TA/Prabhupada 0637 - கிருஷ்ணரின் இருப்பு இல்லாமல் எதுவுமே இருக்க முடியாது



Lecture on BG 2.30 -- London, August 31, 1973

ஆக பருப்பொருள் கிருஷ்ணரால் விளக்கப்பட்டுள்ளது, அபரேயம் இதஸ் த்வன்யாம் ப்ரக்ருதிம் பராம் யயேதம் தார்யதே. ஜீவ- பூதாம் மஹா-பாஹோ ய்யேதம் தார்யதே ஜகத் (ப.கீ.7.5). ஆகையால் ஆத்மா உள்ளடக்குகிறது. அனைத்தும் பகவத் கீதையில் விளக்கப்பட்டுள்ளது. அந்த பிரமாண்டமான, பெரிய கிரகங்கள், எடை இல்லாதது போல் ஏன் காற்றில் மிதந்துக் கொண்டிருக்கிறது? அதுவும் விளக்கப்பட்டுள்ளது. காம் ஆவிஷ்ய அஹம் ஓஜஸா தாரயாமி (ப.கீ. 15.13). அதை, சும்மா புரிந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். பெரிய 747 ஆகாயவிமானம் ஐநூறு, அறுநூறு பயணிகளை ஏற்றிக் கொண்டு மிதந்து செல்கிறது, எந்த விதமான சிரமமும் இல்லாமல் பறந்துக் கொண்டிருக்கிறது. ஏன்? ஏனென்றால் விமானி அங்கிருக்கிறார். இயந்திரம் அல்ல. அது பிரமாண்டமான இயந்திரம், ஆகையினால் அது பறந்துக் கொண்டிருக்கிறது என்று நினைக்காதீர்கள். இல்லை. விமானி அங்கிருக்கிறார். இயந்திரமும் அங்கிருக்கிறது, ஆனால் மிதந்துக் கொண்டிருப்பது இயந்திர ஏற்பாட்டினால் அல்ல, ஆனால் விமானியால். இதில் ஏதும் மறுப்பு உள்ளதா? விமானி அங்கில்லையென்றால், அந்த இயந்திரம் முழுவதும் உடனடியாக கீழே விழுந்துவிடும். உடனடியாக. அதேபோல், பகவத் கீதையில் இருக்கும் அறிக்கை, காம் ஆவிஷ்ய அஹம் ஓஜஸா. கிருஷ்ணர் அந்த பிரமாண்டமான கோள் கிரகத்தில் நுழைகிறார். அவர் உள்ளே ...அண்டாந்தர-ஸ்த-ப்ரமாணு-சயாந்தர-ஸ்தம். அது பிரம்ம சம்ஹிதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எகோபிய அஸௌ ரஸாயிதம் ஜகத்-அண்ட-கொதிம்,
யச் சக்திர் அஸ்தி ஜகத்-அண்ட-சயா யத்-அந்த:
அண்டாந்தர-சத-பரமாணு-சயாந்தர-சதாம்,
கோவிந்தம் ஆதி-புருஷம் தம ஹம் பஜாமி
(பி.ச. 5.35).

பருப்பொருளுக்குள் கிருஷ்ணர் நுழையாமல், எதுவுமே இயங்காது. அண்டாந்தர-சத. இந்த பேரண்டத்தினுள், அவர் அங்கு கர்போதகசாயி விஷ்ணுவாக இருக்கிறார். ஆகையினால் இந்த பேரண்டம் நிலைத்திருக்கிறது. அண்டாந்தர-சத. மேலும் இந்த பேரண்டத்தினுள் பல பொருள்கள் உள்ளன, நான் சொல்வதாவது, அடையாளங்களும், வஸ்துக்களும். இந்த அணு கூட. சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது அணுவினுள் கூட, அவர், பரமாத்மாவாக, அனைவருடைய உடலினுள்ளும் இருக்கிறார். ஜீவாத்மாக்களின் உடலினுள் மட்டும் அல்ல, ஆனால் பரமாணு, அணுக்குள்ளும் இருக்கிறார். இப்பொது அணு சக்தியைப் பற்றி படித்துக் கொண்டிருக்கிறார்கள். இருப்பினும் சிரமப்படுகிறார்கள். பல முறை பிரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் அவர்களால் அங்கு பகவான், ஸ்ரீ கிருஷ்ணர் இருப்பதை காண முடியவில்லை.

ஆக கிருஷ்ணர் இருப்பு இல்லாமல், நான் சொல்வதாவது, எதுவும் உயிர் வாழ முடியாது. ஆகையினால், கிருஷ்ண உணர்வில் முதிர்ச்சி அடைந்த ஒருவர், கிருஷ்ணரை மட்டும் தான் காண்கிறார். வெளித் தோற்றமல்ல. ஏனென்றால் கிருஷ்ணரின்றி எதுவும் உயிர் வாழ முடியாது. சைதன்ய சரிதாம்ருதத்தில், சொல்லப்பட்டுள்ளது: ஸ்தாவர-ஜன்கம தேகே அங்கே இரண்டு வகையான உயிர்வாழிகள் உள்ளன: அசைபவை மேலும் அசையாதவை. அசையாதவை என்றால் ஸ்தாவர ...மேலும் அசைபவை என்றால் ஜன்கம. ஸ்தாவர-ஜன்கம. மேலும் ஸ்தாவர என்றால் அசையாதவை. ஆக அங்கே இரண்டு வகையான உயிர்வாழிகள் உள்ளன. ஆகையால் நீங்கள் இந்த இரண்டு வகையான உயிர்வாழிகளை காணலாம், சில அசைபவை, சில அசையாதவை. ஆனால் ஒரு மஹா பாகவத இரண்டு உயிர்வாழிகளையும் காண்கிறார், அசைபவை மேலும் அசையாதவை, ஆனால் அவர் அசைபவை மேலும் அசையாதவையை பாக்கவில்லை. அவர் கிருஷ்ணரை பார்க்கிறார். ஏனென்றால் அவருக்கு தெரியும் அதாவது அசைபவை என்றால் உயிர் சக்தி. ஆக உயிர் சக்தி, அதுவும் கிருஷ்ணரின் சக்தி. மேலும் அசையாதவை பௌதிகமாகும். அதுவும் கிருஷ்ணரின் சக்தியே.