TA/Prabhupada 0592 - நீங்கள் வெறுமனே கிருஷ்ணரைக் குறித்து நினைக்க வாருங்கள் - அதுவே முழுமையானது



Lecture on BG 2.20 -- Hyderabad, November 25, 1972

பிரபுபாதா: ஆகவே அதுதான் நடைமுறை. நீங்கள் கிருஷ்ணரின் சிந்தனைக்கு வர வேண்டும். அதுவே முழுமை. நீங்கள் பல விஷயங்களில் சங்கடப்பட்டால் பூனை, நாய், மான், அல்லது தேவதூதர், எதுவாகவும் ஆகும் ஆபத்து உள்ளது

இந்தியன்: மஹாராஜா, ஏன் ?

பிரபுபாதா: யம் யம் வாபி ஸ்மரன் லோகே த்யஜத்யந்தே கலேவரம் (பகவத் கீதை 8.6) உங்கள், இறக்கும் நேரத்தில், நீங்கள் எதை விரும்பினாலும், அடுத்த உடலைப் பெறுவீர்கள். அதுவே இயற்கையின் விதி. ரஷ்யாவில், மாஸ்கோ சென்று இருந்தேன், அங்கு பல இளைஞர்கள், அவர்களுக்கு இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தை ஏற்க மிகவும் ஆர்வமாக உள்ளது. அவர்களுள் சிலருக்கு தீக்ஷைகொடுத்தேன் . மேலும் தொடர்கின்றனர். இந்த இளைஞர்களைப்போல. எனவே இது ... இது என் அனுபவம் சம்பந்தப்பட்ட வரை, நான் செல்லும் எல்லா இடங்களிலும், மக்கள் ஒரே மாதிரியாக இருக்கிறார்கள் இது செயற்கையானது, அதாவது, அவர்கள் கம்யூனிஸ்டுகளாக அழைக்கப்படுகின்றனர், மற்றும் பலவாறு ... மக்கள், அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள். கிருஷ்ணரின் பக்திப் பற்றி நாம் பேசியவுடன், அவர்கள் உடனடியாக பதிலளிப்பார்கள். அது எனது அனுபவம். உண்மையில் அது ஒரு உண்மை. சைதன்யா-சரிதாம்ருதத்தில், இது கூறப்படுகிறது, நித்ய-ஸித்த க்ருஷ்ண-ப்ரேம ஸாத்ய கபு நய, ஷ்ரவணாதி-ஷுத்த-சித்தே கரயே உதய (சைதன்ய சரிதாம்ருதம் மத்ய லீலை 22.107) கிருஷ்ண பக்தி அனைவரின் இதயத்திலும் உள்ளது. அது உறங்கி கொண்டு இருக்கிறது ஆனால் அது அசுத்தமாகவும் பௌதிகமான அழுக்குகளால் மூடப்பட்டுள்ளது எனவே ஷ்ரவணாதி, ஷுத்த-சித்தே. இதன் பொருள், நீங்கள் கேட்பது போல ... இந்த இளைஞர்களைப் போலவே, இந்த அமெரிக்க மற்றும் ஐரோப்பிய இளைஞர்களும், அவர்கள் முதலில், நான் சொல்வதைக் கேட்க வந்தார்கள். செவியுற்றதன் மூலமும், இப்போது அவர்களின் கிருஷ்ணர் உணர்வு விழித்தெழுந்துள்ளது, மேலும் அவர்கள் கிருஷ்ண பக்தியை தீவிரமாக எடுத்துக்கொண்டனர் அனைவருக்கும் கிருஷ்ண உணர்வு உள்ளது. எங்கள் செயல்முறை, சங்கீர்த்தன இயக்கம், அந்த உணர்வைத் தட்டி எழுப்புவதாகும். அவ்வளவுதான். ஒரு மனிதன் தூங்குவது போல. அவரை எழுப்ப: "எழுந்திரு! எழுந்திரு!" என்பது போல உத்திஷ்டத ஜாக்ரத ப்ராப்ய வரான் நிபோதத. எனவே இது எங்கள் செயல்முறை. செயற்கையாக நாம் யாரையும் கிருஷ்ண உணர்வு கொண்டவராக ஆக்க வில்லை. கிருஷ்ண உணர்வு ஏற்கனவே உள்ளது. அது ஒவ்வொரு உயிரினத்தின் பிறப்புரிமை. கிருஷ்ணர், மமைவாம்ஷோ ஜீவ-பூத: என்று கூறுகிறார் (பகவத் கீதை 15.7). தந்தை மற்றும் மகன் போல. எந்த பிரிவினையும் இருக்க முடியாது ஆனால் சில நேரங்களில் மகன் வீட்டை விட்டு வெளியேறுகிறான், ஏதோவொரு சந்தர்ப்பத்தில் அல்லது குழந்தை பருவத்திலிருந்தே நடக்கிறது தனது தந்தை யார் என்பதை அவர் மறந்து விடுகிறார். அது வேறு விஷயம். ஆனால் தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான உறவு ஒருபோதும் முறிந்து போவதில்லை