TA/Prabhupada 0454 - நம் திவ்ய-ஞானத்தை எழுப்பவில்லை என்றால் வாழ்க்கை மிகுந்த துன்பம் நிறைந்ததாக இருக்கும்



Lecture -- Bombay, April 1, 1977

பிரபுபாதர்: அந்த செய்யுள் என்ன? திவ்ய-ஞான ஹிருதே ப்ரகாஷிதோ. சும்மா அதை சந்தத்துடன் பாடு (இந்தியர்கள் திரும்பச் சொன்னார்கள்) அதற்கு முன்பாக. இந்திய விருந்தினர்: பிரேமா-பக்தி யாஹா ஹொய்தே, அவித்யா வினாஷ யாதே, திவ்ய-ஞான ஹிருதே ப்ரகாஷிதோ. பிரபுபாதர்: ஆகையால் அவசியமானது பிரேம-பக்தியாகும். பிரேமா-பக்தி யாஹா ஹொய்தே, அவித்யா வினாஷ யாதே, திவ்ய-ஞான. ஆகையால் அந்த திவ்ய-ஞான என்பது என்ன? திவ்ய என்றால் தெய்வீகமான, பௌதிகம் அல்ல. தபோ திவ்யம் (ஸ்ரீ.பா. 5.5.1). திவ்யம் என்றால், நாம் கருப்பொருள் மேலும் ஆன்மாவின் கூட்டுப் பிணைப்பு. அந்த ஆன்மா தான் திவ்ய, தெய்வீகமானது. அபரேயம் இதஸ் து வித்தி மே ப்ரக்ருதிம் பரா (ப.கீ. 7.5). அது பரா ப்ரக்ருதி, உன்னதமானது. அங்கே அந்த உன்னதமான அடையாளம் இருந்தால் .... மேலும் அந்த உன்னதமான அடையாளத்தைப் புரிந்துக் கொள்ள நமக்கு உன்னதமான அறிவு தேவைப்படுகிறது, சாதாரண அறிவு அல்ல. திவ்ய-ஞான ஹிருதே ப்ரகாஷிதோ. ஆகையால் இது அந்த திவ்ய-ஞானத்தை விழிப்பூட்டுவது, குருவின் கடமையாகும். திவ்ய-ஞான. மேலும் குரு அந்த திவ்ய-ஞானத்திற்கு அறிவூட்டுவதால், அவர் வழிப்பாடு செய்யப்படுகிறார். அது தான் தேவைப்படுகிறது. இந்த நவீனம்... நவீனம் அல்லது எப்போதும்; இதுதான் மாயா. அந்த திவ்ய-ஞான, நான் சொல்வதாவது, பிரகடனம் செய்யப்பட்டதில்லை. அவை அதிவ்ய-ஞான என்னும் இருளில் வைக்கப்பட்டிருக்கிறது. அதிவ்ய-ஞான என்றால் "நான் இந்த உடல்." "நான் இந்தியன்," "நான் அமெரிக்கன்," "நான் இந்த உடல்." "நான் இந்து," "நான் முஸ்லிம ," இதுதான் அதிவ்ய-ஞான. தேஹாத்ம-புத்தி. யஸ்யாத்ம-புத்தி: குணபே த்ரி (ஸ்ரீ.பா.10.84.13). நான் இந்த உடல் அல்ல. ஆகையால் நாம் புரிந்துக் கொள்ள முயற்சிக்கும் போது திவ்ய-ஞானத்தின் ஆரம்பம் அங்கிருக்கிறது, அதாவது "நான் இந்த உடல் அல்ல. நான் உன்னதமான தனிமம், நான் ஆன்மீக ஆத்மா இது தாழ்மை. நான் ஏன் இந்த தாழ்மையான அறிவுடன் இருக்க வேண்டும்? நாம் இந்த தாழ்மையுடன் இருக்கக் கூடாது ..... தாழ்வான அறிவு என்றால் இருளில் இருப்பதாகும். தமஸி மா. வேத நிபந்தனை யாதெனில், "தாழ்வான அறிவுடன் இருக்காதீர்கள்." ஜோதிர் கமஹ: "உன்னதமான அறிவுக்கு வாருங்கள்." குருவை வழிபடுதல் என்றால் காரணம் அவர் நமக்கு உன்னதமான அறிவை கொடுக்கிறார். இந்த அறிவு அல்ல - எவ்வாறு சாப்பிடுவது, எவ்வாறு உறங்குவது, எவ்வாறு பாலின்ப வாழ்க்கை கொள்வது மேலும் தற்காத்துக் கொள்வது. பொதுவாக, அரசியல் தலைவர்கள், சமூக தலைவர்கள், அவர்கள் இந்த அறிவை அளிப்பார்கள் - எவ்வாறு சாப்பிடுவது, எவ்வாறு உறங்குவது, எவ்வாறு பாலின்பம் கொள்வது, எவ்வாறு தற்காத்துக் கொள்வது. ஒரு குருவிற்கு இந்த காரியங்களில் எந்த வேலையும் இல்லை. அவர் திவ்ய-ஞானமானவர், உன்னதமான அறிவுடையவர். அதுதான் தேவை. இந்த மனித உருவிலான வாழ்க்கை அந்த திவ்ய-ஞான ஹிருதே ப்ரகாஷிதோவை துயில் எழுப்புவதற்கான ஒரு வாய்ப்பு. மேலும் அவன் திவ்ய-ஞானத்தைப் பற்றி அறியாமல் இருளில் இருந்தால், வெறுமனே அவனுக்கு பயிற்சி அளிக்கப்பட்டால், எவ்வாறு சாப்பிடுவது, எவ்வாறு உறங்குவது, எவ்வாறு பாலின்பம் கொள்வது, எவ்வாறு தற்காத்துக் கொள்வது, பிறகு வாழ்க்கை தோல்வியடைந்துவிடும். அது ஒரு பெரிய இழப்பு. ம்ருத்யு-ஸம்ஸார-வர்த்மனி. அப்ராப்ய மாம் நிவர்தந்தே ம்ருத்யு-ஸம்ஸார-வர்த்மனி (ப.கீ. 9.3). நம் திவ்ய-ஞானத்தை எழுப்பவில்லை என்றால் வாழ்க்கை மிகுந்த துன்பம் நிறைந்ததாக இருக்கும். நாம் எப்போதும் இதை நினைவில் கொள்ள வேண்டும். மிகுந்த துன்பம் நிறைந்த வாழ்க்கை - மறுபடியும் பிறப்பு இறப்பு என்னும் அலைகளில் தள்ளப்படுவோம், நாம் எங்கு போகிறோம் என்று நமக்கு தெரியாது. மிகவும் கடுமையாக. இந்த கிருஷ்ண உணர்வு திவ்ய-ஞானமாகும். இது சாதாரண அறிவு அல்ல. எல்லோரும் இந்த திவ்ய-ஞானத்தைப் புரிந்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். தைவீம் ப்ரக்ருதிம் ஆஷ்ரிதம். ஆகையினால் இந்த திவ்ய-ஞானத்தில் ஆர்வம் உள்ளவர்கள், அவர் தைவீம் ப்ரக்ருதிம் ஆஷ்ரிதம் என்று அழைக்கப்படுகிறார். தைவீயிலிருந்து, திவ்ய வந்திருக்கிறது, சமஸ்கிருதம் வார்த்தை. சமஸ்கிருதம் வார்த்தை, தைவீயிலிருந்து, திவ்ய, உரிச்சொல். ஆகையால் மஹாத்மானஸ் து மாம் பார்த தைவீம் ப்ரக்ருதிம் ஆஷ்ரிதா: (ப.கீ.9.13). இந்த திவ்ய-ஞான நெறியை மேற்கொண்டவர், அவர் தான் மஹாத்மா. மஹாத்மா என்பது முத்திரைக்காக, எவ்வாறு சாப்பிடுவது, எவ்வாறு உறங்குவது, எவ்வாறு பாலின்பம் கொள்வது, என்பதற்காக ஏற்பட்டதல்ல. சாஸ்திரத்தில் இதன் வரைவிலக்கணம் அதுவல்ல. ஸ மஹாத்மா ஸு-துர்ல:. பஹுனாம் ஜன்மனாம் அந்தே க்ஞானவான் மாம் ப்ரபத்யதே வாஸுதேவ: ஸர்வம் இதி ஸ மஹாத்மா ஸு-துர்ல:. (ப.கீ.7.19) இந்த திவ்ய-ஞான உள்ள ஒருவர், வாஸுதேவ: ஸ்ர்வம் இதி ஸ மஹாத்மா, அதுதான் மஹாத்மா. ஆனால் அது மிக மிக அரிதானது. இல்லையெனில், இது போன்ற மஹாத்மா, அவர்கள் தெருவில் நோக்கமின்றி திரிந்துக் கொண்டிருக்கிறார்கள். இது தான் அவர்கள் தொழில். ஆகையால் நீங்கள் எப்போதும் இந்த வார்த்தையை நினைவில் கொள்ள வேண்டும், திவ்ய-ஞான ஹிருதே ப்ரகாஷிதோ. மேலும் ஆன்மீக குரு திவ்ய-ஞானத்தை தெளிவாக்குவதால், ஒருவர் அவரிடம் கடப்பாடு உணர்கிறார். யஸ்ய ப்ரஸாதாத் பகவத்-ப்ரஸாதோ யஸ்யாப்ரஸாதான் ந கதி குதோ பி. ஆகையால் இந்த குரு பூஜை முக்கியமானது. ஸ்ரீமூர்த்தி வழிபாடு முக்கியமானது போல் ... இது மலிவான வழிபாடு அல்ல. திவ்ய-ஞானத்தை தெளிவுபடுத்தும் செய்முறை. மிக்க நன்றி. பக்தர்கள்: ஜெய் பிரபுபாதா.