TA/Prabhupada 0623 - ஆத்மாவானது ஒரு உடலைவிட்டு மற்றொரு உடலுக்கு மாறுகிறது



Lecture on BG 2.13 -- Pittsburgh, September 8, 1972

பிரபுபாதர்: தேஹினோ 'ஸ்மின் யதா தேஹே கௌமாரம் யௌவனம் ஜரா ததா தேஹாந்தர-பிராப்திர் தீரஸ் தத்ர ந முஹயதி (ப.கீ. 2.13) தற்போதைய தருணத்தில் இதுதான் பிரச்சினை. இந்த உடலின் முக்கிய சக்தியைப் பற்றி மக்களுக்கு கல்வி கற்பிக்கப்படவில்லை. இங்கே பகவத்-கீதையில், அது விளக்கப்பட்டுள்ளது, தேஹி. தேஹி என்றால் இந்த உடலின் உரிமையாளர். நாம் அனைவரும், நாம் மனிதர்கள் மட்டுமல்ல, ஆனால் மனிதனை விடவும் குறைவான, அனைத்து உயிரினங்களும் ... 8,400,000 வடிவிலான உயிரினங்கள் உள்ளன. அவை தேஹி என்று அழைக்கப்படுகின்றன. தேஹி என்றால் உடலின் உரிமையாளர் என்று பொருள். நாய், பூனை, மனிதர், ஜனாதிபதி, உயர்ந்த அல்லது கீழ், வெவ்வேறு வகையான உயிரினங்கள் உள்ளன. எல்லோரும் உடலின் உரிமையாளர். அதை நாம் அனுபவிக்க முடியும். உங்கள் உடலின் வலிகள் மற்றும் இன்பங்கள் பற்றி எல்லாம் உங்களுக்கு தெரியும். உடலின் வலிகள் மற்றும் இன்பங்கள் என்னவென்று எனக்குத் தெரியும். எனவே இந்த உடல் நமது செயல்பாட்டு களமாக ஜட இயற்கையால் இயல்பாக நமக்கு வழங்கப்பட்டுள்ளது. வெவ்வேறு உடல்களுடன், நாம் வித்தியாசமாக செயல்படுகிறோம். உங்கள் செயல்பாடுகளும் எனது செயல்பாடுகளும் ஒரே மாதிரியானவை அல்ல. நாயின் செயல்பாடுகளும் மனிதனின் செயல்பாடுகளும் வேறுபட்டவை ஏனெனில் நாய் வேறு வகையான உடலைப் பெற்றுள்ளது, மேலும் எனக்கு வேறு வகையான உடல் கிடைத்துள்ளது. நாம் ஒவ்வொருவரும். எனவே தேஹினோ 'ஸ்மின் யதா தேஹே (ப.கீ. 2.13). தேஹி, வாழும் உயிர் அல்லது முக்கிய சக்தி, இந்த உடலுக்குள் உள்ளது. எனவே உடல் மாறுகிறது. தேஹினோ 'ஸ்மின் யதா தேஹே கௌமாரம் யௌவனம் ஜரா(ப.கீ 2.13). கௌமாரம் என்றால் இளமை பருவம் என்று பொருள். யௌவனம் என்றால் யௌவனப் பருவம் , ஜரா என்றால் முதுமை, வயதான உடல் என்று பொருள். எனவே எனக்கு நினைவில் உள்ளது, நான் ஒரு வயதானவன், எனக்கு நினைவில் உள்ளது, எனக்கு ஒரு பையனின் உடல் இருந்தது, எனக்கு ஒரு இளைஞனின் உடல் இருந்தது. இப்போது எனக்கு இந்த வயதான உடல் கிடைத்துள்ளது. சிறுவயது உடல் , இளமை உடல் இப்போது இல்லை என்றாலும், ஆனால் நான் இருக்கிறேன். அது ஒரு உண்மை. எல்லோரும் புரிந்து கொள்ள முடியும். அவருக்கு கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் உள்ளன. இங்கு இருக்கும் நீங்கள் அனைவரும் இளம் சிறுவர்கள் மற்றும் பெண்கள். எனவே உங்கள் கடந்தகால உடலை சிறுவயது, குழந்தைப் பருவத்தை கொண்டிருந்தீர்கள். இதேபோல், உங்கள் எதிர்கால உடலையும் பெற்றுள்ளீர்கள். அது காத்திருக்கிறது. எனக்கு கிடைத்துவிட்டது, நீங்கள் காத்திருக்கிறீர்கள். எனவே கடந்தகால, நிகழ்கால, மற்றும் எதிர்கால, ஒப்பீட்டளவில் நாம் வாழ்க்கையின் எந்த நிலையையும் புரிந்து கொள்ள முடியும். ஆகையால், இந்த வயதான உடல் இப்போது எனக்குக் கிடைத்தது போல் ... எனக்கு எழுபத்தேழு வயது. எனவே இந்த உடல் எப்போது முடியுமோ, நான் மற்றொரு உடலைப் பெறுவேன். எனக்கு கிடைத்தபடி, தொடர்ச்சியாக, குழந்தை பருவம் முதல் இளமை பருவம் வரை, வயதான உடல் வரை வந்துள்ளது, அதனால் அடுத்த உடலில் ஏன் இல்லை? இது எளிமையான உண்மை, உயிரினம் அல்லது ஆன்மா, ஒரு உடலில் இருந்து இன்னொரு உடலுக்கு மாறுகிறது. இது ஆன்மீக புரிதலின் அடிப்படைக் கொள்கை. உடலின் முக்கிய சக்தி ஆவி ஆன்மா. இது பொருளின் இயந்திர ஏற்பாடு அல்ல. நவீன விஞ்ஞானிகள் என்று அழைக்கப்படுபவர்கள், உடல் என்பது பொருளின் ஜடகலவை என்று நினைக்கிறார்கள் மற்றும், ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், இந்த பொருளின் கலவையானது வாழ்க்கை அறிகுறிகளை உருவாக்குகிறது. ஆனால் அது உண்மை அல்ல. இது உண்மை என்றால், விஞ்ஞானிகள் ஒரு உயிருள்ள உடலை வேதிப்பொருட்களைக் கொண்டு தயாரிக்க முடியும். ஆனால் ஒரு நவீன விஞ்ஞானியால் எறும்பு போன்ற ஒரு உடலைக் கூட உற்பத்தி செய்ய முடியவில்லை, மற்ற பெரிய விலங்குகளைப் பற்றி என்ன சொல்ல.