TA/Prabhupada 0405 - கடவுள் ஒரு நபராக இருக்க முடியும் என்பதை அசுரர்களால் புரிந்துகொள்ள முடியாது



Lecture on SB 7.7.30-31 -- Mombassa, September 12, 1971

கடவுள் ஒரு நபராக இருக்க முடியும் என்பதை அசுரர்களால் புரிந்துகொள்ள முடியாது. அது அசுரத்தனமானது. அவர்களால் முடியாது... சிக்கல் என்னவென்றால் ஒரு அசுரன் கடவுளை தன்னுடனேயே ஒப்பிட்டு புரிந்துகொள்ள முயற்சி செயவான். டாக்டர் தவளையார் கதை ஒன்று இருக்கிறது. டாக்டர் தவளையார் அட்லாண்டிக் மாக்கடலைப் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறார். அதை தன் மூன்றடி கிணற்றுடன் ஒப்பிட்டு பார்த்தார். அவ்வளவுதான். அவனுக்கு அட்லாண்டிக் மாக்கடலைப் பற்றி தகவல் கிடைத்த உடன், உடனேயே தன் வரையிட்ட இடத்துடன் ஒப்பிட்டான். அது நாங்கு அடி, அல்லது ஐந்து அடி, ஏன் பத்து அடி ஆழமாக கூட இருக்கலாம், ஏனென்றால் அவன் மூன்று அடிக்குள் இருக்கிறான். அவனது நண்பன் தகவல் தந்தான், "ஓ, நான் தண்ணீரின் மிகப் பெரிய சேமிப்பு ஒன்றை கண்டிருக்கிறேன்." ஆக அது எவ்வளவு பெரியதாக இருக்கும் என்பதை அனுமானம் செய்கிறான், "அது எவ்வளவு பெரியதாக இருக்க முடியும்?" என் கிணறு மூன்று அடி, அப்படி என்றால் அது ஒரு நான்கு அடியோ, ஐந்து அடியோ இருக்கலாம்," இப்படி அவன் மேலும் போய்கொண்டே இருக்கிறான். ஆனால் அவன் பல லக்ஷம் அடிகள் வரை அனுமானித்தாலும் அது அதைவிட ஆழமானது.. அது வேறு விஷயம். ஆக நாத்திகர்கள், அசுரர்கள், தனக்கு தோன்றியதுப் போல், கடவுள், கிருஷ்ணர் இப்படி இருக்கலாம் என்று நினைக்கிறார்கள். கிருஷ்ணர் ஒருவேளை இப்படி இருக்கலாம், கிருஷ்ணர் இப்படி இருக்கும் வாய்ப்பு இருக்கிறது. பொதுவாக அவர்கள் கிருஷ்ண என்றால் நான் என்று நினைக்கிறார்கள். அவர்கள் எப்படி சொல்வார்கள்? கிருஷ்ணர் தலை சிறந்தவர் கிடையாது. அவர்கள் கடவுள் மிகப்பெரியவர் என்று நம்புவதில்லை. அவன் நினைப்பது என்னவென்றால், கடவுள் என்னைப்போலவே திறமை வாய்ந்தவர், ஆகையால் நானும் கடவுள். இது அசுரத்தனமானது.