TA/Prabhupada 0550 - இந்த அற்புதத்தையடுத்து ஓடாதீர் - வெறுமனே கடவுளின் பக்கம் திரும்புங்கள்



Lecture on BG 2.62-72 -- Los Angeles, December 19, 1968

பிரபுபாதா: இந்த உலகின் சில தவறான மாயையான அழகுகளால் நாம் பிணைக்கப்பட்டுள்ளோம். கானல் நீர். சரியான உதாரணம் கானல் நீர். கானல் நீர் என்றால் என்ன? பாலைவனத்தில் சூரிய ஒளியின் பிரதிபலிப்பு நீர் போல தோன்றுகிறது. அங்கே தண்ணீர் எங்கே உள்ளது? தண்ணீர் இல்லை. விலங்கு, தாகம் கொண்ட விலங்கு, கானல் நீரை தேடி அலைகிறது. "ஓ, இதோ தண்ணீர். நான் தாகம் தணிந்து திருப்தி அடைவேன்" என்று நினைக்கிறது. இதேபோல் நாம் கானல் நீருக்குப் பின் ஓடுகிறோம். அமைதி இல்லை, மகிழ்ச்சி இல்லை. எனவே நாம் நம் கவனத்தை மீண்டும் கடவுளின் பக்கம் திருப்ப வேண்டும். இந்த கானல் நீருக்குப் பின் ஓடாதே. கடவுள் பக்கம் திரும்புங்கள், கிருஷ்ணர் பக்கம் திரும்புங்கள். அது எங்கள் பிரச்சாரம். உங்கள் கவனம் சிதற வேண்டாம் ... மாயையான பொருள் அழகில் உங்கள் உணர்வுகளை ஈடுபடுத்த வேண்டாம். உண்மையான அழகுள்ள கிருஷ்ணரிடம் உங்கள் புலன்களை ஈடுபடுத்துங்கள். அதுதான் கிருஷ்ண உணர்வு. மேலே படிக்கவும்.

தமால் கிருஷ்ணா: சிவன் ஒரு காலத்தில் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார், ஆனால் அழகான கன்னி பார்வதி புலன் இன்பத்திற்காக அவரைத் தூண்டினாள், அவர் இந்த முன்மொழிவுக்கு ஒப்புக் கொண்டதன் விளைவாக கார்தித்கேயர் பிறந்தார். "

பிரபுபாதா: ஓ, இங்கே கார்த்திகேயர் இருக்கிறார். (சிரிப்பு) ஆம். ஹரே கிருஷ்ணா. மேலே படியுங்கள் . (சிரிப்பு)

தமால் கிருஷ்ணா: "ஹரிதாச தாகூர இறைவனின் இளம் பக்தராக இருந்தபோது, ​​மாயாதேவியின் அவதாரத்தால் அவர் இதேபோல் ஈர்க்கப்பட்டார்."

பிரபுபாதா: இப்போது இங்கே வித்தியாசம் இருக்கிறது. சிவபெருமான், அவர் உபதெய்வங்களுள் மிகப் பெரியவர். அவர் பார்வதியால் ஈர்க்கப்பட்டார், அந்த ஈர்ப்பின் விளைவாக, இந்த சிறுவன் கார்த்திகேயர் பிறந்தார். அதுதான், உபதெய்வங்களின் சதி என்று அழைக்கப்படும், சிவபெருமானின் விதை திரவத்திலிருந்து ஒரு மகன் பிறக்காவிட்டால், ராக்ஷசர்களை வெல்வது சாத்தியமில்லை. எனவே கார்த்திகேயர் உபதெய்வங்களுள் தளபதியாக கருதப்படுகிறார். ஆனால் இங்கே, மற்றொரு உதாரணம். ஹரிதாச தாகூர். ஹரிதாச தாகூர் அப்போது ஒரு வாலிபராக இருந்த சமயம் - சுமார் இருபது, இருபத்து நான்கு வயது இருக்கும், அவர் ஹரே கிருஷ்ணா என்று கோஷமிட்டிருந்தார். அந்த கிராமத்தில் வசித்துவந்த ஒரு நில உரிமையாளர், அவர் ஹரிதாச தாகூரை கண்டு மிகவும் பொறாமைப்பட்டார். அவரை சதியில் சிக்கவைக்க, ஒரு விபச்சாரியை ஈடுபடுத்தினார். அந்த சதி திட்டத்துக்கு துணைபோன விபச்சாரி நள்ளிரவில், மிகவும் அழகான உடையில் ஹரிதாச தாகுராவை வசீகரிக்க முயன்றாள். அவளும் இளமையாக இருந்தாள். ஆனால் அவர் வசீகரிக்கப்படவில்லை. அதுதான் வித்தியாசம். ஒரு சாதாரண மனிதர் கூட, கிருஷ்ண உணர்வுள்ள நபராக இருந்தால், சிவன் அல்லது பிரம்மாவின் மட்டத்தில் இல்லாவிட்டாலும், அவர் ஒருபோதும் மாயையால் வெல்லப்படுவதில்லை. ஆனால் கிருஷ்ண உணர்வில் முழுமையாக இல்லாத ஒருவர், அவர் சிவன் அல்லது பிரம்மாவாக இருக்கலாம், அவர் மாயையால் வெல்லப்படுவார், மற்றவர்களைப் பற்றி சொல்ல தேவையில்லை. இதுதான் நிலை. "ஹரிதாஸ் தாகூர் இறைவனின் இளம் பக்தராக இருந்தபோது ..."

தமால் கிருஷ்ணா : "...மாயாதேவியின் அவதாரத்தால் அவர் இதேபோல் ஈர்க்கப்பட்டார், ஆனால் கிருஷ்ணர் மீது அவர் கொண்டிருந்த பக்தி காரணமாக, எளிதில் ஹரிதாஸ சோதனையில் தேர்ச்சி பெற்றார். இறைவனின் நேர்மையான பக்தர் அனைத்து பொருள் உணர்வு இன்பங்களையும் வெறுக்க கற்றுக்கொள்கிறார் இறைவனின் இணைவில், ஆன்மீக இன்பத்தின் அதிக சுவை கண்ட காரணமாக. அதுவே வெற்றியின் ரகசியம். "