TA/Prabhupada 0518 - கட்டுப்பட்ட வாழ்க்கையின் நான்கு செயல்களாவது, பிறப்பு, இறப்பு, மூப்பு மற்றும் நோயடைதலா



Lecture on BG 7.1 -- Los Angeles, December 2, 1968

பௌதிக முறைப்படி ஜட வாழ்வுக்கு தீர்வு காண நினைத்தால், அது சாத்தியமல்ல. அதுவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. பகவத் கீதையில் காணலாம், தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா (BG 7.14). இந்த ஜட இயற்கை, கிருஷ்ணரால் "எனது சக்தி," என்று கூறப்பட்டுள்ளது, மம மாயா... இதுவும் கிருஷ்ணரின் மற்றோரு சக்தியே. அனைத்தும் ஏழாம் அத்தியாயத்தில் விளக்கப்பட்டுவிடும். இச்சக்தியிலிருந்து தப்பிப்பது மிகவும் கடினம். நடைமுறையில் நாம் யாரென்பதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஜட இயற்கையின் சட்டங்களை வெல்வதற்கோ நம்முடைய முயற்சி மிகவும் சிறியது. இது காலத்தை வீணாக்குவதாகும். ஜட இயற்கையை வெல்வதால் மகிழ்ச்சியை அடைய முடியாது. தற்போது விஞ்ஞானம் பல விஷயங்களை கண்டுபிடித்துள்ளது. இந்தியாவிலிருந்து விமானம். உங்கள் நாட்டை வந்தடைய பல மாதங்கள் ஆகியிருக்கும், ஆனால் விமானத்தால் நாம் ஒரே இரவில் இங்கு வந்துவிடலாம். இவ்வாறான சாதகங்கள் இருக்கவே செய்கின்றன. எனினும் இவ்வாறான சாதகங்களுடன் பல பாதகங்களும் உள்ளன. ஆகாயத்தில் விமானத்திலே செல்லும் போது, உங்களுகே தெரியும், நீங்கள் ஆபத்தில் இருப்பது..., பாலைவனத்தின் நடுவில் கூட இருக்கலாம். எந்நேரத்திலும் அது விபத்திற்குள்ளாகலாம். நீங்கள் கடலில் விழுந்துவிடலாம், நீங்கள் எவ்விடத்திலும் விழலாம். எனவே அது பாதுகாப்பானதல்ல. அதே போல், ஜட இயற்கையின் சட்டத்தை வெல்ல எந்த முறையை உருவாக்கினாலும், கண்டுபிடித்தாலும், அதனுடன் வேறு பல அபாயங்களும் சேர்ந்தே வரும். அதுவே இயற்கையின் சட்டம். அதுவல்ல இவ்வுலக வாழ்வின் துன்பங்களிலிருந்து விடுபடும் வழி. உண்மையான வழி யாதெனில் கட்டுண்ட வாழ்வின் நான்கு தொழிற்பாடுகளை நிறுத்துவது. கட்டுண்ட வாழ்வின் நான்கு தொழிற்பாடுகளாவன பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகும். உண்மையில், நான் ஒரு ஆத்மா. அது பகவத் கீதையின் ஆரம்பத்திலேயே விளக்கப்பட்டுள்ளது, ஆத்மா பிறப்பதோ இறப்பதோ இல்லை என்று. அவன் குறித்த உடலின் அழிவுக்கு பிறகும் தன் வாழ்வை தொடர்கிறான். இந்த உடல் இருப்பது மின்னலைப் போன்ற குறுகிய காலமே, சில வருடங்களுக்கு மட்டுமே. அது அழிந்துவிடும். அது படிப்படியாக அழிக்கப்படுகிறது. எப்படியென்றால் நான் ஒரு எழுபத்து மூன்று வயது முதியவன். ஒருவேளை நான் எண்பது, நூறு வருடங்கள் உயிர் வாழ்வேனென்றால், இந்த எழுபத்து மூன்று வருடங்களுக்கு ஏற்கனவே நான் இறந்துவிட்டேன். அது முடிந்துவிட்டது. இப்போது இன்னும் சில வருடங்களே நான் இருப்பேன். எனவே பிறந்ததிலிருந்து நாம் இறந்துக் கொண்டிருக்கிறோம். அதுவே உண்மை. பகவத் கீதை இந்த நான்கு பிரச்சனைகளுக்கும் தீர்வு அளிக்கிறது. கிருஷ்ணர் இங்கு பரிந்துரைக்கிறார், மய்யாஸக்த-மனா: பார்த யோகம் யுஞ்ஜன் மத்-ஆஷ்ரய:. கிருஷ்ணரிடம் சரணடைந்து கிருஷ்ணரைப் பற்றியே எப்போதும் நினைத்தால், உங்களுடைய உணர்வு கிருஷ்ணரின் நினைவுகளில் எப்போதும் நிறைந்திருக்கும், பிறகு, கிருஷ்ணர் கூறுகிறார் அதன் விளைவு யாதெனில், அஸம்ஷயம் ஸமக்ரம் மாம் யதா ஜ்ஞாஸ்யஸி தச் ச்ருணு (BG 7.1). "பின்னர் சந்தேகமின்றி, பூரணமாக என்னை புரிந்து கொள்வீர்."