TA/Prabhupada 0399 - ஸ்ரீ நாம, காயே கௌர மதுர ஸ்வரே பொருள்விளக்கம்
Purport to Sri Nama, Gay Gaura Madhur Sware -- Los Angeles, June 20, 1972
காய் கௌராசாந்த் மதுர ஸ்வரே. இது பக்தி வினோத் தாகுரால் பாடப்பட்ட ஒரு பாடல். அவர் கூறுகிறார், பகவான் சைதன்யர், கௌரா, கௌரா என்றால் பகவான் சைதன்யர், கௌரசுந்தர், அழகான மேனி வண்ணம் கொண்டவர். காய் கௌராசாந்த் மதுர ஸ்வரே. இனிமையான குரலில், அவர் மஹா மந்திரத்தை பாடுகிறார், ஹரே க்ருஷ்ண, ஹரே க்ருஷ்ண, க்ருஷ்ண க்ருஷ்ண, ஹரே ஹரே, ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே. அவர் மிகவும் இனிமையான ஒரு பாடலாக அதை பாடுகிறார் மற்றும் அவர் காட்டிய பாதையை பின்பற்றி மஹா மந்திரத்தை பாடவேண்டியது நமது கடமை. பக்தி வினோத் தாகுர் அறிவுறுத்துகிறார், க்ருஹே டாகோ, வனே டாகோ, ஸதா ஹரி போலே டாகோ. க்ருஹே டாகோ என்றால் நீர் ஒரு கிரஹஸ்தனாக உமது இல்லத்தில் இருந்தாலும் சரி, அல்லது சந்நியாச வாழ்க்கையில் காட்டில் வாழ்ந்தாலும் சரி, இதில் எந்த வித்தியாசமும் இல்லை, ஆனால் நீ ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். க்ருஹே வனே தாகோ, ஸதா ஹரி போலே டாகோ. எப்பொழுதும் இந்த மஹா மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். ஸுகே துக்கே பூலோ நாகோ, "துயரத்திலோ அல்லது சந்தோசத்திலோ, ஜெபம் செய்ய மறவாதே." வதனே ஹரி-நாம கொரோ ரே. திருநாம ஜெபத்தை பொருத்தவரை, எந்த விதமான நிறுத்தமும் இருக்க கூடாது, ஏனென்றால் நான் எந்த சூழ்நிலையில் இருந்தாலும், இந்த மஹா மந்திரத்தை என்னால் தொடர்ந்து ஜெபிக்க முடியும். ஹரே க்ருஷ்ண, ஹரே க்ருஷ்ண, க்ருஷ்ண க்ருஷ்ண, ஹரே ஹரே, ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே. ஆக பக்திவினோத தாகுர் அறிவுறுத்துகிறார், "துன்பமோ இன்பமோ, எப்படி இருந்தாலும் சரி, இந்த மகா மந்திரத்தை தொடர்ந்து ஜபம் செய்." மாயா-ஜாலே பத்த ஹொயே, ஆசோ மிசெ காஜ லோயெ. அறியாமை சக்தியின் வலையில் நீ சிக்கியிருக்கிறாய். மாயா-ஜாலே பத்த ஹொயே, ஒரு மீனவன், கடலிலிருந்து எல்லாவிதமான உயிரினங்களையும் தன் வலையில் சிக்கவைப்பது போல் தான். அதுபோலவே நாமும் அறியாமை சக்தியின் (மாயையின்) வலையில் சிக்கியுள்ளோம். மேலும் நமக்கு எந்த சுதந்திரமும் இல்லாததால், நமது செயல்கள் எல்லாம் அர்த்தமிழந்து போகின்றன. சுதந்திரத்தில் செய்த செயலுக்கு அர்த்தம் இருக்கிறது, நாம் சுதந்திரமாக இல்லாத பட்சத்தில், மாயையின் பிடியில், வலையில் சிக்கியிருக்கும்போது, அப்பேர்ப்பட்ட சுதந்திரத்திற்கு எந்த மதிப்பும் இருப்பதில்லை. ஆகையால் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோமோ அதுவெல்லாம் வெறும் தோல்வியில்தான் முடியும். நமது இயல்பான நிலையில் அறியாமையில் வேறு வழியில்லாமல் ஒரு விஷயத்தை மாய சக்திக்கு கீழ்ப்படிந்து செய்யவேண்டிய கட்டாயம் இருந்தால், நம் நேரம் வீணாக போனது தான் மிச்சம். ஆகையால் பக்திவினோத் தாகுர் கூறுகிறார், "இந்த மனிதப்பிறவியில் உன்னிடம் பக்குவமான சுய நினைவு இருக்கிறது. ஆகவே ஹரே கிருஷ்ண, ராதா-மாதவ, இந்த திருநாமங்களை எல்லாம் நீ ஜெபிக்க வேண்டும். இதில் எந்த நஷ்டமும் இல்லை. எதிர்மாறாக பெரும் லாபம் தான்." ஜீவன ஹொய்லோ ஷேஷ, நா பஜிலே ஹ்ருஷீகேஷ. மெல்ல மெல்ல அனைவரும் மரணத்தின் விளும்பிற்கு செல்கிறார்கள். "நான் இன்னும் நூறு ஆண்டுகளுக்கு வாழ்வேன்" என யாவராலும் சொல்லமுடியாது. எந்த வினாடியிலும் நாம் இறந்து போக வாய்ப்பு இருக்கிறது. ஆகவே அவர் அறிவுறுத்துகிறார், ஜீவன ஹொய்லோ ஷேஷ: நமது வாழ்க்கை எந்த வினாடியிலும் முடிந்து போகி, ஹ்ருஷீகேசரை, கிருஷ்ணரை நாம் சேவிக்காமல் போக வாய்ப்பு இருக்கிறது. பக்திவினோதோபதேஷ. எனவே பக்திவினோத் தாகுர் அறிவுறுத்துகிறார், எகபார நாம-ரஸே மாதோ ரே: "நாம-ரஸே இனிய திருநாம ஜெபத்தால் பரவசத்தை உணருங்கள். இந்த பெருங்கடலில் தம்மை மூழ்க செய்யுங்கள். அதுதான் என் வேண்டுகோள்."