TA/Prabhupada 0424 - நீங்கள் இந்த வேத கலாச்சாரத்தை முழுமையாக சாதகமாக்கிக் கொள்ளுங்கள்



Lecture on SB 1.1.1 -- New York, July 6, 1972

சமஸ்கிருத மொழி மிகவும் முக்கியமானது, உலகமுழுவதும் மரியாதைக்குரியது. அதிலும் ஜெர்மானியில், அவர்கள் இந்த சமஸ்கிருதத்தை மிகவும் விரும்புகிறார்கள். பல மணி நேரம் சமஸ்கிருத மொழியில் பேசக் கூடிய ஜெர்மன் கல்விமான்கள் பலர் அங்கு இருக்கிறார்கள். அவர்கள் சமஸ்கிருதத்தின் உக்கிரமான மாணவர்கள். என்னுடைய ஞான சகோதரர்களில் ஒருவர், அவர் இப்போது சுவீடனில் இருக்கிறார், அவர் அதில் பேசுவார் "ஒரு இந்திய மாணவர் லண்டநிலிருந்து நம் நாட்டிர்க்கு வரும் போது" பிரித்தானியர் காலத்தில், இந்தியர்கள் லண்டனுக்குச் செல்வார்கள், மேலும் அவர்கள் அங்கு பல்கலைக் கழகப்பட்டம் பெறுவார்கள், மேலும் ஒரு பெரிய மனிதராக வருவார்கள். அது தான் முறையாக இருந்தது. ஆகையால் வீட்டிற்கு வரும் பொழுது, இயல்பாக அவர்கள் மற்ற ஐரொப்பிய நாடுகளைச் சென்று பார்வையிடுவார்கள். ஆகையால் ஜெர்மனியில் அவர்கள் இந்திய மாணவர்களை சோதிப்பார்கள், அவர்கள் சொந்த கலாச்சாரத்தைப் பற்றி எவ்வளவு தூரம் தெரிந்துக் கொண்டுள்ளார்கள் என்று. ஆகையால் இவர், என் ஞானசகோதரர், அவர் பெயர் எர்னஸ்ட் ஸுல்ஸ், இப்போது அவர் சதானந் சுவாமி, அவர் கூறினார் அதாவது அந்த மாணவனுக்கு அவருடைய இந்திய கலாச்சாரத்தைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை, என்று நாம் பார்த்த உடனடியாக, உடனடியாக அவரை நிராகரித்துவிடுவோம், "அது பயனற்றது." ஆகையால் இந்தியர்கள், அதிலும் இந்த கூட்டத்தில் வந்திருந்தால், அதாவது உங்கள் நாட்டை மேன்மைப்படுத்த விரும்பினால், அப்போது நீங்கள் இந்த வேத இலக்கியத்தை வழங்குங்கள். சந்தேகமுள்ள தொழிற்நுட்ப அறிவால் உங்களால் மேற்கத்திய நாடுகளை மிஞ்ச முடியாது. அது சாத்தியமல்ல. அவர்கள் மிகவும் முன்னேற்றமடைந்தவர்கள். நூறு வருடங்கள் முதிர்சியடைந்தவர்கள். எவ்வகையான இயந்திரங்களை நீங்கள் கண்டுபிடித்தாலும், அந்த இயந்திரங்கள் நூறு வருடங்களுக்கு முன் மேற்கத்திய நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. ஆகையால் உங்களால் முடியாது. எதுவும். ஆகையால் நீங்கள் விரும்பினால், இந்தியர்களே, உங்கள் நாட்டை மேன்மைப்படுத்த, அப்போது, இந்த வேத கலாச்சார இதயத்தையும் ஆன்மாவையும் வழங்குங்கள், எவ்வாறு என்றால் நான் அதை செய்ய முயற்சித்துக் கொண்டிருப்பது போல். ஆக எவ்வாறு மக்கள் அதை ஏற்றுக் கொள்கிறார்கள்? அதில் பொருள் இருக்கிறது. எனக்கு முன்னால் பல சுவாமிகள் இந்த நாட்டிற்கு வந்தார்கள், அவர்களால் உண்மையான பொருளை படைக்க முடியவில்லை. அவர்களுக்கு கொஞ்சம் பணம் தேவைப்பட்டது பின் திரும்பிவிட்டார்கள். அவ்வளவு தான். நம்முடைய, இந்த கிருஷ்ண உணர்வு இயக்கம் அதுவல்ல. இந்த மேற்கத்திய நாட்டிற்கு நாம் எதாவது கொடுக்க விரும்புகிறோம். அது தான் நம்முடைய குறிக்கோள். நாம் யாசிக்க வரவில்லை, நாம் அவர்களுக்கு ஏதோ ஒன்று கொடுக்க வேண்டும். அது தான் என் குறிக்கோள். அவர்கள் இங்கு யாசிக்க வந்தார்கள், " எனக்கு அன்னம் கொடுங்கள், எனக்கு பருப்பு கொடுங்கள், எனக்கு கோதுமை கொடுங்கள், எனக்கு பணம் கொடுங்கள்," ஆனால் நான் இந்திய கலாச்சாரத்தில் ஏதாவது கொடுக்க இங்கு வந்தேன். அதுதான் வேறுபாடு. ஆகையால் நீங்கள் ஐரொப்பிய, அமெரிக்க மாணவர்கள், இந்த வேத கலாச்சாரத்தை முழுமையாக சாதகமாக்கிக் கொள்ளுங்கள். ஆகையினால் நான் மிகவும் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறேன் அப்போது தான் நாங்கள், இந்த உடலை விட்டு நான் போகும் முன்பாக, நான் உங்களுக்கு சில புத்தகங்களை கொடுக்க முடிந்தால் என் இறப்பிற்குப் பிறகு நீங்கள் அனுபவிக்கலாம். ஆகையால் அதை பயன்படுத்துங்கள். அதை பயன்படுத்துங்கள். ஒவ்வொரு ஸ்லோகத்தையும் நன்றாக படியுங்கள், கருத்தை புரிந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள், உங்களுக்குள் கலந்துரையாடுங்கள். நித்யம் பாகவத-சேவயா. அது தான் எங்கள் குறிக்கோள். நஷ்ட-ப்ராயேஷூ அபத்ரேஷூ நித்யம் பாகவத-சேவயா (ஸ்ரீ.பா.1.2.18). அபத்ர, நம் இதயத்தில் பல தூய்மையற்ற காரியங்கள் நிறைந்துள்ளன. ஆகையால் இந்த தூய்மையற்ற காரியங்கள் வெறுமனே கிருஷ்ண உணர்வால் தூய்மைப்படுத்தப்படலாம். வேறு எந்த வழிமுறையும் இல்லை. ஸ்ருண்வதாம் ஸ்வ-கதா: க்ருஷ்ண: புண்ய-ஸ்ரவண-கீர்த்தன: ஹ்ருதி அந்த: ஸ்தோ ஹி அபத்ராணி விதுநோதி ஸுஹ்ருத் ஸதாம் (ஸ்ரீ.பா. 1.2.17) நஷ்ட-ப்ராயேஷூ அபத்ரேஷூ நித்யம் பாகவத-சேவயா பகவதி உத்தம ஸ்லோகே பக்திர் பவதி நைஷ்டிகீ (ஸ்ரீ.பா.1.2.18) இதுதான் செயல்முறை. ஸ்ருண்வதாம் ஸ்வ-கதா: க்ருஷ்ண:, கிருஷ்ணர் உங்கள் இதயத்தின் உள்ளே இருக்கிறார். உள்ளே இருந்தும் இல்லாமலும் கிருஷ்ணர் உங்களுக்கு உதவி செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறார். உள்ளே இல்லாமல், அவருடைய உருவத்துடன் இந்த கோயிலில் வருகை தந்துள்ளார். இதை சாதகமாகி நீங்கள் அவருக்கு சேவை செய்யலாம். அவர் தன்னுடைய பிரதிநிதியை, ஆன்மீக குரு, உங்களிடம் நேரடியாக கிருஷ்ணரைப் பற்றி பேச அனுப்பிக் கொண்டிருக்கிறார், மேலும் அவர் உள்ளே பரமாத்மாவாக இருந்துக் கொண்டு உங்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்கிறார். கிருஷ்ண மிகவும் அன்பானவர். அவருக்கு வேண்டியது.... அதாவது நீங்கள் அனைவரும் இந்த பௌதிக வாழ்க்கையில் வேதனைப்படுகிறிர்கள், கிருஷ்ணர் வருகிறார், மேலும் அவர் ஆதரவு தேடுகிறார், ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ் (பா.கீ.18.66). ஆகையால் பாகவத-சேவயா, நித்யம் பாகவத-சேவயா (ஸ்ரீ.பா.1.2.18). மனத்தை தூய்மைப்படுத்தல், சேதொ-தர்பண-மார்ஜன (ஸி.ஸி. அந்திய 20.12). இதுதான் செயல்முறை. நாம் பகவான், கிருஷ்ணரின் அங்க உறுப்புக்கள். ஆகையால் நாம் தூய்மையானவர்கள். பௌதிக அசுத்ததத்தால் நாம் தூய்மையற்றவர்காளாகிவிட்டோம். ஆகையால் நாம் நம்மை தூய்மைப்படுதிக் கொள்ள வேண்டும் மேலும் அதன் செய்முறை கிருஷ்ணரைப் பற்றி கேட்பதாகும். அவ்வளவு தான்.