TA/Prabhupada 0435 - இந்த உலகின் பிரச்சனைகளில் குழப்பம் அடைந்துள்ளோம்



Lecture on BG 2.8-12 -- Los Angeles, November 27, 1968

பக்தர்: "என் புலன்களை வறட்டுகின்ற இந்த சோகத்தைப் போக்க ஒரு வழியும் என்னால் காண முடியவில்லை. தேவர்கள் உலகத்தையே நான் இந்த பூமியில் பெற்றாலும் இந்த சோக நிலையை என்னால் அகற்றக் கூட முடியாது. சொர்க்கத்தில் இருக்கும் தேவர்களைப் போல் வளமான ராஜ்ஜியத்தை நான் பெற்றும். (ப. கீ. 2.8). சஞ்ஜயன் கூறினான்: இவ்வாறு கூறிய பின், எதிரிகளை தவிக்க வைக்கும் அர்ஜுனன், கிருஷ்ணரிடம் கூறினார், 'கோவிந்தா, நான் போரிட மாட்டேன்' என்று கூறி அமைதியாகி விட்டான் (ப. கீ. 2.9). ஓ பரத குல சந்ததியே, அச்சமயத்தில் கிருஷ்ணர், புன்சிரிப்புடன் இரு தரப்பு சேனைகளுக்கும் மத்தியில், துயரத்தில் பாதிக்கப்பட்டிருந்த அர்ஜுனனிடம் பின்வருமாறு கூறினார் (ப. கீ. 2.10). புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்..." பிரபுபாதர்: ஆகையால் ஆபத்தான நிலையில் நாம் மிகவும் உக்கிரமாக இருந்தால், நாம் தோல்வியடைந்தது போல், ஆனால் கிருஷ்ணர் புன்னகை புரிக்கிறார். நீங்கள் பார்க்கிறீர்களா? சில நேரங்களில் நாம் நினைப்போம்... இதைத்தான் மாயை என்றழைக்கிறோம். அதே போன்ற உதாரணம், ஒரு மனிதன் சும்மா கனவில், அழுகிறான், "அங்கு புலி இருக்கிறது, அங்கு புலி இருக்கிறது, அது என்னை உண்ணுகிறது," மேலும் விழித்துக் கொண்ட மனிதன், அவன் புன்னகைக்கிறான், "புலி எங்கே? புலி எங்கே?" மேலும் இந்த மனிதன் அழுதுக் கொண்டிருக்கிறான், "புலி, புலி, புலி." அதேபோல், நாம் மிகவும் குழப்பம் அடைந்து இருக்கும் போது... எவ்வாறு என்றால் அரிசியல்வாதிகளைப் போல், அவர்கள் சில நேரங்களில் அரசியல் சூழ்நிலையால் குழப்பம் அடைகிறார்கள் மேலும் உரிமை கோருகிறார்கள், "இது என்னுடைய நிலம், என் நாடு," மேலும் மற்றொரு காட்சிகாரரும் உரிமை கோருகிறார், "இது என்னுடைய நிலம், என் நாடு," மேலும் அவர்கள் மிகவும் கடுமையாக சண்டையிடுகிறார்கள்.மை கோருகிறார், "இது என்னுடைய நிலம், என் நாடு," மேலும் அவர்கள் மிகவும் கடுமையாக சண்டையிடுகிறார்கள். கிருஷ்ணர் புன்னகை புரிக்கிறார். "இது என்ன இந்த முட்டாள்கள் உரிமை கோருகிறார்கள் 'என் நாடு, என் நிலம்? இது என்னுடைய நாடு, அவர்கள் உரிமை கோருகிறார்கள் 'என்னுடைய நாடு' என்று மேலும் சண்டையிடுகிறார்கள்." உண்மையிலேயே, இந்த நிலம் கிருஷ்ணருக்கு சொந்தமானது, ஆனால் இந்த மக்கள், மாயையின் தூண்டுதாளின் கீழ், உரிமை கோருகிறார்கள், "இது என்னுடைய நிலம், இது என்னுடைய நாடு," எவ்வளவு காலத்திற்கு அவன் இந்த நாட்டிற்கு அல்லது தேசத்திற்குச் சொந்தமாகப் போகிறான் என்பதை மறந்துவிட்டான். அதைத் தான் மாயை என்றழைக்கிறோம். ஆகையால் இது தான் நம் நிலைமை. நம் உண்மையான நிலையை புரிந்துக் கொள்ளாமல் இந்த உலகின் பிரச்சனைகளில் குழப்பம் அடைந்துள்ளோம், அனைத்தும் பொலியானது. ஜனஸ்ய மோஹோ அயம் அஹம் மமேதி (ஸ்ரீ. பா. 5.5.8). மோஹ, மோஹ என்றால் மாயை. இதுதான் மாயை. ஆகையால் எல்லோரும் இந்த மாயையில் இருக்கிறார்கள். ஆகையால் புத்திசாலியாக இருக்கும் ஒருவர், இந்த உலகின் நிலை வெறும் மாயை என்று புரிந்துக் கொண்டால்... "நான்" மேலும் "என்னுடையது," என்னும் கொள்கையின் அடிப்படையில், நான் சோடித்த எண்ணம், இது அனைத்தும் மாயை. ஆகையால் ஒருவர், மாயையிலிருந்து விடுபடும் திறமைசாலியாக இருந்தால், அவர் ஒரு ஆன்மீக குருவிடம் சரணடைவார். இதில் அர்ஜுன் ஒரு எடுத்துக் காட்டாக விளங்குகிறார். அவர் மிகவும் குழப்பமாக இருந்த போது... அவர் கிருஷ்ணருடன் ஒரு நண்பனாக பேசிக் கொண்டிருந்தார், ஆனால் அவர் கவனித்தார் அதாவது "இந்த நட்பான உரையாடல் என் கேள்விக்கு விடை அளிக்காது." ஆக அவர் கிருஷ்ணரை தேர்ந்தெடுத்தார், ஏனென்றால் கிருஷ்ணரின் மதிப்பை அவர் நன்கு அறிந்திருந்தார். குறைந்த பட்சம், தெரிந்திருக்க கடமைபட்டிருக்கிறார். அவர்கள் நண்பர்கள். மேலும் அவருக்கு தெரியும் கிருஷ்ணர் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்... "ஆயினும் அவர் என் நண்பனாக நடிக்கிறார், ஆனால் உயர்ந்த அதிகாரிகளால் கிருஷ்ணர் முழுமுதற் கடவுளாக ஏற்றுக் கொள்ளப்பட்டார்." அது அர்ஜுனனுக்கு தெரிந்திருந்தது. ஆகையால் அவர் கூறினார் அதாவது "எனக்கு குழப்பமாக இருக்கிறது அதனால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. அதை ஏற்றுக் கொள்வதால் நான் இந்த போரில் வெற்றி அடையலாம், இருப்பினும் நான் சந்தோஷம் அடையமாட்டேன். இந்த கொள்கிரகத்தில் வெற்றி பெறுவதைப் பற்றி பேச என்ன உள்ளது, நான் மற்ற அனைத்து கிரகங்களுக்கும் மன்னனானால் அல்லது நான் உயர்ந்த கோளரங்கத்தில் தேவராக வந்தால், இருப்பினும் இந்த பேரிடர் குறைக்கப்பட முடியாது."