TA/Prabhupada 0380 - தசாவதார ஸ்தோத்ரம் பாடலின் பாகம் 2 பொருள்



Purport to Dasavatara Stotra, CD 8

அடுத்த அவதாரம் வாமனதேவர். ஒரு குள்ளரான இந்த வாமனதேவர், பலி மகாராஜாவிடம் சென்று மூன்று படி நிலம் கேட்டார். அதற்கு அவர் (பலி மகாராஜாவின்) குருவான சுக்கிராச்சாரியார், வந்தவர் விஷ்ணு என்பதை அறிந்து, அப்படி எந்தவிதமான வாக்குறுதியையும் அளிக்கவேண்டாம் என புத்திமதி சொன்னார். ஆனால் பலி மகாராஜாரோ விஷ்ணுவிடம் ஏதாவது சமர்ப்பிக்க, முழு திருப்தியுடன் ஆவலாக இருந்தார். தம்மை விஷ்ணுவிற்கு பணயாற்றுவதிலிருந்து தடுத்ததால், அவர் தன் குருவின் உறவை நிராகரித்தார். ஆகையால் பலி மகாராஜர் மகாஜனர்களில் ஒருவர் ஆவார். விஷ்ணுவின் வழிபாட்டை யாவராலும் தடுத்து நிறுத்த முடியாது. அப்படி யாராவது தடை விதித்தால், அது தந்தையாக இருந்தாலும் சரி, உறவினராக இருந்தாலும் சரி, அவரை உடனடியாக நிராகரிக்க வேண்டும். ஆகையால்தான் பலி மகாராஜர் ஒரு மகாஜனர். அவர் இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருந்தார்: அவர் குரு, விஷ்ணுவின் வழிபாட்டில் தடைகளை விதித்ததால், அவர் தன் குருவுடன் இருந்த உறவை அறுத்துவிட்டார். இவ்வாறு அவர் தானம் கேட்டார், ஆனால் அது தானம் கேட்பதில்ல, வாஸ்தவத்தில் அது ஏமாற்றுதல். ஆனால் பலி மகாராஜருக்கும் பகவானால் ஏமாற்றப்பட்டுவதில் உடன்பாடு இருந்தது. அது தான் ஒரு பக்தனின் அறிகுறி. பக்தன் என்பவன் பகவானின் எந்த நடவடிக்கையும் ஏற்றுக்கொள்வான், மேலும் பகவான் தம்மை ஏமாற்ற விரும்புவதை பலி மகாராஜர் புரிந்துகொண்டார். மூன்று அடி நிலம் கேட்டு, அவர் முழு பிரம்மாண்டத்தையே ஏற்றுக்கொள்வார். இருந்தாலும் அவர் அதற்கு சம்மதம் தெரிவித்தார். இரண்டே அடிகளில் மேலேயும் கீழேயும், அனைத்து பிரம்மாண்டத்தையும் அளந்தார். பிறகு வாமனதேவர், மூன்றாம் அடியை எங்கே எடுத்து வைப்பது ? என்று அவரிடம் கேட்டார். அதற்கு பலி மகாராஜர், "என் நாதா, தாங்கள் அந்த அடியை என் தலைமேல் எடுத்து வையுங்கள், இந்த உடல் என்னிடம் இன்னுமும் மிச்சம் இருக்கிறது." இவ்வாறு அவர் விஷ்ணு பெருமானையே தன் வசப் படுத்தினார். அதற்கு வாமனதேவர், பலி மகாராஜரின்‌ துவாரபாலகராக இருந்து வந்தார். ஆக அனைத்தையும் தியாகம் செய்வதால், ஸர்வாத்ம ஸ்னபனே பலி, அவர் அனைத்தையும் பகவானிடமே அர்ப்பணித்தார், மற்றும் அந்த அர்ப்பணிப்பால், பகவானையே அடிமையாக்கிவிட்டார். அதற்கு பகவான் தானாகவே மகிழ்ச்சியுடன் பலி மகாராஜரின் துவாரபாலகராக நின்றார். ஆக,


சலயஸி விக்ரமணே பலிம் அத்புத-வாமன பத-நக-நீர-ஜனித-பாவன


வாமனதேவர் மேல்நோக்கி தனது பாதத்தை நீட்டியபொழுது, பிரம்மாண்டத்தின் மேற்பரப்பில், அவர் கால்விரல் பட்டு, ஒரு திறப்பு ஏற்பட்டது. பிறகு அந்த திறப்பிலிருந்து, வைகுண்டத்தில் எழும்பும் கங்கையின் நீர், பொங்கி வழிந்தது.


பத-நக-நீர-ஜனித


மற்றும் அந்த கங்கையின் நீர் தான் இன்றுவரை இந்த உலகத்தில் பாய்ந்தோடுகிறுது. கங்கையின் நீர், போகும் இடங்களையெல்லாம் தூய்மைப்படுத்துகிறது. பத-நக-நீர-ஜனித-ஜன-பாவன.


அடுத்த அவதாரம் என்பது ப்ரிகுபதி, பரசுராமர். பரசுராமர் என்பவர் சக்தியாவேச அவதாரம் ஆவார். அவர் இருபத்தி ஒன்று முறைகள், க்ஷத்திரியர்களை அழித்தார். ஆக, அனைத்து க்ஷத்திரியர்களும் பரசுராமரிடமிருந்து, ஐரோப்பிய மாநிலத்திற்கு பயந்தோடினார்கள், என்பது மகாபாரதத்தில் கூறப்பட்டிருக்கும் வரலாறு. ஆக, இருபத்தி-ஒன்று முறை, அவர் க்ஷத்திரியர்களை தாக்கினார். தர்மத்தை மீறியதால்‌, அவர் அவர்களை வதம் செய்தார். குருக்ஷேத்திரத்தில் அந்த அனைவர்களின் ரத்தமும் நிரம்பிய ஒரு பெரும் குளம் இருக்கிறது. காலம் கடந்த பிறகு அது தண்ணீராய் மாறிவிட்டது. ஆக க்ஷத்திரிய-ருதிர, துன்பத்தை சுமந்திருந்த பூமியின் சுமையை குறைத்து சமாதானப்படுத்துவதற்காக, அவர் பூமியை க்ஷத்திரியர்களின் ரத்தத்தால் நனைத்தார். ஸ்னாபயஸி-பயஸி ஸமித-பாவ-தபம். விதரஸி திக்ஷு ரணே திக்-பதி-கமனியம் தாச-முக-மௌளி-பலிம் ரமணீயம்.


அடுத்த அவதாரம் இராமச்சந்திரர். பத்து தலைகள் கொண்ட ராவணன், பகவானை போருக்கு அழைத்தான், இராமச்சந்திரரும் அந்த சவாலை ஏற்று அவனை வதம் செய்தார். அதற்கு பிறகு


வஹஸி வபுஸி விஸதே வஸனம் ஜலதபம் ஹல-ஹதி-பீதி-மிலித-யமுனபம்


பலதேவர், யமுனை தன்னிடம் வர வேண்டும் என விரும்புனார், ஆனால் அவளோ மறுத்தாள். ஆகையால் அவர் தனது ஏரை வைத்து பூமியை இரண்டு பாகங்களில் பிளக்க நினைத்தார். அப்பொழுது யமுனை கீழ்படிந்து, பகவானிடம் வந்தாள்.


ஹல-ஹாதி-பீதி-யமுனா, ஹல-ஹாதி-பீதி-மிலித-யமுனாபம்


யமுனை பலதேவ பகவானால் தண்டிக்கப்பட்டாள்.


கேஷவ த்ருத-ஹலதர-ரூப, ஹல, ஹலதர என்றால் ஏர், ஹலதர-ரூப ஜய ஜகதீஷ ஹரே


அடுத்து, புத்தர், புத்த பகவான். நிந்தஸி யக்ஞ-விதேர் அஹஹ ஷ்ருதி-ஜதம். மிருகங்களின் படுகொலையை நிறுத்துவது அவரது இலட்சியமாக இருந்ததால், வேத கட்டளைகளை புத்த பகவான் நிராகரித்தார், வேதங்களின் சில யாகங்களில், மிருக பலி என்பது பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. ஆக, பெயரளவில் வேத விதிமுறைகளை பின்பற்றுவோர், மிருக-பலியை நிறுத்தும் புத்ததேவரின் இலட்சியத்திற்கு தடை விதிக்க நினைத்தார்கள், ஆகையால் எப்பொழுது அந்த மக்கள் வேதங்களிலிருந்து தனக்கு சாதகமாக ஆதாரம் வழங்க நினைத்தார்களோ, அதாவது வேதங்களில் இவ்வாறு குறிப்பு இருக்கிறது, யாகங்களில் மிருக-பலிக்கு இடம் இருக்கிறதே, பிறகு எதற்காக தாங்கள் அதை நிறுத்தவேண்டும்? அவர், நிந்தஸி, அவர் நிராகரித்தார். மேலும் அவர் வேதங்களின் அதிகாரத்தை நிராகரித்ததால், புத்த தத்துவம் இந்தியாவில் ஏற்கப்படவில்லை. நாஸ்திக, வேதங்களின் அதிகாரத்தை யாரொருவன் மறுத்தாலும், அவன் நாஸ்திக, அதாவது நம்பிக்கையற்றவன் என்றழைக்கப்படுவான். வேதங்களை அவமதிக்க முடியாது. ஆக, புத்த பகவான், இவ்வாறு, அனுதாபத்துக்குறிய மிருகங்களை காப்பாற்றுவதற்காக, சிலசமயங்களில் வேதங்களின் கட்டளைகளை நிராகரித்தார்.


கேஷவ த்ருத புத்த-ஸரீர ஜய ஜகதீச


அடுத்த அவதாரம் கல்கி அவதாரம். அது இன்னும் நிகழவில்லை. இந்த நாள் முதல் சுமார் நானூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு, கல்கி பகவான் அவதரிப்பார். ஒரு வாளை ஆயுதமாகக் கொண்டு, ஒரு மன்னரைப் போல், குதிரையின் மேல் வருவார். அவர் அனைத்து நாத்திகர்களையும், கடவுள் நம்பிக்கையற்றோரை வெறும் கொன்று குவித்து விடுவார். அக்காலத்தில் ஒருபோதும் பிரசாரம் என்பது இருக்காது. மற்ற அவதாரங்களில் பிரசாரம் இருப்பது போல் கிடையாது. கல்கி அவதாரத்தில், உலகம் முழுவதும், மக்கள் மிருகத்தனத்திற்கு இறங்கிவிடுவார்கள். அதனால் அவர்களுக்கு கடவுள் என்றால் என்ன, ஆன்மீகம் என்றால் என்ன, என்பதை புரிந்துகொள்வதற்கு சக்தியே இருக்காது. கலி-யுகம் என்பது ஏற்கனவே நடந்துகொண்டிருக்கிறது. அது அதிகரிக்கும். மக்களுக்கு, தத்துவம், கடவுள் உணர்வு இதையெல்லாம் புரிந்துகொள்வதற்கு சக்தியே இருக்காது. ஆகையால், வருங்காலத்தில் வேறு வழியே இருக்காது. அப்பேர்ப்பட்டவர்கள் அனைவரையும் கொன்று, மறுபடியும் இன்னொரு சத்ய-யுகத்திற்கு வழி வகுப்பதை தவிர. இது தான் வழி (மங்கலான குரல்).