TA/Prabhupada 0568 - நாங்கள் வெறும் நன்கொடைகளை சார்ந்திருக்கிரோம் - நீங்கள் விரும்பினால் கொடுக்கலாம்



Press Interview -- December 30, 1968, Los Angeles

பிரபுபாதா: எனவே இந்த எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு, நான் இங்கு வந்தேன், நான் வெற்றிகரமாக இருக்கிறேன் என்று நினைக்கிறேன், ஆம்.

பத்திரிகையாளர்: இந்த இடை காலத்தில், பலர் மதம் மாறியவர்கள் போல் தெரியவில்லை. எத்தனை பின்பற்றுபவர்கள் இருக்கிறார்கள் ...? (தும்மல்) தயவுசெய்து என்னை மன்னியுங்கள்.

பிரபுபாதா: அது சரி.

பத்திரிகையாளர்: அப்போது எத்தனை பின்பற்றுபவர்கள் இருக்கிறார்கள், ...? வெறும் நூறு?

பிரபுபாதா: நூற்றுக்கும் மேற்பட்டவர்கள். ஹயக்ரீவா: இவர்கள் கண்டிப்பாக பின்பற்றும் புதிய பக்தர்கள். நிச்சயமாக, கோயில்களுக்கு அதிகமான மக்கள் வருகிறார்கள். எங்களுடன் அதிகமானோர் இணைகிறார்கள்.

பத்திரிகையாளர்: எத்தனை கோயில்கள் உள்ளன?

பிரபுபாதா: எங்களுக்கு பதிமூன்று கோவில்கள் உள்ளனர். பதின்மூன்று.

பத்திரிகையாளர்: பதின்மூன்று?

பிரபுபாதா: இந்த லாஸ் ஏஞ்சல்ஸில் ஒன்று, ஒன்று சான் பிரான்சிஸ்கோவில், நியூ யார்க்கில் ஒன்று. ஒரு சாண்டா ஃபெ, ஒரு பஃவ்வலோ, ஒரு பாஸ்டன், ஒரு மாண்ட்ரியல், ஒரு வான்கூவர், மற்றும் சீயாட்டல், லண்டன் , ஹாம்பர்க்,... ஹவாய்.

பத்திரிகையாளர்: சரி, பதின்மூன்று கோவில்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இருக்க வேண்டுமே.

பிரபுபாதா: ஆம். ஆம். நூற்றுக்கும் மேற்பட்டவை, ஆம். ஒரு பற்றி ... ஹயக்ரீவா: எனக்கு சரியாக தெரியாது.

பிரபுபாதா: ஆம். என்னிடம் பட்டியல் உள்ளது . நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உள்ளன. ஹயக்ரீவா: குறைந்தபட்சம் இருக்க வேண்டும், ஏனெனில் அது ஒரு கோவிலுக்கு சராசரியாக பத்து மட்டுமே.

பிரபுபாதா: ஆம். இங்கே இந்த கோவிலில் சுமார் இருபது பேர் உள்ளனர்.

பத்திரிகையாளர்: இங்கே சுமார் இருபது பேர் உள்ளனர். பகவத் தரிசனம் அச்சிட பணம் எங்கிருந்து வருகிறது?

பிரபுபாதா: கடவுளே, கடவுள் அனுப்புகிறார் (சிரிக்கிறார்).

பத்திரிகையாளர்: சரி, ஆமாம், எனக்கு அது மிகவும் உறுதியாக புரிகிறது, ஆனால் கடவுள் காசோலைகளை எழுதுவதில்லை. நான் அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். நான் அதை சொல்ல வேண்டும் ...

பிரபுபாதா: கடவுள் உங்களை ஆணையிடுகிறார், நீங்கள் பணம் செலுத்துகிறீர்கள். அவ்வளவுதான்.

பத்திரிகையாளர்: நான் அதைச் சொல்ல வேண்டும், அந்த கேள்விக்கான பதில் மிகவும் தெளிவற்ற பதில்.

பிரபுபாதா: (சிரிக்கிறார்) ஆம். நான் இங்கு வந்தேன் ... நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள், நான் இங்கு ஏழு டாலர்களுடன் மட்டுமே வந்தேன், முழு நிறுவன செலவினமும்.. மாதந்தோறும் ஐந்தாயிரம் டாலர்களைக் காட்டிலும் குறைவாக இல்லை. குறைந்தபட்சம்.

பத்திரிகையாளர்: அது ஆண்டுக்கு அறுபதாயிரம். அதாவது, அது நன்கொடையாக வழங்கப்பட்டதா?

பிரபுபாதா: ஐந்தாயிரம் மிகக் குறைவு. அதை விட அதிகம் என்று நினைக்கிறேன். ஹயக்ரீவா: எனக்கு எதுவும் தெரியாது.

பிரபுபாதா: ஆம். நாங்கள் செலுத்துவதால், இந்த கோயில், நாங்கள் நானூறு செலுத்துகிறோம், வெறுமனே வாடகைக்கு. இதேபோல் ஒவ்வொரு இடத்திலும் நாம் முன்னூறு, நானூறு வாடகை செலுத்துகிறோம்.

பத்திரிகையாளர்: சரி, சீடர்களும் பக்தர்களும் தவிர, வேறு மக்கள், சேவைகளுக்கு வருகிறார்களா?

பிரபுபாதா: ஆம். இல்லை அனைவரையும் அனுமதிக்கிறோம். "வாருங்கள், ஜபம் செய்யுங்கள். பிரசாதம் எடுத்துக் கொள்ளுங்கள்" என்று, இந்த பிரசாதத்தை வழங்குகிறோம். ஜபம் செய்யுங்கள், நடனம் ஆடுங்கள், பகவத்- கீதையைக் கேளுங்கள், பிரசாதம் எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் செல்லுங்கள்.

பத்திரிகையாளர்: வேறுவிதமாகக் கூறினால், அவர்கள் ஏதாவது தானம் செய்ய விரும்பினால், அவர்கள் நன்கொடை அளிக்கிறார்கள்.

பிரபுபாதா: ஆம். நாங்கள் நன்கொடை கேட்கிறோம், "நாங்கள் நன்கொடை சார்ந்து தான் உள்ளோம். நீங்கள் விரும்பினால், நீங்கள் பணம் செலுத்தலாம்." மக்கள் பணம் செலுத்துகிறார்கள். ஆம்.

பத்திரிகையாளர்: ஆம். பத்திரிகை அப்படித்தான் வெளியிடப்படுகிறதா?

பிரபுபாதா: இதழும், நாங்கள் சந்தைக்கு எடுத்துச் சென்று விற்பனைக்கு வைக்கிறோம். மக்கள் வாங்குகிறார்கள். எனவே உண்மையில் எங்களிடம் நிலையான நிதி இல்லை.

பத்திரிகையாளர்: ஓ, உங்களிடம் இல்லையா ?

பிரபுபாதா: இல்லை. நாம் வெறுமனே கிருஷ்ணரை சார்ந்து தான் இருக்கிறோம். ஆனால் கிருஷ்ணரின் அருளால் நம் இயக்கம் வளர்ந்து வருகிறது. அது குறையவில்லை.

பத்திரிகையாளர்: அது நல்லது. இது ஒரு அழகான பத்திரிகை என்பதால் நான் இதைப் பற்றி ஆர்வமாக உள்ளேன்.

பிரபுபாதா: எனவே எங்களுக்கு உதவ முயற்சி செய்யுங்கள்.

பத்திரிகையாளர்: மன்னியுங்கள்?

பிரபுபாதா: இந்த இயக்கத்திற்கு உதவ முயற்சி செய்யுங்கள். உங்கள் அமெரிக்கா, ஏராளமான பணக்காரர்கள் உள்ளனர். ஒன்று அல்லது இரண்டு நபர்கள் இந்த இயக்கத்திற்கு யாராவது வந்து உதவி செய்தால், நாம் மிகவும் நிலையான முன்னேற்றத்தை அடைய முடியும். எங்களிடம் பணம் இல்லை. நாங்கள் மிகவும் கடினமாக போராடுகிறோம். நீங்கள் பார்க்கிறீர்களா? இந்த இளைஞன் ஓஹியோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியர். எனவே அவர் எதைச் சம்பாதித்தாலும், இதற்காக அவர் செலவு செய்கிறார். இதேபோல், எல்லா இளைஞர்களும் எதை சம்பாதித்தாலும் அவர்கள் அதை இந்த இயக்கத்திற்கு செலவு செய்கிறார்கள். ஆனால் அது போதாது, நீங்கள் பார்க்கிறீர்களா? நாங்கள் பிரச்சாரம் செய்ய வேண்டும். அல்லது, இந்த பத்திரிகையை நாம் போதுமான அளவு வெளியிட முடியாது. மாதத்திற்கு குறைந்தது ஐம்பதாயிரத்தையாவது வெளியிட விரும்புகிறோம், ஆனால் பணம் இல்லை. நாங்கள் அதிகபட்சமாக ஐந்தாயிரம் வெளியிடுகிறோம்.

பத்திரிகையாளர்: அங்கு ஆட்டு கொம்பை ஊதுவது யார்? (சங்கு ஊதப்படுகிறது )