TA/Prabhupada 0621 - கிருஷ்ண பிரக்ஞை இயக்கமானது அங்கீகாரத்திற்கு அடங்கி நடப்பதற்கு பாடமளிக்கிறது
Lecture on BG 13.1-2 -- Miami, February 25, 1975
எங்கள் கிருஷ்ண உணர்வு இயக்கம் அதிகாரியிடம் சரணடையும்படி மக்களுக்கு கற்பிக்கிறது. அதுவே அறிவின் ஆரம்பம். தத்₃ வித்₃தி₄ ப்ரணிபாதேந பரிப்ரஷ்₂நேந ஸேவயா (BG 4.34). ஆன்மீக விஷயத்தை கற்றுக்கொள்ள விரும்பினால், சிந்தனை, உணர்வு, எண்ணத்தின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது... மன ஊகம் என்றால் சிந்தனை, உணர்வு எண்ணம், உளவியல். ஆனால் உங்கள் சிந்தனைக்கு அப்பாற்பட்ட பொருள். கடவுள் அல்லது கடவுளைப் பற்றி எதுவாகிலும் அது நம் சிந்தனை, ஊகம் ஆகியவற்றின் எல்லைக்கு அப்பாற்பட்டது. எனவே, நாம் அதை அடக்கமாக கற்றுக்கொள்ள வேண்டும். தத்₃ வித்₃தி₄ ப்ரணிபாதேந, ப்ரணிபாத என்றால் சரணடைதல். ப்ரக்ருஷ்ட-ரூபேண நிபாத. நிபாத என்றால் சரணடைதல். தத்₃ வித்₃தி₄ ப்ரணிபாதேந பரிப்ரஷ்₂நேந. முதலில் முழுமையாக சரணடையக்கூடிய ஒருவரைக் கண்டுபிடிக்க வேண்டும். பின்னர் ஆன்மீக விஷயத்தைப் பற்றி விசாரிக்க வேண்டும்.
அர்ஜுனன் கண்டிப்பாக பின்பற்றுவது போல. அவர் முதலில் கிருஷ்ணரிடம் ஷி₂ஷ்யஸ் தே (அ)ஹம் ஷா₂தி₄ மாம் ப்ரபந்நம்: (BG 2.7) "என் அன்பான கிருஷ்ணா, நாம் நட்பாக பேசுகிறோம், சம மட்டத்தில். எனவே நீங்கள் ஏதாவது பேசுவீர்கள், நான் ஏதாவது பேசுவேன். இப்படி நாம் வெறுமனே நம் நேரத்தை வீணடிப்போம், எந்த முடிவும் இருக்காது. எனவே, நான் சீடனாக சரணடைகிறேன். நீங்கள் என்ன சொன்னாலும் நான் ஏற்றுக்கொள்வேன்."
இதுவே முதல் நிபந்தனை. அவர் எதை சொன்னாலும் ஏற்றுக்கொள்வேன் என்று முழு நம்பிக்கை வைக்கக்கூடிய, ஒரு நபரை முதலில் கண்டுபிடியுங்கள். அவர் தான் குரு. உங்கள் குருவை விட உங்களுக்கு நன்றாகத் தெரியும் என்று நினைத்தால், எந்த பயனும் இல்லை. உங்களை விட சிறந்தவரை முதலில் கண்டுபிடியுங்கள். பின்னர் சரணாகதி அடையுங்கள். எனவே நியம விதிகளின்படி எந்த குருவையும் யாரும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளக்கூடாது, எந்த சீடனையும் யாரும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளக்கூடாது. அவர்கள் குறைந்தபட்சம் ஒரு வருடமாவது ஒருவருக்கொருவர் ஏதுவாக நடந்து கொள்ள வேண்டும். இதனால் வருங்கால சீடரும் புரிந்து கொள்ள முடியும், "இந்த நபரை எனது குருவாக ஏற்றுக்கொள்ள முடியுமா" என்று, வருங்கால குருவும் புரிந்து கொள்ள முடியும், "இந்த நபர் எனது சீடராக முடியுமா" என்பதை. இது சனாதன கோஸ்வாமி தனது ஹரி-பக்தி-விலாசத்தில் எழுதிய அறிவுருத்தலாகும்.
இங்கே அர்ஜுனன் கிருஷ்ணரை தனது குருவாக ஏற்றுக்கொண்டுள்ளார். மேலும் அவர் பணிவுடன் கூறுகிறார் ப்ரக்ருதிம் புருஷம் சைவ (BG 13.1). பிரகிருதி என்றால் இயற்கையும், புருஷ என்றால் இயற்கையை அனுபவிப்பவர் என்றும் பொருள். இந்த ஜட உலகில், குறிப்பாக மேற்கத்திய நாடுகளில், வளர்ச்சியடையாத நாடுகளை அபிவிருத்தி செய்வதை மிகவும் விரும்புகிறார்கள். அதாவது அனுபவிப்பது, அல்லது புருஷராக, அனுபவிப்பாளராக ஆவது. அமெரிக்கர்களே, நீங்கள் ஐரோப்பாவிலிருந்து வந்தீர்கள், இப்போது முழு அமெரிக்காவையும் அபிவிருத்தி செய்துள்ளீர்கள், மிகச் சிறந்த, மிகவும் மேம்பட்ட நகரங்கள், ஊர்கள். அது வளங்களை அனுபவிப்பது எனப்படுகிறது.
ஆகவே பிரகிருதி, இயற்கை, உயிர்வாழிகளாகிய நாம், குறிப்பாக மனிதர்கள், அவர்கள் புருஷ. ஆனால் உண்மையில் நாம் அனுபவிப்பாளர்கள் அல்ல. நாம் தவறான அனுபவிப்பாளர்கள். இந்த அர்த்தத்தில் நாம் அனுபவிப்பாளர்கள் அல்ல: இப்படி வைத்துக்கொள்வோம், அமெரிக்கர்களாகிய நீங்கள். அமெரிக்கா எனப்படும் இந்த நிலப்பகுதியை மிக நேர்த்தியாக அபிவிருத்தி செய்துள்ளீர்கள். ஆனால் உங்களால் அனுபவிக்க முடியாது. நீங்கள் அனுபவிக்கிறீர்கள் என்று நினைக்கிறீர்கள், ஆனால் உங்களால்அனுபவிக்க முடியாது. சிறிது காலம் கழித்து நீங்கள் வெளியேற்றப்படுவீர்கள், "வெளியேறு". ஆகவே நீங்கள் எப்படி அனுபவிப்பாளராக இருக்கிறீர்கள்? "குறைந்தது ஐம்பது ஆண்டுகளோ நூறு ஆண்டுகளோ நான் அனுபவித்து வருகிறேன்" என்று நீங்கள் நினைக்கலாம். எனவே நீங்கள் அனுபவிக்க முடியும் என்று சொல்லலாம், அனுபவித்தல் எனப்படுவதை. ஆனால் உங்களால் நிரந்தர அனுபவிப்பாளராக இருக்க முடியாது. அது சாத்தியமில்லை.