TA/Prabhupada 0484 - பிரேமம் என்பது பாவனத்தின் முதிர்ந்த நிலையாகும்.



Lecture -- Seattle, October 18, 1968

பிரபுபாதர்: ஏதாவது கேள்வி? ஜெய-கோபாலா: பா4வ என்பதற்கும் பிரேமைக்கும் என்ன வித்தியாசம்? பிரபுபாதர்: பிரேமை என்பது பா4வ என்பதின் முதிர்ந்த நிலை. இது பழுத்த மாம்பழம் மற்றும் மாங்காய் போன்றது. பழுத்த மாம்பழத்திற்கு காரணம் மாங்காய்தான். ஆனால் மாங்காயைவிட பழுத்த மாம்பழத்தை சுவைப்பது நல்லது. இதேபோல், கிருஷ்ண பிரேமையை அடைவதற்கு முன்பு, வெவ்வேறு நிலைகள் இருக்கிறது. ஒரு மாம்பழம் பல நிலைகளைக் கடந்து செல்கிறது, அதைப் போன்றதே இதுவும். ஒரு நாள் அது நல்ல மஞ்சள் நிறமாகிறது. முழுமையாக பழுத்து, சுவைக்கவும் நன்றாக இருக்கிறது. அதே மாங்காய். மாங்காய் மாறுவதில்லை, ஆனால் அது முதிர்ந்த நிலைக்கு வருகிறது. எனவே இது ... இந்த உதாரணத்தில், மாம்பழம் ஆரம்பத்தில் ஒரு பூவாக இருக்கிறது, பின்னர் படிப்படியாக ஒரு சிறிய காய். பின்னர் படிப்படியாக அது வளர்கிறது. பின்னர் அது மிகவும் இறுக்கமாகவும், பச்சை நிறமாகவும் மாறுகிறது, பின்னர், படிப்படியாக, அது கொஞ்சம் கொஞ்சமாக மஞ்சள் நிறமாக மாறும், பிறகு முழுமையாகப் பழுக்கும். இதுவே எல்லாவற்றின் செயல்முறையாகும். பௌதிக உலகிலும்கூட, ஆறு நிலைகள் உள்ளன, கடைசி நிலை மறைவதுதான்.. இந்த மாம்பழம் எடுத்துக்காட்டு அல்லது வேறு ஏதேனும் பௌதிகப் பொருட்களின் உதாரணத்தை பார்த்தாலும், வளர்ச்சியைப் பொறுத்த வரை நாம் அதனை ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் பௌதிகப் பொருட்களின் உதாரணம் - பக்குவமானதல்ல. இது மாம்பழத்தைப் போன்றதுதான். அது பழுத்ததும், யாராவது சாப்பிட்டால், சரிதான். இல்லையெனில், அது மேலும் கனிந்து, அழுகிவிடும். அது கீழே விழுந்து விடும், முடிந்தது. அது பௌதிகமானது. ஆனால் ஆன்மீகம் அப்படி இல்லை. அது முடிவதில்லை. நீங்கள் ஒரு முறை அன்பின் முதிர்ந்த நிலைக்கு வந்துவிட்டால், பிறகு அந்த பக்குவமான நிலை நித்தியமாக தொடரும், உங்கள் வாழ்க்கை வெற்றியடையும். பிரேமா- பும் - அர்த்தோ மஹான். இந்த பௌதிக உலகில் பல வகையான பக்குவங்கள் உள்ளன. "இதுவே வாழ்வின் பக்குவ நிலை" என்று சிலர் நினைக்கிறார்கள். பௌதிகவாதிகள் நினைக்கிறார்கள், "நான் என் புலன்களை மிக நன்றாக அனுபவிக்க முடிந்தால், அதுவே வாழ்க்கையின் பக்குவம்." அது அவர்களின் கண்ணோட்டம். அதில் விரக்தியடைந்தால், அவர்கள் வேறு எதையாவது கண்டுபிடிப்பார்கள், அல்லது கண்டுபிடிக்க முயற்சி செய்வார்கள். எனவே அவன் வழிநடத்தப்படாத வரையில், சிறந்த ஏதோவொன்று என்றால் அதேதான்- பாலுறவு மற்றும் போதை, அவ்வளவுதான். வெறுமனே பொறுப்பற்றவனாக மாறுகிறான். அவ்வளவுதான். ஏனெனில் வழிகாட்டி இல்லை. அவர் சிறந்த ஒன்றைத் தேடுகிறார், கன்டுபிடிக்கிறார், ஆனால் அதற்குக் காரணம் வழிகாட்டி இல்லை, அவர் அதே புலன்களுக்கு அல்லது பாலுறவு மற்றும் போதைக்கு வருகிறார் - மறக்க வேண்டும் என்பதற்காக. ஒரு தொழிலதிபர், அவர் தோல்வியுறும்போது, ​ மிகுந்த சஞ்சலமடைகிறார். அவர் குடிப்பதன் மூலம் தன்னை மறக்க முயற்சி செய்கிறார். ஆனால் இது செயற்கையான வழி. இது உண்மையில் தீர்வு அல்ல. எவ்வளவு காலம் மறக்க முடியும்? தூக்கம் - எவ்வளவு நேரம் தூங்க முடியும்? மீண்டும் விழித்தெழுந்தால், மீண்டும் நீங்கள் அதே நிலையில் இருக்கிறீர்கள். அதுவல்ல வழி. ஆனால் நீங்கள் கிருஷ்ண பிரேமையின் நிலைக்கு வந்தால், இயற்கையாகவே நீங்கள் இந்த எல்லா முட்டாள்தனங்களையும் மறந்து விடுகிறீர்கள்.. இயற்கையாகவே. பரம் திருஷ்டவ நிவர்த்ததே (பகவத் கீதை 2.59). நீங்கள் மிகவும் சுவையான ஒன்றை, மேலும் அனுபவிக்கத்தக்க ஒன்றைக் கண்டறிந்தால், அவ்வளவாக சுவையற்ற முட்டாள்தனமான விஷயங்களை விட்டுவிடுவீர்கள். எனவே கிருஷ்ண உணர்வு என்பது அத்தகையதொரு விஷயம். இந்த முட்டாள்தனங்கள் எல்லாவற்றையும் மறந்துவிடும்படியான ஒரு தளத்திற்கு அது உங்களை இட்டுச் செல்கிறது. அதுதான் உண்மையான வாழ்க்கை. ப்3ரஹ்ம-பூ4த: ப்ரஸன்நாத்மா (பகவத் கீதை 18.54). நீங்கள் அந்த நிலைக்கு வந்தவுடன், நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதே அதன் அறிகுறி. நீங்கள் எல்லா இடங்களிலும் உணர்கிறீர்கள். ஒன்று ..... பல நிகழ்வுகள் உள்ளன. எனவே கிருஷ்ணருடனான உறவில் இந்த பௌதிக உலகத்தை நீங்கள் ஏற்றுக்கொண்டால், இந்த பௌதிக உலகில்கூட, கிருஷ்ண பிரேமையை நீங்கள் சுவைப்பீர்கள். உண்மையில், பௌதிகஉலகம் என்றால் கடவுள் அல்லது கிருஷ்ணரை முழுவதுமாக மறந்துவிடுவதாகும். அதுவே பௌதிக உலகம். இல்லையெனில், நீங்கள் முழுமையாக கிருஷ்ண உணர்வில் இருந்தால், இந்த பௌதிக உலகத்தில்கூட ஆன்மீக உலகத்தை மட்டுமே நீங்கள் காணலாம். உணர்வு - இது எல்லாம் உணர்வைப் பொறுத்ததே. அதே உதாரணம். அரசனும் , பூச்சியும் ஒரே அரியாசனத்தில் அமர்ந்திருப்பதைப் போன்றதுதான், "எனது வேலை வெறுமனே கொஞ்சம் இரத்தத்தைப் பெறுவதுதான்." இதுதான் அந்தப் பூச்சிக்குத் தெரியும். அவ்வளவுதான். "நான் ஆட்சி செய்ய வேண்டும், நான் இந்த நாட்டின் அதிபதி" என்று அரசனுக்குத் தெரியும். எனவே ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்தாலும், உணர்வு வேறு. இதேபோல், உங்கள் உணர்வை கிருஷ்ண உணர்வுக்கு மாற்றிக் கொண்டால், நீங்கள் எங்கிருந்தாலும், நீங்கள் வைகுந்தத்தில் இருக்கிறீர்கள். எங்கிருந்தாலும் பரவாயில்லை.