TA/Prabhupada 0607 - நமது சமுதாயத்தில் நீங்கள அனைவரும் தேவ சகோதரர்கள், தேவசகோதரிகள்



Lecture on SB 1.3.13 -- Los Angeles, September 18, 1972

ரிசபதேவா கற்பித்தார், "என் அன்பான சிறுவர்களே, இந்த வாழ்க்கை, மனித வாழ்க்கை, பன்றிகள் மற்றும் நாய்களைப் போல வீணடிக்கப்படக் கூடாது." பன்றிகள் மத்தியில் சிற்றின்பம் உள்ளது - சிறந்த வசதி. தடை என்பதே இல்லை. மனித சமுதாயத்தில் குறைந்தபட்சம் சம்பிரதாயம் - சில கட்டுப்பாடுகள் உள்ளன. மாத்ரா ஸ்வஸ்ரா துஹித்ரா அனைத்து சாஸ்திராக்களும், "கூடாது" என்கிறது. ஆனால் சமூகங்கள் உள்ளன - நாம் விவாதிக்க விரும்பவில்லை - தாய், சகோதரி, மற்றும் மகளுடன் கூட பாலியல் உறவு கொண்டவர்கள் குறித்து . இன்னும். ஆனால் அது முன்பும் இருந்தது. அப்படி இல்லை, மிகவும் பொதுவானது. ஆனால் சாஸ்திரம் கூறுகிறது, மாத்ரா ஸ்வஸ்ரா துஹித்ரா வா நாவிவிக்தாசனோ பவேத் (ஸ்ரீ.பா. 9.19.17). "உங்கள் தாயுடன், சகோதரியுடன், உங்கள் மகளோடு கூட நீங்கள் ஒதுங்கிய இடத்தில் உட்கார வேண்டாம்." எனவே, "ஒருவர் தாய், சகோதரி மற்றும் மகள், ஆகியோரிடம் கிளர்ந்தெழுகிறார்" முட்டாள்கள் அல்லது மிகவும் இழிவானவர் என்று மக்கள் கூறலாம். இல்லை. சாஸ்திரம் கூறுகிறது பலவான் இந்த்ரிய-க்ராமோ வித்வாம்ஸம் அபி கர்ஷதி. "புலன்கள் மிகவும் வலிமையானவை, மிகவும் கற்ற ஒருவர் கூட, கிளர்ந்தெழுகிறார்." தாய், சகோதரி, மகள் முன்னிலையில் கூட அவர் கிளர்ந்தெழுகிறார்.

எனவே புலன்கள் மிகவும் வலிமையானவை. பலவான் இந்த்ரிய-க்ராம:. இது தடைசெய்யப்பட்டுள்ளது. மற்றவர்களைப் பற்றி பேச என்ன இருக்கிறது. எனவே, பொதுவான தார்மீக போதனைகள் மற்றும் வேத நாகரிகம் என்பது தனது சொந்த மனைவியைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் தாயாக ஏற்றுக்கொள்வது. மாத்ருவத் பர-தாரேஷு. பர-தாரேஷு. எல்லோரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும். தாரா என்றால் மனைவி. பர-தாரேஷு, மற்றவரின் மனைவி. இளையவளா அல்லது பெரியவளா என்பது ஒரு பொருட்டல்ல, ஆனால் அவள் தாயாக கருதப்பட வேண்டும். ஆகவே வேத கலாச்சாரத்தில் இது ஒரு முறை, ஒருவர் மற்றொரு பெண்ணைப் பார்த்தவுடன், அவர் அவளை, "அம்மா," என்று அழைக்கிறார். உடனே, "அம்மா." அது உறவை உருவாக்குகிறது. பெண் தெரியாத ஆணை, மகனாக கருதுகிறாள், ஆண், தெரியாத பெண்ணை தாயாக கருதுகிறான். இது வேத நாகரிகம். எனவே நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நம் சமுதாயத்தில், நீங்கள் அனைவரும் தெய்வசகோதரர்கள், தெய்வசகோதரிகள். அல்லது திருமணமானவர்கள் - அவர்கள் தாய்மார்களைப் போன்றவர்கள். எனவே நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பின்னர் நீங்கள் தீரா, நிதானமாக இருப்பீர்கள். அதுதான் பிராமண தகுதி, பிராமண கலாச்சாரம். "நல்ல பெண்களுடன் ஒன்றிணைவதற்கான வசதிகள் எனக்கு கிடைத்தது, எனவே நான் அவற்றைப் பயன்படுத்தி துணிவான செயலைச் செய்வேன்." அல்லது பெண்கள் எடுத்து கொள்ள வேண்டும் என்பது இல்லை. எனவே நம் கட்டுப்பாடு: சட்டவிரோத பாலுறவு இல்லை. ஒருவர் தீரா ஆக வேண்டும். அதற்கு பிறகு கடவுள் உணர்வு பற்றிய கேள்வி வரும். விலங்குகளுக்கு கடவுள் உணர்வு இருக்க முடியாது. எனவே இது விசேஷமாக தீரானாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வர்த்மா. அவர் காட்டிய பாதை, அது தீராவுக்கானது, அதீராவுக்கு அல்ல. தீரானாம். சர்வாஷ்ரம-நமஸ்க்ரிதம் என்பது போல மிகவும் நன்றாக இருக்கிறது. அனைத்து ஆசிரமங்களும் பாராட்டும் மற்றும் வணக்கங்களை வழங்கும். அனைத்து ஆசிரமங்களும் என்றால் பிரம்மச்சாரி, க்ருஹஸ்தா, வனப்பிரஸ்தா, மற்றும் சன்யாசா. எனவே பெண்ணை கையாள்வது ... குறிப்பாக ஆண்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது. எல்லா இலக்கியங்களும், அனைத்து வேத இலக்கியங்களும், அவை குறிப்பாக ஆண்களுக்கு கற்பிப்பதற்கானவை. பெண் கணவனைப் பின்தொடர வேண்டும். அவ்வளவுதான். கணவன் மனைவிக்கு அறிவுறுத்துவான். பிரம்மச்சாரி-ஆசிரமாவை எடுக்க பெண் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று எதுவும் இல்லை, அல்லது அறிவுறுத்தலைப் பெற ஆன்மீக குருவிடம் செல்வது என்பது வேத முறை அல்ல. வேத முறை என்பது ஒரு ஆண் முழுமையாக அறிவுறுத்தப்படுகிறான், பெண், ஒரு ஆணுடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும். ஆணுக்கு கூட பல மனைவிகள் இருக்கலாம், பலதார மணம், இன்னும், ஒவ்வொரு பெண்ணும் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அவள் கணவனிடமிருந்து அறிவுறுத்தலைப் பெறுவாள். இது வேத முறை. பெண் பள்ளி, கல்லூரி அல்லது ஆன்மீக குருவிடம் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஆனால் கணவன், மனைவி, தீட்சை பெறலாம். அதுவே வேத முறை. தீரானாம் வர்த்மா ஏனென்றால், மக்கள் முதலில் மென்மையாக இருக்க வேண்டும். பின்னர் கிருஷ்ணர் மற்றும் கடவுள் உணர்வு பற்றி பேசலாம். அவர் விலங்கு என்றால், அவர் என்ன புரிந்து கொள்ள முடியும்? இது வேத முறை. தீரானாம். தீரா என்றால் மென்மையாக இருப்பது. எல்லாப் பெண்களையும் "அம்மா" என்று அழைக்க வேண்டும். மாத்ருவத் பர-தாரேஷு பர-த்ரவ்யேஷு லோஷ்ட்ரவத். இதுதான் பயிற்சி, ஒருவர் மற்றவரின் மனைவியை தாயாகக் கருத வேண்டும், மற்றவர்களின் பணம் தெருவில் குப்பை போல கருத வேண்டும். யாரும் குப்பையை கவனிப்பதில்லை. இதேபோல், ஒருவரின், மற்றவரின் பணத்தை தொடக்கூடாது. யாரோ ஒருவர் அவரது பணப்பையை மறந்துவிட்டாலும் கூட, தெருவில் பணப்பை, யாரும் அதைத் தொட மாட்டார்கள். அந்த மனிதன் திரும்பி வந்து அதை எடுக்கட்டும். அது நாகரிகம். பர-த்ரவ்யேஷு லோஷ்ட்ரவத், ஆத்மவத் ஸர்வ-பூதேஷு. மற்ற எல்லா உயிரினங்களையும் தன்னை போல நடத்துவது. யாராவது என்னை கிள்ளினால், எனக்கு வலி ஏற்படுகிறது. நான் ஏன் மற்றவரை கிள்ளுகிறேன்? யாராவது என் தொண்டையை வெட்டினால், நான் மிகவும் வருந்துகிறேன் அல்லது மிகவும் வேதனைப்படுகிறேன். மற்ற விலங்குகளின் தொண்டையை நான் ஏன் வெட்ட வேண்டும்? இது நாகரிகம். இது வேத நாகரிகம். எதையும் போல விலங்குகளை கொன்று, பெண்ணை வேட்டையாடுவது, மேலாடை இல்லாத பெண் - வியாபாரம் செய்வது என்பது அல்ல. இது நாகரிகம் அல்ல. இது மனித நாகரிகம் அல்ல.