TA/Prabhupada 0491 - என் விருப்பத்திற்கு மாறாக பல்வேறு துயரங்கள் இருக்கின்றன



Lecture on BG 2.14 -- Germany, June 21, 1974

வாழ்கையைப் பற்றிப் படியுங்கள். இந்த உடல் உருவாகியது முதல், தாயின் கருவறையில், துன்பத்திற்கே உள்ளாகிறது. என் விருப்பத்திற்கு மாறாக, பல்வேறு துயரங்கள் உள்ளன, பல்வேறு துயரங்கள். நாம் வளர வளர துயரமும் வளர்கிறது. துயரம் குறைவதில்லை. பின்னர் ஜன்மா, வயோதிகம், வியாதி. இந்த உடல் இருக்கும் வரை... விஞ்ஞானிகள் எனப்படுவோர், ஆற்றல் வாய்ந்த மருந்துகளை, கண்டுபிடித்து, புதிதாகக் கண்டு பிடித்து, தயாரிக்கின்றனர். உதாரணமாக... அது என்ன? streptomycin? பல இருக்கின்றன. ஆனால், அவற்றால் வியாதியை நிறுத்த முடியாது. அது சாத்தியமில்லை ஐயா. வியாதிகளை குணப்படுத்த பல்வேறு உயர் தர மருந்துகளை தயாரிக்கலாம். ஆனால், அதனால் குணமடைவதில்லை, தற்காலிக நிவாரணமே கிட்டும். ஆனால் "இந்த மருந்தை எடுத்துக்கொள், இனி உனக்கு வியாதியே இல்லை." என்று கூறும் படியாக எந்த மருந்தையும் எந்த விஞ்ஞானியும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. அது சாத்தியமில்லை. " இந்த மருந்தை உட்கொள், மரணமில்லை" என்பது சாத்தியமில்லை. எனவே, இவ்விடம் து:காலயம் அஷாஷ்வதம் (பகவத் கீதை 8.15) என்பதை புத்திசாலிகள் நன்கு அறிவர். இது பகவத் கீதையில் விளக்கப்பட்டுள்ளது. இது துயரத்தின் இருப்பிடம். நாம் இங்கு இருக்கும் வரையில்.... ஆனால் நாம் இதனை உணராத முட்டாளாக இருக்கின்றோம். "இந்த வாழ்க்கை மிகவும் இனிமையானது. இதனை நன்கு அனுபவிக்கலாம்" என்று நாம் ஏற்றுக்கொண்டு விடுகின்றோம். இது இனிமையானது இல்லவே இல்லை, காலத்திற்கு தகுந்தார் போல எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும். இந்தத் துயரம் அல்லது அந்தத் துயரம், இந்த வியாதி அல்லது அந்த வியாதி. இது அசவுகரியமானது, கவலைக்கிடமானது. துன்பங்களில் 3 வகை உள்ளது: அத்யாத்மிக, ஆதிபௌதிக, ஆதிதைவிக. அத்யாத்மிக என்பது இந்த உடலாலும் மனதாலும் ஏற்படும் துயரம் ஆதிதைவிக என்பது பௌதீக இயற்கையால் ஏற்படும் துயரம் இயற்கை. திடீரென்று பூகம்பம் ஏற்படுகின்றது. திடீரென்று பஞ்சம் ஏற்படுகிறது உணவு பற்றாக்குறை ஏற்படுகிறது, மழை மிகுதியாகவும், மழை இல்லாமலும், பயங்கர வெப்பமாகவும், கடுமையான குளிர் காலமாகவும், அதீத குளிராகவும் இருக்கின்றது. இந்த மூவகை துன்பங்களை நாம் அனுபவித்தாக வேண்டும். ஒன்று இரண்டு மட்டுமாவது இருந்தே ஆகும். இருப்பினும் "இவ்விடம் துன்பம் நிறைந்தது, ஏனெனில் நான் இந்த பௌதிக உடலைப் பெற்றிருக் கின்றேன்" என்று நாம் உணர்வதில்லை.

எனவே புத்திசாலி மனிதனின் கடமையே இந்த பௌதீக உடலை ஏற்றுக்கொள்ளும் முறையினை எப்படி தடுப்பது என்று எண்ணுவதே. அதுவே புத்திசாலித்தனம். " நான் எப்போதும் துயரத்தில் இருக்கின்றேன், மேலும் நான் இந்த உடல் அல்ல, இந்த உடலில் இடப்பட்டு இருக்கின்றேன். எனவே தான் இந்த உடல் இல்லை என்பதே சரியான எண்ணம் எப்படியும் நான் இந்த உடலை விடுத்து வாழ முடியுமானால் என்னுடைய துயரம் முடிந்து போகும் என்று உணர வேண்டும். அதுவே சமயோசித புத்தி. அது சாத்தியமானது. அதனால்தான் கிருஷ்ணர் வருகிறார் அதனால்தான் கடவுள் வருகிறார், "நீ இந்த உடல் இல்லை. நீ ஆத்மா நீ ஆத்மா இந்த உடலில் இருப்பதனால் நீ துயரங்களை அனுபவிக்கிறாய்" என்ற செய்தியைச் சொல்லவே வருகிறார். எனவே கிருஷ்ணர் அறிவுறுத்துவது என்னவென்றால், "இந்த துயரங்கள் எல்லாம் இந்த உடல் இருப்பதனால்" வலி சுகம் என்ற இரண்டையும் ஏன் உணர்கிறோம் என்று புரிந்து கொள்ள வேண்டும். இந்த உடல் இருப்பதால்தான்.

அதுபோலவே புத்தரின் தத்துவமும் அதுதான், இந்த உடலை துறந்துவிடு நிர்வாண நிர்வாண நிர்வாண என்றால்..... அவர்கள் தத்துவத்தின் படி உங்கள் வலியும் சுகமும் உடலினால் தான். அதை ஒப்புக் கொள்கின்றனர்.