TA/Prabhupada 0552 - பிறப்பு இறப்பை நிறுத்துவது எப்படி? நான் விஷம் அருந்துகிறேன்
Lecture on BG 2.62-72 -- Los Angeles, December 19, 1968
பிரபுபாதா: ஜானியா ஷுனியா பிஷ காய்னு. இது எனக்குத் தெரியும், நான் கேட்கிறேன். இருந்தும், ... ஜானியா ஷுனியா பிஷ... ஒரு திருடனை போல. ஜானியா ஷுனியா, இந்த வார்த்தைகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. ஜானியா என்றால் அறிதல், ஷுனியா என்றால் கேட்பது என்று பொருள். எனவே ஒரு பழக்கபட்ட திருடனுக்கு, "நான் திருடினால் நான் சிறையில் அடைக்கப்படுவேன்" என்று அவருக்குத் தெரியும். வேதங்களிலிருந்து அவர் கேள்விப்பட்டிருக்கிறார் "திருடாதே, பிறகு நீங்கள் நரகத்தில் தள்ளப்படுவீர்கள்" என்று. எனவே அவர் வேதங்களிலிருந்து கேட்டிருக்கிறார், அவர் நடைமுறையில் பார்த்திருக்கிறார். அவர் நடைமுறையில் அனுபவித்திருக்கிறார், இருந்தும், அவர் சிறை வாழ்க்கையிலிருந்து விடுவிக்கப்பட்டவுடன், அவர் மீண்டும் அதே தவறை புரிகிறார். ஜானியா ஷுனியா பிஷ காய்னு. நமக்குத் தெரியும், வேதங்களிலிருந்து, அதிகாரிகளிடமிருந்து, வேத இலக்கியவாதிகளிடமிருந்து, கேள்விப்படுகிறோம். "இந்த பரிதாபமான நிபந்தனை உடல், பௌதிக உடல், மூன்று வகையான பௌதிக துயரங்களை அனுபவிப்பதற்காக எனக்கு கிடைத்துள்ளது; என்று இருந்தும், பிறப்பு மற்றும் இறப்பு - இந்த சுழற்சியை மறுபடியும் எப்படி நிறுத்துவது என்று நான் அதிகம் கவலைப்படவில்லை. நான் விஷம் குடிக்கிறேன்." ஜானியா ஷுனியா பிஷ காய்னு. ஹரி ஹரி பிபலே ஜனம கோநாய்னு. இந்த பாடல்கள் மிகவும் போதனை மிக்கவை. வெறுமனே வேண்டுமென்றே, நாம் விஷம் குடிக்கிறோம். மேலே செல்லவும்.
தமால கிருஷ்ணா: "எனவே, கிருஷ்ண உணர்வில் இல்லாத ஒருவர், அவர் எவ்வளவு சக்திவாய்ந்தவராகவும் இருக்கலாம் செயற்கை அடக்குமுறை மூலம் புலன்களைக் கட்டுப்படுத்துவதில், இறுதியில் விழுவது உறுதி, புலன் இன்பத்தில் சிறிதளவு சிந்தனை சென்றால் - அது அவரது ஆசைகளை பூர்த்தி செய்ய அவரைத் தூண்டும். " "கோபத்திலிருந்து, மாயை எழுகிறது, மற்றும் மாயையிலிருந்து, நினைவின் கலக்கம். நினைவு கலங்கும்போது, புத்திசாலித்தனம் இழக்கப்படும், மற்றும் புத்திசாலித்தனம் இழக்கப்படும் போது ஒருவர் மீண்டும் பௌதிக குளத்தில் விழுகிறார். "
பிரபுபாத: நமது நிலை என்னவென்றால், நாம் இந்த உடலால் அமைக்கப்பட்டிருக்கிறோம். உடல் என்றால் புலன்கள் மற்றும் புலன்களைக் கட்டுப்படுத்துபவர் அல்லது, இயக்குபவர், புலன்களை இயக்குபவர் மனம். மற்றும் மனம் நடத்தப்படுகிறது, சிந்தனை, உணர்வு மற்றும் விருப்பம், உளவியல், உளவியலின் அறிவியல், இது அறிவுத்திறம் கீழ் நடத்தப்படுகிறது. அறிவுத்திறத்திற்கு மேல், நான் அமர்ந்திருக்கிறேன். நான் ஒரு ஆன்மா. எனவே, இந்த மாயைக்கு நாம் எவ்வாறு பலியாகிறோம் என்று இங்கே விவரிக்கப்பட்டுள்ளன. கோபத்திலிருந்து, மாயை எழுகிறது, மற்றும் மாயையிலிருந்து, நினைவின் கலக்கம். நினைவின் கலக்கம். நான் இந்த உடல் அல்ல என்பதை நாம் முற்றிலும் மறந்துவிட்டோம். நான் ஆன்மா, அஹம் ப்ரஹ்மாஸ்மி; நான் உயர்ந்த பிரம்மம், ஆவி,
அறுதியான முழுமையின் ஒரு துளி மற்றும் பகுதி. என்பதை நான் மறந்துவிட்டேன்.
நினைவு கலங்கும்போது, நான் ஆத்மா என்பதை மறந்தவுடன், இந்த பௌதிக உலகத்துடன் நான் என்னை அடையாளம் காண்கிறேன், மாயை. நுண்ணறிவு இழக்கப்படுகிறது. மனதின் செயல்பாடுகளை நடத்துவதற்கு நான் எனது அறிவுதிறனைப் பயன்படுத்தியிருக்க வேண்டும்- சிந்தனை, உணர்வு மற்றும் விருப்பம் - என் மனம் கட்டுப்படுத்தப்படாததால், என் புலன்கள் கட்டுப்படுத்தப்படவில்லை, எனவே நான் வீழ்ந்துவிட்டேன். இது முழு உடல் கட்டுமானத்தின் பகுப்பாய்வு ஆகும். மேலே செல்லவும்.
தமாலா கிருஷ்ணா: ஒழுங்குமுறைக் கொள்கைகளால் தனது புலன்களைக் கட்டுப்படுத்தக்கூடிய ஒருவர் இணைப்பு மற்றும் வெறுப்பிலிருந்து விடுபட்டவர் கடவுளின் கருணையை அடைய முடியும். "
பிரபுபாத: ஆம். நாம் கீழே விழுந்துவிட்டோம். நாம் எப்படி கீழே விழுந்தோம்? புலன் இன்பத்தின் மேடையில் வந்து விழுந்துவிட்டோம். எனவே நீங்கள் புலன்களிலிருந்து எழுந்து, புலன்களைக் கட்டுப்படுத்தத் தொடங்க வேண்டும். அதுவே சுய உணர்தலின் வழி. நீங்கள் யோக பயிற்சி அல்லது பக்தி, பக்தி சேவையில் ஈடுபடுங்கள், புலன்களைக் கட்டுப்படுத்துவது ஆரம்பமாகும்