TA/Prabhupada 0458 - ஹரே கிருஷ்ண ஜபிக்கும் பொழுது,உன் நாக்கு கிருஷ்ணரை ஸ்பரிசம் செய்கிறது



Lecture on SB 7.9.6 -- Mayapur, February 26, 1977

பிரபுபாதர்: ஆக நரசிம்ம-தேவர், பிரகலாத மஹாராஜரின் தலையை தொட்டதுப் போல், உடனேயே நீங்களும் அதே அனுக்கிரகத்தை பெறலாம். "அது என்ன அனுக்கிரகம்? எப்படி அது? நரசிம்ம-தேவரோ நம் முன்னிலையில் இல்லை. கிருஷ்ணரும் இல்லை." அப்படி கிடையாது. அவர் இங்கே இருக்கிறார். "எப்படி அது?"


நாம ரூபே கலி காலே கிருஷ்ண அவதார (சைதன்ய சரிதாம்ருதம் ஆதி லீலை 17.22)


கிருஷ்ணர் தன் நாமமாக இங்கே இருக்கிறார். இந்த ஹரே கிருஷ்ண, இந்த பெயர், கிருஷ்ணரிலிருந்து வேறுபட்டது அல்ல. பூரணம். கிருஷ்ணர், அர்ச மூர்த்தியான கிருஷ்ணர், கிருஷ்ண நாமம், கிருஷ்ணர் என்கிற நபர் - எல்லாம், அதே பரம பூரண உண்மை தான். என்த வித்தியாசமும் கிடையாது. ஆக இந்த யுகத்தில் வெறும் ஜபிப்பதாலேயே:


கீர்த்தனாத் ஏவ க்ருஷ்ணஸ்ய முக்த-ஸங்க: பரம் வ்ரஜேத் (ஸ்ரீமத் பாகவதம் 12.3.51)


வெறும் கிருஷ்ணரின் திருநாமத்தை ஜபிப்பதாலேயே...


நாம-சிந்தாமணி க்ருஷ்ண: சைதன்ய-ரஸ- விக்கறஹ:, பூர்ண ஷுத்தோ நித்ய-முக்த (சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை 17.133)


கிருஷ்ணரின் திருநாமம் கிருஷ்ணரிலிருந்து வேறுபட்டது என்று நினைக்காதீர்கள். அது பூர்ணம்.


பூர்ண: பூர்ணம் அத: பூர்ணம் இதம்

(ஈஷோபனிஷத், பிரார்த்தனை). எல்லாம் பூர்ண. பூர்ண என்றால் "நிறைவடைந்தது." இந்த நிறைவடைவதை நாம் எங்கள் ஈஷோபனிஷத் விளக்கி இருக்கிறோம். நீங்கள் படித்திருக்கிறீர்கள். ஆக கிருஷ்ணரின் திருநாமத்தை நன்றாக கடைப்பிடித்தால் போதும். பிரகலாத மகாராஜருக்கு கிடைத்த அதே அனுக்கிரகம் நரசிம்ம-தேவரின் தாமரைக் கரங்களின் நேரடி ஸ்பரிசத்தினால் உங்களுக்கும் கிடைக்கும். அதில் வித்தியாசமே கிடையாது. எப்பொழுதும் அப்படியே நினைக்கவேண்டும். ஹரே கிருஷ்ண ஜபிக்கும் பொழுது, உன் நாக்கு கிருஷ்ணரை ஸ்பரிசம் செய்கிறது என்பதை நீ அறிய வேண்டும். அப்பொழுது பிரகலாத மகாராஜருக்கு கிடைத்த அதே அனுக்கிரகம் உனக்கும் கிடைக்கும். மிக நன்றி. பக்தர்கள்: ஜய!