரம்பித்தேன். அதன் பிறது, "வித்யார கௌரவே, ப்ரமி தேசே தேசே, தன உபார்ஜன கொரி. "பிறகு ஆணவத்தால்..." பக்திவினோத் தாகூர் நீதிபதியாக இருந்தார். எனவே அவர் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் தனது வாழ்க்கையை பற்றி கூறுகிறார், வித்யார கௌரவே, அதாவது, "நான் ஓரளவு படித்துவிட்டதால், எனக்கு நல்ல பதவி அளிக்கப்பட்டது மற்றும் ஒரு கௌரவமான சம்பாத்தியமும் இருந்தது. ஆகையால் "இது சிறப்பாக இருக்கிறதே." என்று நினைத்திருந்தேன். வித்யார கௌரவே, ப்ரமி தேசே தேசே, தன உபார்ஜன கொரி. ஸ்வ-ஜன பாலன கொரி எக-மனே, "மற்றும் எனது ஒரே கடமை, வாழ்க்கை பராமரிப்பு, எப்படி குடும்பத்தினரை பராமரித்து, அவர்களை சந்தோஷமாக வைத்திருப்பது என்பது தான். அதுவே என் வாழ்க்கையின் ஒரே குறிக்கோளாக மாறியது. " பார்தக்யே எகோன, பக்திவினோத. இப்போது பக்திவினோத் தாகூர், தனது வயதான காலத்தில், காந்தியா காதர அதி, "இப்போது நான் அனுபவித்த இந்த எல்லா ஏற்பாடுகளையும் கைவிட வேண்டிய நேரம் வந்துவிட்டதை உணருகிறேன். நான் இந்த உடலை விட்டு மற்றொரு உடலை ஏற்க வேண்டியிருக்கும். ஆகையால், நான் எவ்வகையான உடலைப் பெறுவேன் என்று எனக்குத் தெரியாது. எனவே, நான் அழுகிறேன், நான் மிகவும் வருத்தப்படுகிறேன். " பார்தக்யே எகோன பக்திவினோத, காந்தியா காதர அதி, "நான் மிகவும் வருத்தப்படுகிறேன்." நா பஜியா தோரே, தின ப்ருத கேலோ, எகோன கி. "உங்களை வணங்காதபடி, உங்களுக்கு சேவை புரியாமலே, நான் இப்படியே என் நேரத்தை வீணாக்கிவிட்டேன். எனக்கு என்ன செய்வது என்பதே விளங்கவில்லை. எனவே, நான் சரணடைகிறேன். "