TA/Prabhupada 0627 - புத்துணர்வு கொள்ளாமல் இந்த உயர்ந்த விசயத்தை புரிந்துக்கொள்ள இயலாது



Lecture on BG 2.13 -- Pittsburgh, September 8, 1972

நேர்மையான ஆன்மீக குருவின் அறிகுறி என்ன? எல்லோரும் ஆன்மீக குருவாக மாற விரும்புகிறார்கள். எனவே அதுவும் கூறப்பட்டுள்ளது. ஷாப்தே பரே ச நிஷ்ணாதம். வேத இலக்கியத்தின் கடலில் முழுமையான குளியல் எடுத்த ஒருவர் ஷாப்தே பரே ச நிஷ்ணாதம். நீங்கள் குளித்தால், புத்துணர்ச்சி பெறுவது போல். நீங்கள் நன்றாக குளித்தால், நீங்கள் புத்துணர்ச்சி பெறுவீர்கள். ஷாப்தே பரே ச நிஷ்ணாதம். புத்துணர்ச்சி இல்லாமல், இந்த விழுமிய விஷயத்தை ஒருவர் புரிந்து கொள்ள முடியாது. மேலும் குரு, அல்லது ஆன்மீக குரு , வேத அறிவின் கடலில் குளிப்பதன் மூலம் புத்துணர்ச்சி பெற வேண்டும். இதன் விளைவு என்ன? ஷாப்தே பரே ச நிஷ்ணாதம் ப்ரஹ்மண்யுபஷமாஷ்ரயம். அத்தகைய தூய்மைக்குப் பிறகு, எந்தவொரு பொருள் ஆசைகளும் இல்லாமல், அவர் முழுமுதற் கடவுளிடம் சரண் அடைந்துள்ளார். அவருக்கு இனி பௌதிக ஆசைகள் இல்லை; அவர் கிருஷ்ணர் அதாவது முழுமையான சத்தியத்தில் ஆர்வமாக உள்ளார். இவை குருவின் அல்லது ஆன்மீக குருவின்அறிகுறிகள். எனவே புரிந்துக் கொள்வதற்கு... கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கற்பிப்பது போல. இதற்கு முன், கிருஷ்ணர் தன்னை தானே சரணடைந்தார். ஷிஷ்யஸ் தே 'ஹம் ஷாதி மாம் ப்ரபன்னம் (ப.கீ 2.7) அவர்கள் நண்பர்களாக இருந்தபோதிலும், கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனன் நண்பர்கள். முதலில், அவர்கள் நண்பர்களைப் போலவே பேசிக் கொண்டிருந்தார்கள், அர்ஜுனன் கிருஷ்ணருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வாதத்திற்கு எந்த மதிப்பும் இல்லை, ஏனெனில் நான் குறைபாடுகளுடன் இருந்தால், எனது வாதத்தின் பொருள் என்ன? நான் எதை வாதிட்டாலும் அதுவும் குறைபாடுகளுடன் இருக்கும். எனவே குறைபாடான வாதத்தால் நேரத்தை வீணடிப்பதன் பயன் என்ன? இது செயல்முறை அல்ல. செயல்முறை என்னவென்றால், நாம் ஒரு பூரணமான நபரை அணுக வேண்டும், அவருடைய அறிவுறுத்தலை அப்படியே எடுக்க வேண்டும். பின்னர் நமது அறிவு பூரணமானது. எந்த வாதமும் இல்லாமல். அதுபோன்ல் வேத அறிவை நாம் ஏற்றுக் கொள்கிறோம். உதாரணமாக, ஒரு விலங்கின் மலம் போல. அது தூய்மையற்றது என்று வேத இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. நீங்கள் மலத்தைத் தொட்டால் ... வேத முறையின்படி, நான் மலம் கழித்த பிறகு, நான் குளிக்க வேண்டும். மற்றவர்களின் மலத்தைப் பற்றி என்ன பேச வேண்டும். அதுதான் அமைப்பு. எனவே மலம் தூய்மையற்றது. மலத்தைத் தொட்ட பிறகு, அவர் குளிக்க வேண்டும். இது வேத உத்தரவு. ஆனால் மற்றொரு இடத்தில் பசுவின் மலம் தூய்மையானது என்று கூறப்படுகிறது, ஏதாவது தூய்மையற்ற இடத்தில் மாட்டு சாணம் பயன்படுத்தினால், அது தூய்மையாகும். இப்போது, ​​உங்கள் வாதத்தால், "ஒரு விலங்கின் மலம் தூய்மையற்றது என்று நீங்கள் கூறலாம். இது ஏன் ஒரு இடத்தில் தூய்மையானதாகவும் மற்றொரு இடத்தில் தூய்மையற்றதாகவும் கூறப்படுகிறது? இது முரண்பாடு. " ஆனால் இது முரண்பாடு அல்ல. நீங்கள் நடைமுறையில் சோதனை செய்யுங்கள். நீங்கள் மாட்டு சாணத்தை தெளித்து பாருங்கள், அது தூய்மையானதாக இருப்பதைக் காண்பீர்கள் உடனடியாக தூய்மையாக்கப்படுகிறது. எனவே இது வேத உத்தரவு. அவை பூரணமான அறிவு. வாதிடுவதற்கும் பொய்யான கௌரவத்தை முன்வைப்பதற்கு பதிலாக நேரத்தை வீணடிப்பதற்கு பதிலாக, வேத இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளபடி, பூரணமான அறிவை நீங்கள் ஏற்றுக்கொண்டால், நாம் பூரணமான அறிவைப் பெறுகிறோம், நம் வாழ்க்கை வெற்றி அடைகிறது ஆன்மா எங்கே என்று கண்டுபிடிக்க உடலில் பரிசோதனை செய்வதற்கு பதிலாக... ஆன்மா இருக்கிறது, ஆனால் அது மிகவும் சிறியது, இந்த அப்பட்டமான கண்களால் பார்க்க முடியாது. எந்த நுண்ணோக்கி அல்லது எந்த இயந்திரம், ஏனெனில் இது முடியின் நுனியின் மேற்புறத்தில் பத்தாயிரத்தில் ஒரு பகுதி என்று கூறப்பட்டுள்ளது. எனவே இயந்திரமும் இல்லை. நீங்கள் பார்க்க முடியாது. ஆனால் அது இருக்கிறது. இல்லையெனில், இறந்த உடலுக்கும் உயிருள்ள உடலுக்கும் உள்ள வேறுபாட்டை நாம் எவ்வாறு காணலாம்?