TA/Prabhupada 0576 - முன்கணிப்புகள் அனைத்தையும் பூஜ்யமாக்கும் வகையில் செயலாக்கம் இருக்கவேண்டும்



Lecture on BG 2.19 -- London, August 25, 1973

லோகே வ்யவாய ஆமிஷ மத-ஸேவா நித்யஸ் து ஜந்து: இது இயற்கைக் குணம். ஜட வாழ்க்கையில் ஒவ்வொரு உயிரினத்திற்கும் இந்த இயற்கைக் குணங்கள் கிடைத்துள்ளன. ஆனால் அவை கட்டுப்படுத்தப்பட வேண்டும். ப்ரவ்ருத்தி: ஏஷம் பூதானாம். அது இயல்பான சுபாவம். ஆனால் அவற்றை நீங்கள் தடுக்க முடிந்தால், அதுவே உங்களுக்குச் சிறப்பானது. அது தபஸ்ய என்று அழைக்கப்படுகிறது. தபஸ்ய என்றால் எனக்கு இயற்கையாகவே சில குணங்கள் கிடைத்துவிட்டது, ஆனால் அது நல்லதல்ல. எப்படி நல்லதல்ல என்றால், அந்தத் இயற்கை குணத்தை நாம் தொடர்ந்தால், இந்த ஜட உடலை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இது இயற்கையின் விதி. ஒரு வசனம் உள்ளது, ப்ரமத்த: அது என்ன ...? இப்போது நான் மறந்து போகிறேன். அதாவது அனைவரும் பைத்தியம், புலன்கைளை திருப்தி செய்வதில் பைத்தியமாக இருக்கிறார்கள். ந ஸாது மன்யே யத ஆத்மனோ 'யம் அஸன்ன் அபி க்லேஷத ஆஸ தேஹ: (ஸ்ரீமத் பாகவதம் 5.5.4) நம்மிடம் இந்தப் புலனின்பத்தை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் தொடரும் வரை, உடலை ஏற்க வேண்டி வரும். அதாவது பிறப்பு இறப்பு. நீண்ட காலத்திற்கு. ஆகையால், இந்த இயற்கைக் குணங்கள் அனைத்தையும் பூஜ்ஜியமாக்குவது எப்படி என்பதே செயல்முறை. அதுவே பூரணத்துவம். அதை மேம்படுத்துவது அல்ல. நூனம் ப்ரமத்த: குருதே விகர்ம யத் இந்த்ரிய-ப்ரீதய ஆப்ருணோதி (ஸ்ரீமத் பாகவதம் 5.5.4). நூனம், ஐயோ, உண்மையில் ப்ரமத்த: இந்தப் பைத்தியக்காரர்கள். அவர்கள் பைத்தியம் பிடித்தவர்கள், இந்த இயற்கை குணங்களுக்குப் பின் செல்வோர், வ்யவாய ஆமிஷ மத-ஸேவா, பாலியல் உறவு, போதை மற்றும் இறைச்சி உண்ணுதல். அவர்கள் அனைவரும் பைத்தியக்காரர்கள். ப்ரமத்த: நூனம் ப்ரமத்த: குருதே விகர்ம (ஸ்ரீமத் பாகவதம் 5.5.4) விகர்மா என்றால் தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகள். இந்த மூன்று விஷயங்களுக்காக, ஆமிஷ-மத-ஸேவயா, பாலியல் வாழ்க்கைக்காக, இறைச்சி சாப்பிடுவதற்காக, குடிப்பதற்காக, மக்கள் வேலை செய்கிறார்கள். வேலை செய்வது மட்டுமல்ல, நேர்மையற்ற முறையில் வேலை செய்கிறார்கள். பணம் பெறுவது எப்படி, பணம் பெறுவது எப்படி, கறுப்புச் சந்தை, வெள்ளை சந்தை, இது, அது, இந்த மூன்று விஷயங்களுக்கு மட்டுமே: ஆமிஷ-மத-ஸேவா. எனவே, நூனம் ப்ரமத்த: குருதே விகர்ம யத் இந்த்ரிய-ப்ரீதய ஆப்ருணோதி (ஸ்ரீமத் பாகவதம் 5.5.4). இது அவரது மகன்களுக்கு ரிஷபதேவரின் அறிவுறுத்தலாகும். என் அன்பான மகன்களே, தவறாக வழியில் நடக்க வேண்டாம். இந்த மோசமான முட்டாள்கள், இந்த விஷயங்கள், இறைச்சி சாப்பிடுவது, போதை மற்றும் பாலியல் வாழ்க்கை ஆகியவற்றின் மீது பைத்தியம் பிடித்து இருக்கிறார்கள். ந ஸாது மன்யே, "இது முற்றிலும் நல்லதல்ல." ந ஸாது மன்யே. நான் அனுமதிக்கவில்லை, அது மிகவும் நல்லது என்று நான் கூறவில்லை. இது முற்றிலும் நல்லதல்ல." ந ஸாது மன்யே. "அது ஏன் நல்லதல்ல? நாங்கள் வாழ்க்கையை அனுபவிக்கிறோம்." ஆமாம், நீங்கள் இப்போது அனுபவிக்கிறீர்கள், ஆனால் யத ஆத்மனோ 'யம் அஸன்ன் அபி க்லேஷத ஆஸ தேஹ: (ஸ்ரீமத் பாகவதம் 5.5.4). நீங்கள் இந்த விஷயங்களைத் தொடரும் வரை, நீங்கள் உடலை ஏற்க வேண்டும். மேலும் நீங்கள் உடலை ஏற்றுக்கொள்ளும்போது, ​​அதில் பிறப்பு நிச்சயமாக இருக்கும், மரணம் நிச்சயமாக இருக்கும், நிச்சயமாக நோய் இருக்கும் மற்றும் மரணம் இருக்கும். நீங்கள் துன்பப்படுவீர்கள். நீங்கள் துன்பப்படுவீர்கள். ஆனால் உங்கள் உண்மையான நிலை ந ஜாயதே. உங்களுக்குப் பிறப்பில்லை, ஆனால் நீங்கள் பிறக்க வேண்டும் என்று நீங்களே உங்களுக்காக நிபந்தனை விதித்துள்ளீர்கள். உண்மையில், உங்கள் நிலை பிறப்பு அல்லாது நித்ய வாழ்வு. கிருஷ்ணர் நித்தியமானவர் அதேபோல், நாம் ஒவ்வொருவரும் நித்தியமானவர்கள். ஏனென்றால் நாம் கிருஷ்ணரின் அம்சம்-அதே தன்மை.